இப்படிப்பட்ட மஹிந்திரா கார் இந்தியாவிலேயே இது ஒன்றுதான் இருக்கிறது!! பணத்தை தண்ணி போல செலவு பண்ணி இருக்காங்க!

மஹிந்திரா தார் ராக்ஸ் (Mahindra Thar ROXX), இந்திய மார்க்கெட்டில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மாடர்ன் மஹிந்திரா வாகனம். ஏற்கனவே விற்பனையில் இருக்கும் 3-கதவு தார் வாகனத்தின் 5-டோர் வெர்சனாக அறிமுகம் செய்யப்பட்டது. 5-டோர் தார் ராக்ஸ் வாகனத்தின் டெலிவிரிகள் ஏற்கனவே துவங்கப்பட்டுவிட்டன. அதாவது, தார் ராக்ஸ் வாகனங்கள் கஸ்டமர்களின் கைக்கு செல்ல துவங்கிவிட்டன. அவ்வாறு, இந்த வாகனத்தை வாங்கிய கஸ்டமர் ஒருவர் அதனை மோச்சா பிரவுன் (Mocha Brown) நிற கேபின் உடன் அலங்கரித்துள்ளார். இவ்வாறான கேபினை கொண்ட முதல் தார் ராக்ஸ் வாகனம் என கூறப்படும் இதனை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மஹிந்திரா தார் வாகனத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக மாருதி சுஸுகி நிறுவனம் ஜிம்னியை அறிமுகம் செய்த போதிலும் பயனில்லை. ஒவ்வொரு மாதத்திலும் அசால்ட்டாக குறைந்தப்பட்சம் 5 ஆயிரம் தார் வாகனங்களை மஹிந்திரா விற்பனை செய்து வருகிறது.

thar roxx in brown colour

இப்படிப்பட்ட சூழலில்தான் சமீபத்தில் 5-டோர் தார் ராக்ஸ் வாகனம் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தின்போது அறிமுகம் செய்யப்பட்டது. முன்பதிவு துவங்கப்பட்ட வெறும் 1 மணிநேரத்தில் 1.76 லட்சம் பேர் தார் ராக்ஸ் வாகனத்தை புக் செய்துள்ளதாக அந்த சமயத்தில் செய்திகள் வெளிவந்தன. இத்தனைக்கும் 3-டோர் தாரை காட்டிலும் 5-டோர் தாரின் விலை அதிகமாகும். இருப்பினும், நடைமுறைக்கு ஏற்ற தோற்றத்தை கொண்டிருப்பதால் நிறைய பேர் தார் ராக்ஸை முன்பதிவு செய்து வருகின்றனர்.

பலத்த டிமாண்ட்களுக்கு மத்தியில் உற்பத்தி செய்த தார் ராக்ஸ் வாகனங்களை ஒன்றன்பின் ஒன்றாக மஹிந்திரா டெலிவிரி செய்து வருகிறது. அவ்வாறு வாங்கப்பட்ட தார் ராக்ஸ் வாகனம் ஒன்று இங்கு அசத்தலான தோற்றத்திற்கு மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. இந்த தார் ராக்ஸ் வாகனத்தின் வெளிப்பக்கத்தில் சில மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. ஃபாக் விளக்குகள் மாற்றப்பட்டுள்ளன. தானாக மடங்கக்கூடிய பின்பக்கத்தை காட்டும் வெளிப்புற கண்ணாடிகள் மற்றும் ஒளி எதிரொலிப்பான்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன.

thar roxx in brown colour

பின்பக்கத்தில் எல்இடி டெயில்லைட்கள் ஸ்மோக்டு எஃபெக்ட்டிற்கு மாற்றப்பட்டுள்ளன. இவை தவிர்த்து வெளிப்பக்கத்தில் பெரியதாக எந்த மாற்றமும் இல்லை; மொத்த மாடிஃபிகேஷன்களும் வாகனத்திற்கு உள்ளே தான் கொண்டுவரப்பட்டுள்ளன. முக்கியமாக சொல்ல வேண்டுமென்றால், வாகனத்திற்குள் புதிய மியுசிக் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், ஏசி வெண்ட்ஸ் ப்ரீமியம் தரத்திலான தோற்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

பயணிகளின் சவுகரியத்திற்காக இருக்கைகளில் கூடுதல் குஷின்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இவை எல்லாவற்றையும் விட இந்த தார் ராக்ஸ் வாகனத்தில் நம்மை ஈர்ப்பது என்னவென்றால், இதன் மோச்சா பிரவுன் நிற கேபின் ஆகும். அதாவது, வாகனத்தின் உட்புற கேபின் முழுவதுமாக மோச்சா பிரவுன் நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. டேஸ்போர்டு கருப்பு நிறத்தில் இருந்தாலும், இருக்கை, டேஸ்போர்டுக்கு கீழ்பகுதி மற்றும் டோர் பேட்ஸ் எல்லாம் பிரவுன் நிறத்தில் உள்ளது.

இதற்காக, மஹிந்திரா தொழிற்சாலையில் வழங்கப்பட்ட கேபின் மொத்தமாக அகற்றப்பட்டுள்ளது. இந்த மாடிஃபிகேஷன்களுக்கு மொத்தம் ரூ.1.25 லட்சம் வரையில் செலவாகியதாக வீடியோவில் தெரிவித்துள்ளனர். இதனை காட்டிலும் அதிக மற்றும் குறைந்த செலவிலும் தார் ராக்ஸ் வாகனத்தை மாடிஃபிகேஷன் செய்ய முடியும் என சம்பந்தப்பட்ட மெக்கானிக் ஷாப் ஓனர் வீடியோவில் தெரிவித்துள்ளார்.

இதேபோன்றதான பிரவுன் நிறத்தில் தார் ராக்ஸ் வாகனத்தின் கேபினை மஹிந்திராவும் வழங்குகிறது. ஆனால், அந்த தார் ராக்ஸ் வாகனங்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் 2025 ஜனவரியில் இருந்தே துவங்கப்பட உள்ளன. அதுவரையில் பொறுக்க முடியாத காரணத்தினால்தான் இந்த கஸ்டமர் தனது மஹிந்திரா தார் ராக்ஸை இவ்வாறு மாற்றிக் கொண்டுள்ளார். ஆதலால், தற்போதைக்கு இந்த ஒரு தார் ராக்ஸ் வாகனத்தில் மட்டுமே இவ்வாறான கேபின் உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகனங்களை மாடிஃபை செய்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. இருப்பினும், தொடர்ந்து இவ்வாறான கார் மாடிஃபிகேஷன்களை பார்த்து வருகிறோம். வாகன உற்பத்தி நிறுவனம் வழங்கும் பாகத்தை நீக்கிவிட்டு புதிய ஒன்றை பொருத்துவது நிச்சயமாக சரியான முடிவாக இருக்காது. ஆகையால் இவ்வாறான கார் மாடிஃபிகேஷன்களை நாங்கள் ஊக்கப்படுத்தவில்லை.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 23, 2024, 10:43 [IST]
English summary
Mahindra thar roxx 5 door interior cabin in brown colour check all details here
மேலும்... #car modification #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+