மாருதி சுஸுகியை கதிகலங்க வைக்க போகும் புதிய மஹிந்திரா வாகனம்! விற்பனைக்கு தயார்... விலை எவ்வளவு தெரியுமா?
மஹிந்திரா (Mahindra) கார்கள் விற்பனை மாதத்திற்கு மாதம் வெகுவாக அதிகரித்து வருகிறது. மஹிந்திராவின் கார்கள் விற்பனையில் முக்கிய பங்கு வகிக்கும் கார்களுள் ஒன்று தார் (Thar) ஆகும். இருப்பினும், தாரில் 3 கதவுகள் மட்டுமே கொடுக்கப்படுவது சற்று குறைப்பாடாக பார்க்கப்படுகிறது. இதனால், 5 கதவுகளுடன் தார் வாகனத்தை உருவாக்கும் பணியில் மஹிந்திரா ஈடுப்பட்டு வருகிறது. 5-டோர் தார் வாகனம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், இந்த வாகனத்தை சாலைகளில் ஓட்டி பார்த்து சோதனை செய்யும் பணிகளிலும் மஹிந்திரா ஈடுப்பட்டு வருகிறது.
இந்த வகையில், தற்போது மீண்டும் 5-டோர் தார் வாகனம் ஒன்று பொது சாலையில் ஓட்டி பார்த்து சோதனை செய்யப்பட்டுள்ளது. பெங்களூரில் இந்த சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 5-டோர் தார் வாகனத்தின் இந்த ரோடு டெஸ்ட்டிங்கின் போது எடுக்கப்பட்ட படங்கள் நமக்கு கிடைக்க பெற்றுள்ளன. நமது வாசகர் அனில், இந்த புகைப்படங்களை அனுப்பியுள்ளார். இந்த படங்களில், தோற்றம் யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக வாகனம் முழுவதுமாக மறைக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு ஏன், தார் வாகனத்தின் சக்கரங்கள் கூட மறைப்புகளால் மறைக்கப்பட்டுள்ளன. துல்லியமான சோதனை அளவீடுகளுக்காக வாகனத்தை சுற்றிலும் ரேடார்களும், சென்சார்களும் பொருத்தப்பட்டு உள்ளதுபோல் தெரிகிறது. வாகனத்தின் பின்பக்கத்தில் ஸ்பேர் சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது. வாகனத்தின் தோற்றம் யாருக்கும் தெரிந்துவிட கூடாது என மஹிந்திரா மூடி மறைத்தாலும், விற்பனையில் இருக்கும் 3-டோர் தாருக்கும், 5-டோர் தாருக்கும் இடையே பெரியதாக எந்த வித்தியாசமும் இருக்காது.
இதன்படி, 5-டோர் தார் வாகனத்தின் முன்பக்கத்தில் 6-ஸ்லாட் டிசைன் கிரில் வழங்கப்படலாம். தற்போது வெளியாகியுள்ள ஸ்பை படங்களிலும், 6-ஸ்லாட் கிரில் பகுதியை காண முடிகிறது. வாகனத்திற்கு பின்பக்கத்தில் சதுர வடிவில் டெயில்லைட்கள், சக்கரங்களுக்கு மேலே கிளாடிங்குகள் உள்ளதை இந்த படங்களில் காண முடிகிறது.

தொழிற்நுட்ப அம்சங்களை பொறுத்தவரையில், க்ரூஸ் கண்ட்ரோல், ரிமோட் கீலெஸ் எண்ட்ரீ, டேஸ்போர்டில் 7-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டயர் பிரஷர் மானிடரிங் சிஸ்டம், பவர் ஜன்னல் கண்ணாடிகள் உள்ளிட்டவற்றை இந்த புதிய தார் வாகனத்தில் எதிர்பார்க்கிறோம். மேலும் இந்த வாகனத்தில், ஆஃப்-ரோடு பயணங்களுக்காக ரோல்-ரேஜ் கொடுக்கப்படும்.
மற்றப்படி, என்ஜின் ஆப்ஷன்களில் மாற்றம் இருக்காது என்றே நினைக்கிறோம். அதாவது, 3-கதவு தார் வாகனத்தில் வழங்கப்படும் அதே 2.0 லிட்டர் எம்ஸ்டாலியன் டர்போ-பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.2 லிட்டர் எம் ஹாவ்க் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் தான் புதிய 5-டோர் தார் வாகனத்திலும் கொடுக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது.

இந்த என்ஜின் ஆப்ஷன்களுடன் தாரில் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன. புதிய 5-கதவு தார் வாகனத்தின் எக்ஸ்-ஷோரூம் விலைகளை ரூ.16 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சம் வரையில் எதிர்பார்க்கிறோம். மஹிந்திரா நிறுவனம் நீண்ட இடைவெளிக்கு பிறகு 2ஆம் தலைமுறை தார் வாகனத்தை 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி அறிமுகப்படுத்தியது.
அதன்பின், கடந்த ஆண்டுகளில் ஆகஸ்ட் 15ஆம் தேதி சில புதிய கார்களை மஹிந்திரா அறிமுகம் செய்துள்ளது. அதாவது, இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதியை மஹிந்திரா எப்போதும் ஸ்பெஷலானதாக கொண்டாடுகிறது. அந்த வரிசையில், இந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதியில் 5-டோர் தார் வாகனம் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனங்களில் அதிகம் விற்பனை செய்யப்படுபவையாக மஹிந்திரா தார் விளங்குகிறது. மாருதி சுஸுகியின் ஜிம்னி விற்பனையில் இருந்தாலும், மஹிந்திரா தார் வாகனத்தின் விற்பனை தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. 5-டோர் தார் வாகனத்தின் அறிமுகத்தால் மஹிந்திரா தாரின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications









