கொம்பன் எறங்கீட்டான்... போட்டி நிறுவனங்களின் தலையில் இடியை இறக்கிய மஹிந்திரா... டெலிவரி தொடங்க போகுது...

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மஹிந்திரா தார் (Mahindra Thar). இது எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இதன் ஸ்பெஷல் எடிசன் மாடல் ஒன்றை மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. மஹிந்திரா தார் எர்த் எடிசன் (Mahindra Thar Earth Edition) என்ற பெயரில், இந்த புதிய மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன் ஆரம்ப விலை 15.40 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். மஹிந்திரா தார் எர்த் எடிசன் மாடலில், 2.0 லிட்டர் பெட்ரோல் (Petrol) மற்றும் 2.2 லிட்டர் டீசல் (Diesel) இன்ஜின் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

Mahindra Thar Earth Edition

இந்த இன்ஜின்கள் உடன், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வழக்கமான மஹிந்திரா தார் உடன் ஒப்பிடும்போது வேறுபடுத்தி காட்டும் வகையில் டிசைனில் ஒரு சில மாற்றங்களை எர்த் எடிசன் பெற்றுள்ளது. எர்த் எடிசன் பேட்ஜ்களை இதற்கு ஒரு உதாரணமாக கூற முடியும்.

மஹிந்திரா தார் எர்த் எடிசனின் ஆரம்ப விலை 15.40 லட்ச ரூபாயாக இருக்கும் நிலையில், டாப் வேரியண்ட்டின் விலை 17.60 லட்ச ரூபாயாக இருக்கிறது. இந்த காரின் 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 152 ஹெச்பி பவர் மற்றும் 300 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

Mahindra Thar Earth Edition Interior

மறுபக்கம் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 132 ஹெச்பி பவர் மற்றும் 300 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் மஹிந்திரா தார் எர்த் எடிசன் மாடலில் பல்வேறு அதிநவீன வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. எனவே வழக்கமான மஹிந்திரா தார் எஸ்யூவியை போல், எர்த் எடிசனும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் மாருதி சுஸுகி ஜிம்னி (Maruti Suzuki Jimny) மற்றும் ஃபோர்ஸ் கூர்கா (Force Gurkha) ஆகிய கார்களுடன், மஹிந்திரா தார் போட்டியிட்டு வருகிறது. இந்த கார்களுக்கு மஹிந்திரா தார் ஏற்கனவே சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறது.

இந்த சூழலில் களமிறங்கியுள்ள மஹிந்திரா தார் எர்த் எடிசன், மாருதி சுஸுகி ஜிம்னி மற்றும் ஃபோர்ஸ் கூர்கா ஆகிய கார்களுக்கு இன்னும் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. தற்போது ஷோரூம்களுக்கு வர தொடங்கியுள்ளதால், மஹிந்திரா தார் எர்த் எடிசனின் டெலிவரி பணிகள் விரைவில் தொடங்கப்படலாம்.

இது மஹிந்திரா தார் எர்த் எடிசன் மாடலுக்காக காத்து கொண்டுள்ள இந்திய வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எர்த் எடிசன் மாடலின் டெலிவரி பணிகள் தொடங்கப்பட்ட பிறகு, மஹிந்திரா தார் எஸ்யூவி காரின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை மேலும் உயரும் என நாங்கள் கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Friday, March 8, 2024, 13:32 [IST]
English summary
Mahindra thar earth edition reaches dealerships all details
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+