ஜிம்னிக்கு செக் வைக்க போற 5 டோர் தார் காருக்கு புது பெயரை வச்சுட்டாங்க! இந்த பேருக்காகவே மக்கள் குவிய போறாங்க!

இந்தியர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக மஹிந்திரா தார் (Mahindra Thar) கார் மாடலின் 5 கதவுகள் கொண்ட வெர்ஷன் இருக்கின்றது. இந்த கார் மாடலை வருகின்ற ஆகஸ்டு மாதம் 15 ஆம் தேதி அன்றே மஹிந்திரா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த தகவலை சமீபத்திலேயே நிறுவனம் உறுதிப்படுத்தியது. இந்த நிலையிலேயே, ஆகஸ்டு 15 அறிமுகத்தை முன்னிட்டு தற்போது அந்த காரின் படங்களை முதல் முறையாக மஹிந்திரா நிறுவனம் வெளியீடு செய்திருக்கின்றது. காரின் படங்களை மட்டுமல்ல அதன் அதிகாரப்பூர்வ பெயரையும் நிறுவனம் அறிவித்து இருக்கின்றது.

மஹிந்திரா தார் ராக்ஸ் (Mahindra Thar Roxx) எனும் பெயரிலேயே தார் காரின் 5 கதவுகள் கொண்ட வெர்ஷன் வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த பெயரிலேயே அது சந்தையை களம் காண இருக்கின்றது. முன்னதாக 'அர்மதா' (Aramada) எனும் பெயரிலேயே இக்கார் விற்பனைக்கு வரும் என கூறப்பட்டது.

Mahindra thar roxx

இந்த நிலையிலேயே தார் ராக்ஸ் எனும் பெயரில் 5 கதவுகள் கொண்ட தார் விற்பனைக்கு வர இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த பெயரை உறுதிப்படுத்தும் விதமாகவே தற்போதைய டீசரும் அமைந்திருக்கின்றது. பெயரை போலவே காரையும் மிகவும் ஸ்டைலாக வடிவமைத்திருக்கின்றது மஹிந்திரா நிறுவனம்.

குறிப்பாக, தார் 3 டோர் வெர்ஷனை போலவே அதிக கவர்ச்சியான மற்றும் அதிக முரட்டுத் தனமான தோற்றத்தைக் கொண்டதாக இது காட்சியளிக்கின்றது. இதற்கேற்ப ஆறு ஸ்லாட்டுகளைக் கொண்ட புதிய கிரில் காரின் முன் பக்கத்தில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த அம்சமும், முன் பக்க பம்பரும் தார் ராக்ஸ்-க்கு வேற லெவல் அழகான பிம்பத்தை வழங்கும் வகையில் அமைந்திருக்கின்றன.

இதைத்தொடர்ந்து, சி வடிவ டிஆர்எல்-களுடன் கூடிய வட்ட வடிவ புரஜெக்டர் வகை ஹெட்லேம்ப், 10.25 அங்குல திரை மற்றும் பனோரமிக் சன்ரூஃப் உள்ளிட்ட வசதிகளும் தார் ராக்ஸ் காரில் இடம் பெற இருக்கின்றன. குறிப்பாக, லெவல் அடாஸ் அம்சமும் இதில் இடம் பெற இருப்பதாகக் கூறப்படுகின்றது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக கிரில்லின் மைய பகுதியில் அடாஸ் அம்சத்திற்கான சென்சார்கள் இடம் பெற்றிருப்பதை டீசர் படத்தில் நம்மால் காண முடிகின்றது. எஞ்சினைப் பொருத்த வரை தார் 3 டோர் வெர்ஷனில் வழங்கப்பட்டு இருக்கும் அந்த மோட்டார் ஆப்ஷன்களே இதிலும் எதிர்பார்க்கப்படுகின்றது.

1.5 லிட்டர் டீசல், 2.2 லிட்டர் டீசல் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் ஆகிய ஆப்ஷன்களே 5 கதவுகள் கொண்ட தார் ராக்ஸ் மாடலிலும் வழங்கப்பட இருக்கின்றது. இத்தகைய அம்சங்கள் கொண்ட காரையே மஹிந்திரா நிறுவனம் வெகு விரைவில் இந்தியாவில் வைத்து விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது.

ஏற்கனவே இந்த காருக்கான புக்கிங் பணிகளை மஹிந்திரா கார் விற்பனையாளர்கள் தொடங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால், இது அதிகாரப்பூர்வ புக்கிங் கிடையாது. ஆகஸ்டு 15 அன்றே அதிகாரப்பூர்வமான புக்கிங் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அன்றைய தினமே தார் ராக்ஸ்-இன் விலையும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் மாருதி சுஸுகி ஜிம்னி மற்றும் போர்ஸ் கூர்காவிற்கு மிகப் பெரிய போட்டியாக மாறும். இப்போது வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல்களின்படி மஹிந்திரா தார் ராக்ஸ் ரூ. 15 லட்சம் தொடங்கி ரூ. 25 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மஹிந்திரா தார் காருக்கு மிக சிறப்பான விற்பனை வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதே வரவேற்பையே தார் ராக்ஸ்-ம் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும், இந்த வெர்ஷனும் ஆஃப்-ரோடு மற்றும் லைஃப்ஸ்டைல் பயன்பாட்டிற்கு உகந்த காராகவே தயார் செய்யப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Saturday, July 20, 2024, 17:06 [IST]
English summary
Mahindra thar 5 door will be called the thar roxx here is more details
மேலும்... #mahindra #mahindra thar #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+