ரூ.21,000 இப்போதைக்கு இருந்தால் மட்டும் போதும்!! அடுத்த மாசமே டெலிவிரி எடுத்திடலாம்...

மஹிந்திரா தார் ராக்ஸ் (Mahindra Thar ROXX) இந்த 2024ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கார் அறிமுகங்களுள் ஒன்று. ஏற்கனவே விற்பனையில் உள்ள மஹிந்திரா தார் 3-கதவு வாகனத்தின் புதிய 5-கதவு வெர்சனாக தார் ராக்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட தார் வாகனத்திற்கான முன்பதிவுகள் வருகிற அக்டோபட்ர் மாதத்தில் இருந்து துவங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில், அக்.3 தேதியில் இந்த புதிய மஹிந்திரா வாகனத்தை புக் செய்வதற்கான டோக்கன் தொகை குறித்த விபரங்கள் கிடைத்துள்ளன. அவற்றை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மஹிந்திரா தார் வாகனத்திற்கு மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மாருதி சுஸுகி ஜிம்னியால் கூட தார் வாகனத்தின் விற்பனையை தடுக்க முடியவில்லை. மாதந்தோறும் ஆயிரக்கணக்கிலான மஹிந்திரா தார் வாகனங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் மூலம் கிடைத்த தைரியத்தில், தார் வாகனத்தின் 5-கதவு வெர்சனை அறிமுகம் செய்யும் பணிகளில் மஹிந்திரா இறங்கியது.

thar roxx token amount revealed

இதற்கு முன்பு வரையில் விற்பனையில் இருந்தது 3-கதவு தார் ஆகும். 3-கதவு தாரும் தொடர்ந்து விற்பனையில் இருக்க உள்ளது. மஹிந்திரா நிறுவனம் ஒவ்வொரு வருடமும் சுதந்திர தினத்தின்போது ஏதேனும் ஒரு புதிய வாகனத்தை அறிமுகம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளது. அந்த வரிசையில் இந்த வருடத்தில் 5-கதவுகளை கொண்ட தார் வாகனம் 'தார் ராக்ஸ்' என்கிற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது.

அறிவிக்கப்பட்டதை போல், தார் ராக்ஸ் வாகனத்திற்கான புக்கிங்குகள் அக்டோபர் 3ஆம் தேதியில் இருந்து துவங்கப்பட உள்ளன. இந்த வாகனத்தை புக் செய்வதற்கான டோக்கன் தொகை ஆனது ரூ.21,000ஆக வசூலிக்கப்பட உள்ளது. அதாவது, ரூ.21,000 இருந்தால் புதிய தார் ராக்ஸ் வாகனத்தை அக்.3இல் இருந்து முன்பதிவு செய்துக்கொள்ள முடியும். தார் ராக்ஸ் வாகனத்தின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.12.99 லட்சத்தில் இருந்து நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

thar roxx token amount revealed

ஆஃப்-ரோடு பயணங்களுக்கான 4x4 டிரைவ் சிஸ்டத்துடன் கிடைக்கும் தார் ராக்ஸ் வாகனத்தின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.18.79 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன. 2.0 லிட்டர் டர்போ, இன்லைன்-4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் அல்லது 2.2 லிட்டர் டர்போ, இன்லைன்-4 சிலிண்டர் டீசல் என்ஜின் உடன் இந்த வாகனத்தை வாங்கலாம். அதேபோல், கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுக்கு 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை பெறலாம்.

கூடுதலாக இரு கதவுகள் சேர்க்கப்பட்டுள்ளதால், அதற்கேற்ப தார் ராக்ஸ் வாகனத்தின் நீளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தார் ராக்ஸ் வாகனத்திற்கு உள்ளேயும் லக்சரி தோற்றம் கொண்டுவரப்பட்டு உள்ளது. மேலும், வாகனத்தின் சஸ்பென்ஷன் செட்-அப்பும் கூடுதல் எடையை தாக்குவதற்கு ஏற்ப மற்றும் மென்மையான பயணத்தை வழங்கும் வகையில் ட்யூன் செய்யப்பட்டுள்ளது.

thar roxx token amount revealed

புதிய தார் ராக்ஸ் வாகனத்திற்கு உள்ளே, வரவேற்கும் விதமாக வண்ண விளக்குகளும், அட்வான்ஸ்டு டெக்னாலஜிகளும் இடம்பெற்றுள்ளன. டேஸ்போர்டில் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்திற்கான திரை பெரியதாக்கப்பட்டுள்ளது. அடாஸ் (ADAS), டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், பனோராமிக் சன்ரூஃப் உள்ளிட்டவை புதியதாக சேர்க்கப்பட்டுள்ளன.

வாகனத்தின் நீளம் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், வழக்கம்போல் இது ஒரு 5-சீட்டர் எஸ்யூவி கார் ஆகும். 3-கதவு தார் வாகனத்திலும் 5 பேர் அமர்ந்து பயணம் செய்யலாம். ஆனால், போதிய கதவுகள் இல்லாததால் சற்று இறுக்கமாக இருக்கும். இந்த ஒரு குறை மட்டும் தான் மஹிந்திரா தாரில் வாடிக்கையாளர்கள் கூறிவந்த விஷயமாகும். அதுவும் தற்போது தார் ராக்ஸ் மூலமாக நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரூ.21,000 என்பது நிறைய பேரால் உடனடியாக பெறக்கூடிய தொகையே. புக் செய்தவர்களுக்கு மஹிந்திரா தார் ராக்ஸ் வாகனங்கள் டெலிவிரி கொடுக்கும் பணிகள் அக்டோபர் இறுதியில் இருந்து துவங்கலாம் என எதிர்பார்க்கிறோம். அதேபோல், முதலாவதாக தார் ராக்ஸ் வாகனத்தின் விலைமிக்க டாப் வேரியண்ட்டை டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Friday, September 27, 2024, 8:00 [IST]
English summary
Mahindra thar roxx 5 door booking token amount revealed check all details here
மேலும்... #mahindra #Mahindra Thar Roxx #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X