இந்த மாதிரியான மஹிந்திரா வாகனத்தில் கூட சன்ரூஃப்? மாருதி கடையை சாத்திட்டு கிளம்ப வேண்டியதுதான்!!

மஹிந்திரா தார் ராக்ஸ் (Mahindra Thar ROXX), மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்துள்ள புத்தம் புதிய 5-டோர் ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனம். ஏற்கனவே விற்பனையில் இருக்கும் 3-கதவு மஹிந்திரா தாரின் 5-டோர் வெர்சனாக கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. ரூ.12.99 லட்சத்தில் இருந்து ரூ.20.49 லட்சம் வரையில் தார் ராக்ஸின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. 5-கதவு தார் ராக்ஸில் வழங்கப்பட்டுள்ள நிறைய அம்சங்கள் 3-கதவு தார் வாகனத்தில் கிடைப்பதில்லை. அவை என்னென்ன என்பதை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

அடாஸ் (ADAS): தார் ராக்ஸ் வாகனத்தில் லெவல்-2 அடாஸ் வழங்கப்பட்டு உள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரில் வழங்கப்பட்டு வரும் நிறைய வசதிகள் புதிய தார் ராக்ஸில் வழங்கப்பட்டுள்ளன. அவற்றுள் அடாஸ் ஒன்றாகும். அடாஸ் மூலமாக மோதலை ஏற்பட போவதை எச்சரிக்கும் வசதி, ஆட்டோமேட்டிக் எமர்ஜென்சி பிரேக்கிங், ஒரே பாதையை தொடர்வதற்கான உதவி, ஹை பீம் அசிஸ்ட் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளை பெறலாம்.

mahindra thar roxx 5-door features

கேபின் அலங்கரிப்புகள்: புதிய தார் ராக்ஸ் வாகனத்தில் வெள்ளை நிறத்திலான கேபின் வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இந்த வாகனத்தின் உட்புறம் லக்சரியாக தோற்றத்தில் காட்சியளிக்கிறது. அதுவே, 3-கதவு தாரில் முழுவதுமாக கருப்பு நிறத்தில் கேபின் வழங்கப்படுகிறது. அத்துடன், எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ் செய்யக்கூடிய வெண்டிலேட்டட் முன் இருக்கைகள் போன்ற வசதிகளும் தார் ராக்ஸில் இடம்பெற்றுள்ளன.

பெரிய அளவிலான இன்ஃபோடெயின்மெண்ட் திரை: தார் ராக்ஸில் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளேவை ஏற்கக்கூடிய இன்ஃபோடெயின்மெண்ட் திரை பெரிய அளவில் 10.25 இன்ச்சில் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், பில்டு-இன் அலெக்ஸா உடன் அட்ரெனாக்ஸ் கனெக்ட்டட் கார் ஃபங்க்‌ஷன்களையும் தார் ராக்ஸ் கொண்டுள்ளது.

mahindra thar roxx 5-door features

அட்வான்ஸ்டு பாதுகாப்பு அம்சங்கள்: 360-டிகிரி கேமரா, ஓட்டுனரால் பார்க்க முடியாத பகுதிகளை கண்காணிக்கும் வசதி மற்றும் முன்பக்கமாக பார்க் செய்வதற்கு உதவியாக சென்சார்கள் உள்ளிட்டவை தார் ராக்ஸில் வழங்கப்பட்டுள்ளன. இவை மஹிந்திராவின் புதிய எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரிலும் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை 3 கதவு தார் வாகனத்தில் பெற முடியாது.

டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர்: இன்ஃபோடெயின்மெண்ட் திரையை போன்று, ஓட்டுனருக்கு தேவையான விபரங்களை வழங்கக்கூடிய இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரையும் தார் ராக்ஸ் வாகனத்தில் 10.25 இன்ச்சில் வழங்கப்படுகிறது. மேலும், 3-கதவு தாரை காட்டிலும் அதிநவீன டிஸ்பிளே தார் ராக்ஸின் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்கு வழங்கப்பட்டுள்ளது.

