உருவம் இவ்ளோ பெருசா இருந்தும் மைலேஜை இவ்ளோ தருதா!.. மஹிந்திரா தார் ராக்ஸ் காரின் மைலேஜ் விபரம்!
மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மஹிந்திரா (Mahindra) நிறுவனம், தார் ராக்ஸ் (Thar Roxx) எஸ்யூவி ரக கார் மாடலை இந்த மாதத்தின் மத்தியில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த 3 டோர் தார் கார் மாடலின் 5 கதவுகள் கொண்ட வெர்ஷனே இதுவாகும். இந்த வெர்ஷன் சந்தையில் விற்பனையில் இல்லாமலிருந்தது மிகப் பெரிய குறையாகவே இருந்து வந்தது. இந்த குறையையே மஹிந்திரா சமீபத்தில் போக்கியது. ரூ. 12.99 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கும்.
இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த விலை பலரின் கவனத்தைக் கவரக் கூடியதாக அமைந்திருக்கின்றது. இந்த நிலையிலேயே மற்றுமொரு கவரக் கூடிய விஷயமாக புதிய மஹிந்திரா தார் ராக்ஸ் எஸ்யூவி-யின் மைலேஜ் திறன் பற்றிய விபரங்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

இந்தியாவில் தார் ராக்ஸ் எஸ்யூவி இரண்டு விதமான எஞ்சின் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும் 2.2 லிட்டர் டிஜிடிஐ பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் சிஆர்டிஐ டீசல் ஆகியவையே அவை ஆகும். இரண்டு மோட்டாரிலும் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் டார்க் கன்வெர்டர் ஆகிய கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
இதில், பெட்ரோல் மோட்டார் ஒரு லிட்டருக்கு 12.40 கிமீ மைலேஜையும், டீசல் எஞ்சின் அதிகபட்சமாக ஒரு லிட்டருக்கு 15.20 கிமீ மைலேஜையும் வழங்கும். இது அராய் சான்றின்படி தெரிய வந்த மைலேஜ் விபரம் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேவேளையில், நிஜ வாழ்க்கை பயன்பாட்டின்போது இந்த தார் ராக்ஸ் சற்றே குறைவான மைலேஜையே வழங்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அந்தவகையில், புதிய தார் ஒரு லிட்டருக்கு 10.82 கிமீ முதல் 15.44 கிமீ வரையில் மைலேஜ் தரும். நகர்புறத்தைக் காட்டிலும் ஹை-வேக்களில் பயன்படுத்தும்போது அதிக மைலேஜை இந்த காரில் பெற முடியும். அதேநேரத்தில், ஹைவே மற்றும் நகரம் என இரண்டிலும் வைத்து இந்த காரை பயன்படுத்தும்போது 11.97 கிமீ வரையில் மட்டுமே மைலேஜைப் பெற்றுக் கொள்ள முடியும்.
மஹிந்திரா நிறுவனம் இந்த காரை ஓரளவு சிறப்பான மைலேஜை தரக் கூடிய வாகனமாக தயாரித்திருப்பது இதன் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது. இதேபோல், இந்த கார் அதிக சிறப்பம்சங்கள் தாங்கிய வாகனமாகவும் மஹிந்திரா தயாரித்து இருக்கின்றது. அந்தவகையில், அடாஸ் எனும் அம்சம்கூட இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இந்த அடாஸ் அம்சத்தின் வாயிலாக ஆபத்தான சூழல்களைத் தவிர்த்துக் கொள்ள முடியும். அதாவது, மோதல் ஏற்படும் முன்னரே எச்சரித்தல், ஆட்டோமேட்டிக் எமர்ஜென்சி பிரேக்கிங், ஒரே பாதையை தொடர்வதற்கான உதவி, ஹை பீம் அசிஸ்ட் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இதுபோன்று இன்னும் பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த மஹிந்திரா நிறுவனம், தார் ராக்ஸ் எஸ்யூவி காரில் வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், தார் ராக்ஸில் ஒயர்லெஸ் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே இணைப்பு வசதிக் கொண்ட 10.25 அங்குல இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், பில்டு-இன் அலெக்ஸா உடன் வழங்கப்பட்டு இருக்கின்றது.
தொடர்ந்து, அட்ஜெஸ் செய்யும் வசதிக் கொண்ட வெண்டிலேட்டட் முன் இருக்கைகள், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமரா, சிங்கிள்-பேன் எலக்ட்ரிக் சன்ரூஃப் மற்றும் ஆட்டோ ஹோல்ட் வசதிக் கொண்ட எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் போன்ற சிறப்பு வசதிகளையும் இந்த கார் தன்னுள் தாங்கி இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தார் கார் மாடலுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே தார் ராக்ஸ் 5 கதவுகள் கொண்ட வெர்ஷனும் நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. இதற்கும் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








