மாருதிக்கு இந்த விஷயம் தெரிஞ்சா உடனே மூஞ்சை மூடிப்பாங்க! மஹிந்திரா தார் 5 டோர் காரை வாங்க செம போட்டி!

மஹிந்திரா நிறுவனம் தனது தார் காரின் 5 டோர் வெர்ஷனை விரைவில் அறிமுகப்படுத்த உள்ள நிலையில், இதன் தயாரிப்புகள் துவங்க உள்ளது. இந்நிலையில் மஹிந்திரா நிறுவனம் இந்த தயாரிப்புக் கொள்ளளவை திட்டமிட்ட அளவில் இருந்து இரண்டு மடங்கிற்கும் அதிகமான அளவு அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த காருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த அதிகமான அளவு தயாரிப்புக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் பாருங்கள்.

மஹிந்திரா நிறுவனம் கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் முதன்முதலாக தனது ஜிம்னி என்ற 5 டோர் கொண்ட ஆஃப் ரோடு எஸ்யூவி காரை முதன்முதலாக காட்சிப்படுத்தியது. அடுத்த சில மாதங்களில் இந்த கார் விற்பனைக்காக அறிமுகமானதும் பலர் இந்த காரை விரும்பி வாங்கினார்கள். இந்நிலையில் மஹிந்திரா நிறுவனமும் தனது தார் காரின் 5 டோர் வெர்ஷனை களம் இறக்க முடிவு செய்தது.

Mahindra Thar armada production

அதன்படி தற்போது மஹிந்திரா நிறுவனம் தனது தார் காரின் தற்போது சோதனை செய்து விற்பனைக்கு வெளியிட தயாராகி வருகிறது. இதற்காக இந்த காரின் தயாரிப்பை துவங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக மாதம் 2500 வாகனங்களை மட்டுமே தயாரிக்க திட்டமிட்டு இருந்தது. அதன்படி ஒரு மாதத்திற்கு 30000 கார்களை மட்டுமே தயாரிக்க திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் 5 டோர் கொண்ட மஹிந்திரா தார் கார் விற்பனைக்கு வந்தால் எந்த அளவிற்கு விற்பனையாகும் என டீலர் ஷிப்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது ஏற்கனவே இந்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக இருப்பதாகவும், வாடிக்கையாளர்கள் பலர் இந்த கார் எப்பொழுது வரும் என டீலர்களிடம் சென்று கேட்டு வருவதாகவும், இந்த கார் வந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி பலர் கேட்டு வைத்திருப்பதாகவும் பதில் வந்துள்ளது.

Mahindra Thar armada production

இதை ஒப்பிட்டு பார்க்கும்போது மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டதை விட இந்த காரின் விற்பனை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கிறது. இதனால் இந்த காரின் தயாரிப்பு திறனை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. முதலில் 2500 கார்களை தினந்தோறும் தயாரிக்க திட்டமிட்டு, இந்நிறுவனம் தற்போது இதை 6000 ஆக உயர்த்தி உள்ளது. இதன் மூலம் இந்த கார் ஒரு மாதத்திற்கு 70 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் தயாராக உள்ளது.

தற்போது மஹிந்திரா நிறுவனத்தின் கார் கார் 3 டோர் கொண்ட வெர்ஷன் மட்டுமே விற்பனையாகி வருகிறது. இதில் குறைவான அளவிலான பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும். முன்பக்க கதவு வழியாகவே பயணிகள் காருக்குள் உள்ளே செல்லும் வழிமுறை இருக்கிறது. மேலும் இந்த காரின் பூட் வசதியை பெரிதாக வைத்திருப்பதும், பெரிய சிக்கலாக இருந்தது. இந்நிலையில் இந்த 5 டோர் வெர்ஷன் கார் குடும்பத்துடன் பயணிக்கும் எஸ்யூவி காராக விற்பனைக்கு வருகிறது.

இந்தியாவில் பெரும்பாலான குடும்பத்தில் ஒரு கார் மட்டுமே வைத்திருக்கிறார்கள். அந்த ஊருக்கார் அவர்களது அத்தனை தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். தினந்தோறும் பயன்பாட்டிற்கும் சரி வார இறுதி விடுமுறை டிரிப்பிற்கும் சரி அல்லது நீண்ட தூ பயணம் செல்ல வேண்டும் என்றாலும் சரி, அந்த காரை தான் பயன்படுத்த வேண்டும் என விரும்புகிறார்கள்.

இந்நிலையில் ஆஃப் ரோடிங் பயணத்தை விரும்பும் குடும்பங்களுக்கு ஏற்ற காராக இந்த மஹிந்திரா நிறுவனத்தின் 5 டோர் கொண்ட கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். இந்த காரில் பல்வேறு பிரிமியம் அம்சங்கள் இருக்கிறது என அந்நிறுவனம் கூறியுள்ளது. முக்கியமாக இதில் 19இன்ச் கொண்ட டைமண்ட் கட் அலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளது. இதுபோக உள்ளே இரண்டு 10.25இன்ச் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கண்ட்ரோல் ஆகியவை உள்ளன.

இதுபோக மிட் வேரியண்டிலேயே சிங்கிள் பேன் சன் ரூஃப் உள்ளது. பாதுகாப்பை பொறுத்தவரை அடாஸ் லெவல் 2 சிஸ்டம் உற்பத்தப்பட்டுள்ளது. இதுபோக பிரீமியம் சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜிங், வெண்டிலேட்டட் சீட்டுகள், கனெக்டிவிட்டி அம்சங்கள் உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் இந்த காரில் இருக்கிறது.

இந்த காரில் உள்ள இன்ஜினை பொறுத்தவரை 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் பேஸ் வேரியண்டிற்கும், டாப் வேரியண்டிற்கு 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே இன்ஜின் தான் 3 டோர் வெர்ஷனிலும் இருக்கிறது. இது மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷன் உடன் விற்பனைக்கு வர வாய்ப்பு இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனம் தனது தார் காரின் அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்த செக்மெண்டில் உள்ள வாடிக்கையாளர்களை தவிர ஒரு முக்கிய முயற்சியை கையில் எடுத்துள்ளது. மஹிந்திரா தார் காருக்கு ஏற்கனவே நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில் அதன் நீட்டிக்கப்பட்ட வெர்ஷனுக்கு இன்னும் நிச்சயமாக மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கலாம். இது தற்போது அந்நிறுவனம் தயாரிப்பை அதிகப்படுத்தியதன் மூலமே தெளிவாக தெரிகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, June 29, 2024, 12:07 [IST]
English summary
Mahindra thar armada production 6000 month unofficial bookings dealer
மேலும்... #mahindra #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+