மாருதி கோட்டை விட்ட இடத்தை பிடிக்க ரெடியாகும் மஹிந்திரா! இந்த ஒரு கார் போதும் ஜிம்னி காலி!
மஹிந்திரா தார் காரின் 5 டோர் வெர்ஷன் காரான ஆர்மடா என்ற கார் புனேவில் சோதனை செய்யப்படும் போது கேமரா கண்களில் சிக்கி உள்ளது. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது .இந்த காரின் அறிமுகம் எப்பொழுது? இந்த காரின் விலை எவ்வளவு இருக்கும்? இந்த காரில் உள்ள அம்சங்கள் என்னென்ன என்ற விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
மஹிந்திரா நிறுவனத்தின் தார் கார் மக்கள் மத்தியில் பிரபலமான காராக இருக்கிறது. ஒரு ஆஃப்ரோடு எஸ்யூவி காரில் இந்த காரை மக்கள் விரும்பி வாங்கி வருகிறார்கள். இந்தியாவில் தற்போது மூன்று டோர் கொண்ட மஹிந்திரா தார் கார் தான் சிறப்பாக விற்பனையாகி வருகிறது. இதற்கு போட்டியாக மாருதி நிறுவனம் தனது ஜிம்னி காரின் ஐந்து டோர் வெர்ஷனை அறிமுகப்படுத்தி விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில் மஹிந்திரா நிறுவனமும் தனது தார் காரின் ஐந்து டோர் வெர்ஷனை உருவாக்க முடிவு செய்துள்ளது. இந்த காரும் தற்போது தயாராகி உள்ளது. இந்த காருக்கு அந்நிறுவனம் ஆர்மடா என பெயர் வைத்துள்ளார்கள். இந்நிலையில் இந்த மஹிந்திரா தார் ஆர்மடா காரை தற்போது புனே பகுதியில் அந்நிறுவனம் சோதனை செய்து வருகிறது. இதை அங்கிருக்கும் சிலர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
நமக்கு கிடைத்த தகவலின் படி இந்த காரில் 19 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் முன்பக்கத்தில் புதிய கிரில் வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காலில் உள்ள லைட் எல்லாம் எல்இடி லைட்களாக வழங்கப்பட்டுள்ளன. முன்பக்கமும் பின்பக்கமும் புதிய பம்பர் வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த காரில் முக்கியமாக ரிமோட் ப்யூயல் பில்லிங் கேப் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பின்பக்க கண்ணாடிக்கான வைப்பரும் வழங்கப்பட்டுள்ளது. இது இந்த காரின் சிறப்பு அம்சம் என்ன சொல்லலாம் இந்த காரின் உட்புறத்தை பொருத்தவரை 10.25 டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காரில் ஓட்டுநருக்கு வசதியாக முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த மஹிந்திரா 5 டோர் தார் அர்மடா காரின் பாதுகாப்பு அம்சத்தை பொருத்தவரை இதில் இரண்டு அடாஸ் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரின் அளவுகளை பொருத்தவரை 2,750 மிமீ வழங்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள தார் காரை விட 300 மிமீ வீல் பேஸ் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் இன்ஜின் ஆப்ஷனை பொருத்தவரை 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 175 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது.

மற்றொரு இன்ஜின் ஆப்ஷனாக 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படுகிறது. இது 23 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த கார் டூவீல் டிரைவ் மற்றும் ஃபோர் வீல் டிரைவ் என இரண்டு விதமான ஆப்ஷன்களிலும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த காரை ஆஃப்ரோடிலும் அதே நேரம் ஆன் ரோட்டிலும் இயங்கும் வகையில் பயன்படுத்த முடியும்.
மஹிந்திரா நிறுவனம் 3எக்ஸ்ஓ காரை என்ற காரை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. அதற்குப் பிறகு மிகப்பெரிய அறிமுகமாக இந்த ஆர்மடா கார் தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மஹிந்திரா கார் ரூ 11.35 லட்சம் முதல் ரூ 17.60 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இதுவே மஹிந்திரா தார் ஆர்மடா கார் விற்பனைக்கு வரும்போது, ரூபாய் 15 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கார் மார்க்கெட்டில் நேரடி போட்டியாக 5 டோர் கொண்ட ஃபோர்ஸ் கூர்கா 5 டோர் மற்றும் மாருதி சுஸூகி ஜிம்னி ஆகிய கார்களுக்கு போட்டியாக களமிறங்கும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் அடுத்த ஒரு சில மாதங்களில் விற்பனைக்கு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிறுவனம் தற்போது இறுதிக்கட்ட சோதனையில் இந்த தார் அர்மடா காரை வைத்திருப்பதாக தெரிகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனம் இந்த தார் அர்மடா காரை விற்பனைக்கு கொண்டு வரும்பட்சத்தில் மக்கள் மத்தியில் ஒரளவிற்கு வரவேற்பு இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 5 டோர் ஆஃப்ரோடு எஸ்யூவி காரை பொருத்தவரை மாருதி ஜிம்னி காருக்கு எதிர்பார்த்த வரவேற்பில்லை என்பது நமக்கு விற்பனை நிலவரம் மூலம் தெரிகிறது. இந்த காருக்கான வரவேற்ப்பை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