mahindra thar roxx 5-door features

சன்ரூஃப் ஆப்ஷன்ஸ்: தார் ராக்ஸ் வாகனத்தில் இரு விதமான சன்ரூஃப் ஆப்ஷன்ஸ் வழங்கப்படுகிறது. அவற்றுள் ஒன்று, எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ் செய்யக்கூடிய சிங்கிள்-பேன் எலக்ட்ரிக் சன்ரூஃப் ஆகும். மற்றொன்று, பெரிய அளவிலான ட்யூயல்-பேன் எலக்ட்ரிக் பனோராமிக் சன்ரூஃப் ஆகும். 3-கதவு தாரில் சன்ரூஃப் எதுவும் வழங்கப்படுவதில்லை. ஆனால், முழுவதுமாக 3-கதவு தாரின் சாஃப்ட்-டாப் வேரியண்ட்டில் மேற்கூரையை நீக்க முடியும்.

எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக்: தார் ராக்ஸ் வாகனத்தின் விலை குறைவான வேரியண்ட்களில் மேனுவலாக பயன்படுத்தக்கூடிய ஹேண்ட் பிரேக் வழங்கப்படுகிறது. அதேநேரம், டாப் வேரியண்ட்டில் ஆட்டோ-ஹோல்ட் ஃபங்க்‌ஷன் உடன் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் கொடுக்கப்படுகிறது. இதன் மூலமாக, பொத்தானை அழுத்தி வாகனத்தை நிறுத்தலாம்.

mahindra thar roxx 5-door features

பிரீமியம் ஆடியோ சிஸ்டம்: ஹர்மன் கார்டன் நிறுவனத்தின் பிரீமியம் தரத்திலான சவுண்ட் சிஸ்டம் தார் ராக்ஸில் வழங்கப்பட்டு உள்ளது. இந்த சிஸ்டத்தில் 8 ஸ்பீக்கர்கள் மற்றும் சப்-வூஃப்பர் வழங்கப்படுகிறது. மேலும், பயனர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப வெளிவரும் சத்தத்தை தீர்மானித்துக் கொள்ளலாம்.

எல்இடி லைட் செட்-அப்: புதிய தார் ராக்ஸ் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள அனைத்து விளக்குகளும் எல்இடி தரத்திலானவை ஆகும். வாகனத்தின் முன்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள C-வடிவிலான டி.ஆர்.எல்-கள், புரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், ஃபாக் விளக்குகள், டர்ன் இண்டிகேட்டர்கள், டெயில்லேம்ப்கள், மற்றும் வாகனத்தின் பின்பக்கத்தில் பொருத்தப்படும் 'ஸ்டாப்' விளக்கு கூட எல்இடி தரத்தில் உள்ளன.

mahindra thar roxx 5-door features

இதர அம்சங்கள்: தார் ராக்ஸ் வாகனத்தை உங்களால் பொத்தான் மூலமாக ஸ்டார்ட்/ ஸ்டாப் செய்ய முடியும். 3-கதவு தாரில் வழங்கப்படுவதை காட்டிலும் பெரிய அளவில் 19 இன்ச்சில் அலாய் சக்கரங்கள் தார் ராக்ஸில் வழங்கப்படுகின்றன. மேலும், இந்த வாகனத்தில் பெரிய அளவில் பூட் ஸ்பேஸ் கிடைக்கும். பின் மேசை இருக்கை வரிசையை 60:40 விகிதத்தில் பிரித்து மடக்கிக் கொள்ள முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா தார் வாகனத்தை வாங்க திட்டமிட்டு வருபவர்களுள் பலர், கூடுதல் நீளத்திற்காகவும், அதிக இடவசதிக்காகவும் தார் ராக்ஸ் வாகனத்தை வாங்குவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், இரண்டிற்கும் விலையில் பெரியதாக வித்தியாசமில்லை. அதுமட்டுமின்றி, தார் ராக்ஸ் ஆனது நிறைய அட்வான்ஸ்டு தொழிற்நுட்ப வசதிகள் உடன் மாடர்ன் தரத்திலான வாகனமாக உருவாக்கப்பட்டு உள்ளது.

More from DriveSpark

Article Published On: Sunday, August 25, 2024, 23:51 [IST]
English summary
Mahindra thar roxx 5 door features that over 3 door thar check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X