ஷோரூம்களில் கம்பீரமாக நிற்கும் புதிய மஹிந்திரா வாகனம்... யாருக்கு காத்திருக்கோ!!

மஹிந்திரா தார் ராக்ஸ் (Mahindra Thar ROXX), மஹிந்திராவின் புத்தம் புதிய வாகனம். இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஆஃப்-ரோடு வாகனமான மஹிந்திரா தாரின் 5-கதவு வெர்சனாக தார் ராக்ஸ் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதியில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வாகனத்திற்கான புக்கிங்குகள் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், தார் ராக்ஸ் வாகனங்களை டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு கொண்டுவரும் பணிகள் இந்தியா முழுவதும் துவங்கப்பட்டு உள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள படங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

எந்தவொரு சாலைக்கும் கொண்டு செல்லக்கூடிய ஆஃப்-ரோடு வாகனங்களுக்கான மார்க்கெட் நம் இந்தியாவில் எப்போதுமே சிறப்பாக இருந்து வருகிறது. இதனை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக மஹிந்திரா நிறுவனம் விற்பனை செய்துவரும் வாகனம் தான் தார் ஆகும். மாருதி சுஸுகி ஜிப்ஸிக்கு போட்டியாக முதல் தலைமுறை மஹிந்திரா தார் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், 2ஆம் தலைமுறை தார் வாகனம் கடந்த 2020ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது.

mahindra thar roxx at dealerships

மஹிந்திரா தாரில் 3 கதவுகள் மட்டுமே வழங்கப்படுவது சற்று அசவுகரியமாக உள்ளதாக வாடிக்கையாளர்கள் சிலர் கூறியதை அடுத்து 5 கதவுகளுடன் தார் வாகனத்தை உருவாக்க மஹிந்திரா ஆரம்பித்தது. அதுமட்டுமின்றி, மாருதி சுஸுகி நிறுவனம் 5-கதவுகளுடன் ஜிம்னியை போட்டியாக அறிமுகப்படுத்தியது. இதற்கு மத்தியில் 5-கதவு தார் வாகனம் 'தார் ராக்ஸ்' என்கிற பெயரில் கடந்த ஆகஸ்ட் 15இல் அறிமுகம் செய்யப்பட்டது.

புதிய தார் ராக்ஸ் வாகனத்தின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.12.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருப்பப்படும் வாடிக்கையாளர்கள் அருகில் உள்ள மஹிந்திராவின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப் ஷோரூம் மையத்தில் தார் ராக்ஸை முன்பதிவு செய்யலாம். இந்த நிலையில், தார் ராக்ஸ் வாகனங்களை டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு கொண்டுவரும் பணிகளும் துவங்கப்பட்டுள்ளதால், இந்த வாகனத்தை புக் செய்தவர்கள் விரைவில் டெலிவிரி பெறலாம்.

mahindra thar roxx at dealerships

தார் ராக்ஸ் வாகனங்கள் இந்தியா முழுவதும் உள்ள டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு வர துவங்கியுள்ளதை உறுதி செய்யும் விதமாக, டீலர்ஷிப் ஷோரூம் ஒன்றினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வெள்ளை நிறத்திலான தார் ராக்ஸ் வாகனத்தின் படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. செப்டம்பர் 14ஆம் தேதியில் இருந்து தார் ராக்ஸ் வாகனத்தை புக் செய்தவர்களுக்கு டெஸ்ட் டிரைவ் கொடுக்கும் பணிகள் துவங்கப்பட உள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே ஷோரூம்களுக்கு இந்த வாகனங்கள் வர துவங்கியுள்ளன.

டெஸ்ட் டிரைவ்களை தொடர்ந்து அக்டோபர் 3ஆம் தேதியில் இருந்து இந்த வாகனத்தின் டெலிவிரிகள் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 3-கதவு தார் வாகனத்தை காட்டிலும் 5-கதவு தார் கூடுதல் நீளமானது. அதுமட்டுமின்றி, தோற்றத்திலும், தொழிற்நுட்ப அம்சங்களிலும் புதுமையானதாக தார் ராக்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி, புதிய தார் ராக்ஸில் முக்கிய அம்சமாக லெவல்-2 அடாஸ் வழங்கப்பட்டுள்ளது.

mahindra thar roxx at dealerships

இதுமட்டுமின்றி, பெரிய அளவில் பனோராமிக் சன்ரூஃப், பெரிய இன்ஃபோடெயின்மெண்ட் திரை, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் பேனல், வயர்லெஸ் மொபைல் போன் சார்ஜர், 360-டிகிரி கேமரா மற்றும் பிரீமியம் தரத்திலான மியுசிக் சிஸ்டம் உள்ளிட்டவையும் தார் ராக்ஸில் வழங்கப்படுகின்றன. இந்த வாகனத்தை பெட்ரோல் அல்லது டீசல் என்ஜின் உடன் வாங்கலாம்.

2.0 லிட்டர் டிஜிடிஐ பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் சிஆர்டிஐ டீசல் என்பன அவை ஆகும். இவற்றுடன் மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை பெறலாம். 3-கதவு தார் வாகனத்தை போன்று, 5-கதவு தார் வாகனமும் பின் சக்கர டிரைவ் மற்றும் ஆல்-வீல் டிரைவ் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட உள்ளது. இதில், பின் சக்கர டிரைவ் சிஸ்டத்துடன் கிடைக்கும் தார் ராக்ஸ் வாகனத்தின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே தற்போதைக்கு அறிவிக்கப்பட்டு உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 3-கதவு தார் உடன் ஒப்பிடுகையில் முற்றிலும் புதிய வாகனமாக தார் ராக்ஸ் உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாகவே, தார் ராக்ஸை வாங்குவதற்கு நிறைய பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். அத்தகையவர்களுள் பலர் ஏற்கனவே இந்த வாகனத்தை புக் செய்ய ஆரம்பித்துவிட்டனர். அவர்களுக்கு நல்ல செய்தியாக, தார் ராக்ஸ் வாகனங்கள் டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு கொண்டுவரும் பணிகள் துவங்கப்பட்டு உள்ளன.

Source: Carwale

More from DriveSpark

Article Published On: Monday, September 9, 2024, 22:14 [IST]
English summary
Mahindra thar roxx 5 door arrives to dealership showrooms check all details here
மேலும்... #mahindra #Mahindra Thar Roxx #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X