நம்ப முடியாத விலை... இந்தியாவே காத்து கிடந்த காரை திடீரென களத்தில் இறக்கியது மஹிந்திரா... உண்மையா இவ்ளோதானா...

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மஹிந்திரா தார் (Mahindra Thar). தற்போதைய நிலையில் 3 டோர் (3 Door) வெர்ஷனில் மட்டுமே மஹிந்திரா தார் கிடைத்து வருகிறது. இந்த சூழலில் மஹிந்திரா தார் காரின் 5 டோர் (5 Door) வெர்ஷன், சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை (ஆகஸ்ட் 15) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரு நாள் முன்னதாக இன்றே (ஆகஸ்ட் 14) மஹிந்திரா தார் காரின் 5 டோர் வெர்ஷன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

யாரும் எதிர்பார்க்காத வகையில், சற்று நேரத்திற்கு முன்னதாக மஹிந்திரா தார் காரின் 5 டோர் வெர்ஷன் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது மஹிந்திரா நிறுவனத்திற்கு ஒன்றும் புதிதல்ல. கடந்த காலங்களிலும் ஒரு சில கார்களின் விலையை திடீரென அறிவித்து, வாடிக்கையாளர்களுக்கு 'சர்ப்ரைஸ்' கொடுத்த நிறுவனம்தான் அது!

Mahindra Thar Roxx

சரி, விஷயத்திற்கு வருவோம். மஹிந்திரா தார் ராக்ஸ் (Mahindra Thar Roxx) என்ற பெயரில், இந்த 5 டோர் மாடல் களத்தில் இறக்கப்பட்டுள்ளது. டிசைனை (Design) பொறுத்தவரையில், எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லைட், 'C' வடிவ எல்இடி பகல் நேர விளக்குகள், வட்ட வடிவ பனி விளக்குகள், எல்இடி டெயில்லைட்கள் மற்றும் புதிய டைமண்ட் கட் அலாய் வீல்கள் உள்ளிட்ட அம்சங்கள் எல்லாம் வழங்கப்பட்டுள்ளன.

வசதிகளை பொறுத்தவரையில் (Features), அடாஸ், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ சப்போர்ட், முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், சன்ரூஃப் மற்றும் 6 ஏர்பேக்குகள் உள்ளிட்ட அம்சங்கள் எல்லாம் கொடுக்கப்பட்டுள்ளன. வேரியண்ட்களை பொறுத்து, இந்த வசதிகள் மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Mahindra Thar Roxx Sunroof

மஹிந்திரா தார் ராக்ஸ் காரானது, பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) இன்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும். இதன் பெட்ரோல் வேரியண்ட்களின் விலை 12.99 லட்ச ரூபாயில் இருந்து தொடங்குகிறது. அதே நேரத்தில் டீசல் வேரியண்ட்களின் விலை 13.99 லட்ச ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

தற்போதைய நிலையில் மஹிந்திரா தார் ராக்ஸ் காரின் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்களின் ஆரம்ப விலை மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற வேரியண்ட்களின் விலை நாளை அறிவிக்கப்படும். எனவே வேரியண்ட் வாரியான முழுமையான விலை பட்டியலை தெரிந்து கொள்ள நாம் நாளை வரை காத்திருக்க வேண்டும்.

விலையை போலவே, மஹிந்திரா தார் ராக்ஸ் காரின் இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) பற்றிய தகவலும் முழுமையாக வெளியாகவில்லை. எனினும் தற்போது நமக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி பார்த்தால், மஹிந்திரா தார் ராக்ஸ் காரின் ஆரம்ப நிலை பெட்ரோல் வேரியண்ட்டில், 160 ஹெச்பி பவர் மற்றும் 330 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.

மறுபக்கம் இந்த காரின் ஆரம்ப நிலை டீசல் வேரியண்ட்டில், 150 ஹெச்பி பவர் மற்றும் 330 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். மஹிந்திரா தார் ராக்ஸ் காரை பற்றிய முழுமையான தகவல்கள் எல்லாம் நாளை நமக்கு தெரிய வந்து விடும். அதுவரை காத்திருப்போம்!

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: தார் ராக்ஸ் காரின் ஆரம்ப நிலை பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்களுக்கு, மஹிந்திரா நிறுவனம் சரியான விலையை நிர்ணயம் செய்திருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம். மற்ற வேரியண்ட்களின் விலையும் சரியாக நிர்ணயம் செய்யப்பட்டால், மஹிந்திரா தார் ராக்ஸ் வரலாறு படைக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 14, 2024, 22:50 [IST]
English summary
Mahindra thar roxx 5 door launched in india price engine options features design
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+