இன்னும் சில மாதங்களில் இந்தியா முழுவதும் ஓட போகும் மஹிந்திரா வாகனம்... இதற்காகவே எவ்வளவு செலவானாலும் வாங்கலாம்
மஹிந்திரா தார் ராக்ஸ் (Mahindra Thar ROXX) வாகனம் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தின் போது வெளியீடு செய்யப்பட உள்ளது. இதற்கிடையில் புதிய தார் ராக்ஸ் வாகனத்தை விளம்பரப்படுத்தும் வகையில் புது, புது டீசர்கள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்ட வண்ணம் உள்ளன. இந்த வகையில், தார் ராக்ஸ் வாகனத்தின் உட்புற கேபினில் வழங்கப்பட்டுள்ள சிறப்பம்சங்களை வெளிக்காட்டும் விதமாக புதிய வீடியோ ஒன்று யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து விற்பனையில் இருக்கும் 3-கதவு தார் வாகனத்தின் புதிய 5-டோர் வெர்சனாக தார் ராக்ஸ் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கூடுதலாக 2 கதவுகள் இருக்கும் என்பது மட்டுமின்றி, தோற்றத்திலும் 3-டோர் தாருக்கும், புதிய 5-டோர் தாருக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள டீசரில் தார் ராக்ஸ் வாகனத்தில் வழங்கப்பட உள்ள 6 முக்கிய தொழிற்நுட்ப அம்சங்கள் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளன.

ஹை-டெக் டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே (High-Tech Digital Driver Display): தற்போது வெளியிடப்பட்டுள்ள டீசர் வீடியோவில் ஹைலைட்டாக சுட்டிக்காட்டப்பட்டு இருப்பது டிரைவருக்கான ஃபுல்-டிஜிட்டல் டிஸ்பிளே ஆகும். இதன் மூலமாக, வாகனத்தை பற்றிய தேவையான விபரங்களை டிரைவர் எளிமையாக பெற முடியும். மேலும், இந்த டிஸ்பிளே செட்டிங்க்ஸை டிரைவர் தனது விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ளும் ஆப்ஷன்களையும் மஹிந்திரா வழங்கும் என எதிர்பார்க்கிறோம்.

பெரிய டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் (Touchscreen Infotainment System): டிரைவருக்கான டிஸ்பிளேவையே ஹை-டெக் தரத்தில் வழங்கும்போது, பொழுதுப்போக்கிற்கான திரையை மட்டும் மஹிந்திரா நிறுவனம் தார் ராக்ஸ் வாகனத்தில் சாதாரணமாகவா வழங்கும்? பெரிய அளவில் ஹை-ரிசொல்யூஷன் டிஸ்பிளேவை கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் இந்த வாகனத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை ஸ்மார்ட் போன் உடன் இணைந்துக் கொள்ளும் வகையில் வழங்குவார்கள் என்பதை உறுதியாக சொல்லலாம்.

லக்சரியான சாஃப்ட் லெதர் டேஷ்போர்டு (Soft Leather Dashboard): மேற்கூறப்பட்ட திரைகளை கொண்ட தார் ராக்ஸ் வாகனத்தின் டேஷ்போர்டுக்கு பிரீமியம் தரத்திலான அலங்கரிப்பு வழங்கப்பட உள்ளது. இந்த அலங்கரிப்பு பார்ப்பதற்கு அருமையானதாக இருப்பது மட்டுமின்றி, தொடுவதற்கும் மென்மையானதாக இருக்கும். இதற்காக உயர் தரத்திலான மெட்டிரீயல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஹார்மன் கார்டன் மியுசிக் சிஸ்டம் (Harman Kardon Music System): இன்றைய கால கார்களில் ஹார்மன் கார்டன் மியுசிக் சிஸ்டம் வழங்கப்படுவது வழக்கமான ஒன்றாக மாறி வருகிறது. அந்த வகையில் இந்த பிரீமியம் தரத்திலான மியுசிக் சிஸ்டத்தை புதிய தார் ராக்ஸ் வாகனத்திலும் எதிர்பார்க்கிறோம். இரைச்சலற்ற தெளிவான ஆடியோவை வழங்கக்கூடியதாக ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் உருவாக்கப்படுகிறது.

பனோராமிக் சன்ரூஃப் (Panoramic Sunroof): புதிய தார் ராக்ஸ் வாகனத்தில் பனோராமிக் சன்ரூஃப் வழங்கப்பட இருப்பது ஏற்கனவே முன்னதாக ஒரு டீசரில் உறுதி செய்யப்பட்டு இருந்தது. காற்றோட்டமான கேபினுக்கும், பயணத்தின்போது வானத்தின் அழகை ரசிப்பதற்கும் பனோராமிக் சன்ரூஃப் உதவியாக இருக்கும். அதுமட்டுமின்றி, பகல் நேரங்களில் காருக்குள் கூடுதல் வெளிச்சத்திற்கும் இந்த சன்ரூஃப் வழிவகுக்கும்.

வெண்டிலேட்டட் இருக்கைகள் (Ventilated Seats): தார் ராக்ஸ் வாகனத்தின் உருவாக்கத்தில் மஹிந்திரா நிறுவனம் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது என்பது வெண்டிலேட்டட் இருக்கைகள் அதில் வழங்கப்பட்டு இருப்பதன் மூலம் உறுதியாகி உள்ளது. இந்த இருக்கைகளின் சிறப்பம்சம் என்னவென்றால், கோடைக்காலம் மற்றும் குளிர்காலத்தில் அந்தந்த சூழலுக்கு தகுந்தாற்போல் வெப்பமான மற்றும் குளிர்ந்த காற்றை கொடுத்து பயணியை காற்றோட்டமாக வைத்திருப்பது ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்சமயம் விற்பனையில் உள்ள 3-கதவு மஹிந்திரா தாரை காட்டிலும் புதிய 5-கதவு தார் தோற்றத்தில் மெருக்கேற்றப்பட்டதாகவும், முரட்டுத்தனமாகவும் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தற்போது வெளியாகியுள்ள டீசர் வீடியோவின் மூலம், புதிய தார் ராக்ஸ் தொழிற்நுட்ப அம்சங்களிலும் எந்த குறையும் இல்லாததாக இருக்கும் என்பது உறுதியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications









