ஷோரூமில் டெலிவிரி எடுத்த உடனேயே தனித்தனியா பிரிச்சி போட்டுட்டாங்க!! இன்னும் சில இலட்சம் செலவு!

மஹிந்திரா தார் ராக்ஸ் (Mahindra Thar ROXX), இந்திய மார்க்கெட்டில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மாடர்ன் ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனம். அதாவது, கரடு முரடான பாதைகளுக்கு கொண்டு செல்லக்கூடியதாக தார் ராக்ஸ் விளங்குகிறது. இருப்பினும், இந்த வாகனத்தை வாங்கும் ஒரு சில வாடிக்கையாளர்கள் தங்களது தார் ராக்ஸ் வாகனத்தை மேலும் மூர்க்கதனமான தோற்றத்திற்கு மாற்றிக் கொண்டுள்ளனர். அந்த வகையில், இங்கு ஒரு மஹிந்திரா தார் ராக்ஸ் வாகனம் மிகவும் கவர்ச்சிக்கரமான தோற்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்தியாவில் அட்வென்ச்சர் பயணங்களுக்கு நிறைய இடங்கள் உள்ளதால், அதற்கேற்ப அட்வென்ச்சரான வாகனங்களும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் புதியது, புதியதாக விற்பனைக்கு வந்துள்ளன. அந்த வகையில் ஒரு காலத்தில் விற்பனையில் இருந்த பிரபலமான மாருதி சுஸுகி ஜிப்ஸிக்கு போட்டியாக மஹிந்திரா அறிமுகம் செய்ததே தார் ஆகும்.

mahindra thar roxx 5-door modified

மஹிந்திரா தாரின் 2ஆம் ஜென்ரேஷன் கடந்த 2020ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தில் 3-கதவுகளை கொண்ட தார் வாகனத்தின் 5-கதவு வெர்சன், தார் ராக்ஸ் என்கிற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வாகனத்தின் டெலிவிரிகள் சமீபத்தில்தான் துவங்கப்பட்டன. அதாவது, தார் ராக்ஸ் வாகனங்கள் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு செல்ல துவங்கியுள்ளன.

அவ்வாறு மஹிந்திரா தார் ராக்ஸ் வாகனத்தை டெலிவிரி பெறும் சில கஸ்டமர்கள், வாகனத்தை தனது விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக் கொண்டுள்ளனர். அந்த வரிசையில், மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட தார் ராக்ஸ் வாகனத்தை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். இந்த தார் ராக்ஸ் வாகனத்தின் வெளிப்பக்கத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன; வாகனத்தின் முன்பக்கத்தில் இருந்த பம்பர் நீக்கப்பட்டுள்ளது.

mahindra thar roxx 5-door modified

அதற்கு பதிலாக, புதிய முரட்டுத்தனமான பிராண்ட்-நியூ மெட்டல் பம்பர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பம்பரில் புரோஜெக்டர் ஃபாக் விளக்குகளையும் தனியாக வாங்கி பொருத்திக் கொள்ள இடவசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. பம்பருடன் புல்பாரும் உள்ளது. மேலும், இந்த குறிப்பிட்ட தார் ராக்ஸ் வாகனத்தில் பித்தளை நிறத்தில் ஆஃப்டர்மார்க்கெட் ஃப்யுல் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த புதிய சக்கரங்களுக்கு ஏற்ப பிரேக் காலிபர்களும் மாற்றப்பட்டுள்ளன.

அதேபோல், இந்த தார் ராக்ஸ் வாகனத்திற்கு உள்ளே கேபின் முழுவதுமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த வாகனத்தின் உட்புறத்தின் நிறத்தை முற்றிலுமாக மாற்ற உள்ளதாக இதுதொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளனர். வாகனத்திற்கு உள்ளே பிளாஸ்டிக் பாகங்களுக்கு கூட பெயிண்ட் கொடுக்கப்பட உள்ளதாக வீடியோவில் தெரிவித்துள்ளனர். அதாவது, இந்த தார் ராக்ஸ் வாகனத்தில் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் இந்த வீடியோ காட்டிப்படுத்தப்பட்டு உள்ளது.

mahindra thar roxx 5-door modified

இருப்பினும் அதற்குள், இந்த வாகனத்தின் கேபினை அடர் பழுப்பு மற்றும் கருப்பு நிறங்களில் மாற்றியுள்ளனர். மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி-வேகன் ஸ்டைல் ஏசி வெண்ட்ஸ் மற்றும் கேபினை சுற்றிலும் விளக்குகளும் இந்த தார் ராக்ஸ் வாகனத்தில் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளன. தார் ராக்ஸ் வாகனத்திற்கு அருமையான நிறத்தில் மஹிந்திரா நிறுவனம் கேபினை வழங்குகிறது. கேபின் அழகாக இருந்தாலும், உடனடியாக அழுக்காக கூடியதாக உள்ளதால் அதனை பராமரிப்பது சற்று கடினமான வேலையாக உள்ளது.

இதனால், தார் ராக்ஸ் வாகனத்தை வாங்கிய கஸ்டமர்களுள் சிலர், உடனடியாக வாகனத்தின் கேபினின் நிறத்தை மாற்றிக் கொண்டுள்ளனர். இந்த பிரச்சனையை அறிந்த மஹிந்திரா நிறுவனம் அதன் தார் ராக்ஸ் வாகனங்களில் தொழிற்சாலையிலேயே மோச்சா பிரவுன் நிறத்தில் கேபினை வழங்க ஆரம்பித்துள்ளது. ஆனால், அந்த தார் ராக்ஸ் வாகனங்கள் கஸ்டமர்ஸ் கைகளுக்கு சென்றடைய இன்னும் சில வாரங்கள் ஆகலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த மஹிந்திரா தார் ராக்ஸ் வாகனம் பார்ப்பதற்கு மிகவும் அருமையாக உள்ளது. வாகனத்தின் வெளிப்பக்க தோற்றத்திற்கு ஏற்ப உட்பக்க தோற்றமும் கவர்ச்சிக்கரமான நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கேற்ப பணமும் அதிகம் செலவாகி இருக்கும் என்றாலும், இந்த மாடிஃபிகேஷன்களுக்கு மொத்தம் எவ்வளவு செலவானது என்பது குறித்த விபரங்கள் இல்லை.

More from DriveSpark

Article Published On: Monday, November 18, 2024, 8:00 [IST]
English summary
Mahindra thar roxx 5 door modified into rugged look check all details here
மேலும்... #car modification #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X