இதோட முன் பக்க அழகை பார்த்து எல்லாரும் பைத்தியம் பிடிச்சு அலைய போறாங்க.. ஹெட்லைட்டே செம்ம அசத்தலா இருக்கே!
இந்தியாவின் புகழ் பெற்ற எஸ்யூவி (SUV) கார் தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா (Mahindra), இன்னும் ஒரு சில தினங்களில் தார் ராக்ஸ் (Thar Roxx) கார் மாடலை நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்தியர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக ஐந்து கதவுகள் கொண்ட தார் இருக்கின்றது. இதுவே தார் ராக்ஸ் என்கிற பெயரில் சந்தையைக் களம் காண இருக்கின்றது. ஏற்கனவே இந்த காரின் வருகையை எதிர்நோக்கி கார் ஆர்வலர்கள் பலர் மிக தீவிரமாகக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த மாதிரியான சூழலிலேயே அக்காரின் மீது கூடுதல் கவனத்தை ஈர்க்கின்ற வேலையை மஹிந்திரா நிறுவனம் பார்த்துக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில், தார் ராக்ஸ் பற்றிய சுவாரஷ்ய தகவல்களை சமீப சில நாட்களாகவே நிறுவனம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியிட்ட வண்ணம் இருக்கின்றது. அந்தவகையில், தற்போதும் ஓர் காரியத்தை மஹிந்திரா நிறுவனம் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக செய்திருக்கின்றது.

இம்முறை தார் ராக்ஸ் கார் மாடலின் முன் பக்க படத்தையே நிறுவனம் வெளியிட்டு இருக்கின்றது. காரின் முன் பக்கத்தை மிக தெளிவாக தெரியும்படி அந்த படம் இருக்கின்றது. முன்னதாக, டீசர் வாயிலாக இந்த காரின் அங்கங்களை கஞ்சத் தனமாக வெளிக்காட்டி வந்த மஹிந்திரா, தற்போது அதன் முன் பக்கத்தை முழுசா வெளியீடு செய்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
மேலும், நிறுவனத்தின் இந்த செயலின் வாயிலாக தார் ராக்ஸ் காரின் முன் பக்கம் எந்த அளவிற்கு அழகானதாக தயார் செய்யப்பட்டு இருக்கின்றது என்பது தெரிய வந்திருக்கின்றது. 3 டோர்களைக் கொண்ட தார் கார் மாடலைக் காட்டிலும் மிக மிக அழகானதாக தார் ராக்ஸ் தயார் செய்யப்பட்டு இருப்பதற்கு சான்றாக அதன் முன் பக்கம் அமைந்திருக்கின்றது.
முற்றிலும் மாறுபட்ட கிரில், சி வடிவ டிஆர்எல்-லைக் கொண்ட ஹெட்லைட், பனி மின் விளக்கு, குட்டியான இன்டிகேட்டர் ஆகியவை இந்த காரின் முன் பக்கத்திற்கு அதிக கவர்ச்சியை சேர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. தொடர்ந்து கட்டுமஸ்தான தோற்றத்தை முன் பக்கத்திற்கு வழங்கும் விதமாக மிகவும் முரட்டுத் தனமான பம்பர் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
மேலும், தார் என்கிற எழுத்துக் கொண்ட ரியர் வியூ கண்ணாடிகளும் இந்த காரில் வழங்கப்பட இருப்பது உறுதியாகி இருக்கின்றது. மஹிந்திரா நிறுவனம் தார் ராக்ஸ் கார் மாடலை 4.3 மீட்டர் அளவுக் கொண்டதாக தயார் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆகையால், அதிக இட வசதிக் கொண்ட எஸ்யூவி ரக காராக தார் ராக்ஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த காரை மஹிந்திரா நிறுவனம் தனது புதிய 4ஜி பிளாட்பாரத்தைப் பயன்படுத்தி உருவாக்கியதாகக் கூறப்படுகின்றது. இதன் வாயிலாகவே தார் ராக்ஸை நிறுவனம் சற்றே இலுகுவானதாக தயார் முடிந்திருக்கின்றது. சுமார் 40 கிலோ வரையில் எடைக் குறைவானதாக இந்த காரை மஹிந்திரா தயார் செய்திருக்கின்றது.
தொடர்ந்து, ஸ்கார்பியோ என் கார் மாடலில் காணப்படும் அம்சங்கள் பலவற்றை தார் ராக்ஸ் காரிலும் காண முடியும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. மல்டி-லிங்க் ரியர் சஸ்பென்ஷன் போன்ற பல பாகங்கள் ஸ்கார்பியோ என் மாடலில் இருந்து பெறப்பட்டு, தார் ராக்ஸ் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.
இது 'ஃப்ரீக்வென்சி டிபென்டென்ட் டேம்பிங்' (Frequency Dependent Damping) தொழில்நுட்பத்தைக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுதவிர, இந்த காரில் பாதுகாப்பான பயணம் மற்றும் ஆஃப்-ரோடு பயணங்களுக்கான சிறப்பம்சங்களும் மிக தாராளமாக இடம் பெற்றிருக்கும் என கூறப்படுகின்றது. அந்தவகையில், எலெக்ட்ரானிக் பிரேக் லாக்கிங் சிஸ்டம், பலதரப்பட்ட நிலப் பரப்பை சமாளிக்கும் வசதி, 4x4 தொழில்நுட்பம் ஆகியவையே இந்த காரில் இடம் பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
மேலும், இப்போது வெளியாகியுள்ள தகவலின்படி, 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தார் ராக்ஸ் காரில் வழங்கப்பட இருப்பதும் உறுதியாகி இருக்கின்றது. ஆனால், இதனை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை. இதே எஞ்சினே ஸ்கார்பியோ என் மற்றும் எக்ஸ்யூவி 700 ஆகிய கார் மாடல்களில் பயன்படுத்தப்படுகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த எஞ்சின் ஆரம்ப நிலை தேர்வுகளில் 160 பிஎச்பி மற்றும் 330 என்எம் டார்க்கையும், உயர்நிலை தேர்வுகளில் 175 பிஎச்பி மற்றும் 380 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இதை போலவே அதிக திறனை வெளியேற்றக் கூடியதாக இந்த எஞ்சின் ட்யூன் செய்யப்பட்டு தார் ராக்ஸ் மாடலிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இத்துடன், கூடுதல் சில எஞ்சின் ஆப்ஷன்களும் வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. 2.2 லிட்டர் டீசல் எஞ்சினே எதிர்பார்க்கப்படுகின்றது. மஹிந்திரா நிறுவனம் தார் ராக்ஸ் கார் மாடலை ஆகஸ்டு 15 ஆம் தேதி அன்றே இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. அன்றைய தினமே காரின் விலை மற்றும் எஞ்சின் விபரங்கள் உள்ளிட்ட முக்கிய தகவலை நிறுவனம் வெளியிட உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா தார் ராக்ஸ் பற்றிய இன்னும் பல தகவல்கள் அறியப்படாத நிலையே தென்படுகின்றது. ஆகஸ்டு 15 அன்று அனைத்து கேள்விகளுக்குமான பதில் கிடைக்கும் என நம்பப்படுகின்றது. குறிப்பாக, இந்த காரில் இடம் பெற இருக்கும் சிறப்பம்சங்கள் மற்றும் வேரியண்டுகள் உள்ளிட்ட விபரங்களையும் அன்றைய தினம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








