தார் ராக்ஸ் காரை நம்பி வாங்கினவங்க கெட்டு போக மாட்டாங்க.. இந்தியாவின் பாரத் என்சிஏபி-யே இத ஆமானு சொல்லிட்டாங்க
மஹிந்திரா (Mahindra) நிறுவனம் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் பெரும்பாலான கார்கள் பாதுகாப்பு தரத்தில் நற்மதிப்பைப் பெற்றவையாகக் காட்சியளிக்கின்றன. இதேபோல், சமீபத்தில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட தார் ராக்ஸ் (Thar Roxx) கார் மாடலும் நல்ல பாதுகாப்பு தரம்மிக்கதாக இருக்கும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருந்தது. இந்த எதிர்பார்ப்பை உறுதிப்படுத்தக் கூடிய தகவலே தற்போது வெளியாகி உள்ளன. அதாவது, மஹிந்திரா தார் ராக்ஸ் அதிக பாதுகாப்பு திறன் மிக்க வாகனம் என்பது உறுதியாகி இருக்கின்றது. பாரத் என்சிஏபி (Bharat NCAP)-யே இந்த வாகனம் அதிகம் பாதுகாப்பைத் தரக் கூடியது என்கிற சான்றை வழங்கியுள்ளது.
சமீபத்தில் இந்த கார் மாடலை அது மோதல் ஆய்விற்கு உட்படுத்தியது. இதன் முடிவுகளையே குளோபல் என்சிஏபி தற்போது வெளியிட்டு இருக்கின்றது. தார் ராக்ஸ் ஐந்துக்கு ஐந்து ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றிருப்பது இதன் வாயிலாகவே உறுதியாகி இருக்கின்றது. பெரியவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் இந்த கார் மாடல் 32 புள்ளிகளுக்கு 31.09 புள்ளிகளையும், சிறியவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் 49 புள்ளிகளுக்கு 45 புள்ளிகளையும் இந்த கார் மாடல் பெற்றிருக்கின்றது.

எனவே புதிய தார் ராக்ஸ் சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் என இருவர்களுக்கும் பாதுகாப்பான பயணத்தை வழங்கக் கூடிய வாகனம் என்பது தெரிய வந்திருக்கின்றது. மேலும், விபத்தின்போது டிரைவர் மற்றும் பயணிகளின் தலை, கழுத்து, கால் மற்றும் தொடை உள்ளிட்ட உடல் பாகங்களுக்கு அதிக பாதுகாப்பை இந்த கார் வழங்கும் வகையில் செயல்படுமாம்.
இதன் அடிப்படையிலேயே இக்காருக்கு அதிகபட்ச புள்ளிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. மேலும், பாரத் என்சிஏபி தார் ராக்ஸ் கார் மாடலின் எம்எக்ஸ்3 (MX3) மற்றும் ஏஎக்ஸ்5 (AX5) எல் ஆகிய வேரியண்டுகளையே இந்த மோதல் ஆய்விற்கு உட்படுத்தி இருக்கின்றது. இவை இரண்டும் கணிசமான அளவு அதிக பாதுகாப்பு அம்சங்களைத் தாங்கியவை ஆகும்.

மிக முக்கியமாக முன் பக்கம், தலைக்கான கர்டைன் வகை ஏர் பேக்குகளைக் கொண்டிருக்கும். இதுதவிர, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், சீட் பெல்ட் ரிமைண்டர், சீட் பெல்ட்டை தானாக இருக்கும் திறன் மற்றும் லோடை லிமிட் செய்யும் திறன் ஆகியவற்றையும் இந்த வேரியண்டுகள் கொண்டிருக்கின்றன. இந்த அம்சங்களே தார் ராக்ஸ் காருக்கு அதிக புள்ளிகளைப் பெற உதவியாக இருந்திருக்கின்றன.
இதுமட்டுமில்லைங்க, மலையில் ஏற்றம் மற்றும் இறக்கத்தின்போது அசிஸ்ட் செய்யும் வசதி, டிராக்சன் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல், தானாக டிம் ஆகும் வசதிக் கொண்ட ஐஆர்விஎம், டிஸ்க் பிரேக், பார்க்கிங் சென்சார், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், டயர் பிரஷ்ஷர் மானிட்டர் சிஸ்டம், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, ஆட்டோமேட்டிக் ஹெட்லைட் மற்றும் வைப்பர் ஆகிய அம்சங்கள் இந்த கார் மாடலின் உயர் நிலை தேர்வுகளில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுமட்டுமில்லைங்க அடாஸ் எனும் தொழில்நுட்ப வசதியையும் இந்த கார் மாடலின் உயர் நிலை தேர்வு பெற்றிருக்கும். இதுபோன்று இன்னும் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை தாங்கி இருக்கின்ற காரணத்தினாலேயே இந்த கார் ஐந்து ஐந்து ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கை குவித்துள்ளது. ஏற்கனவே இந்த கார் மாடலுக்கு மிக அமோகமான வரவேற்பு நாட்டில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
இந்த மாதிரியான சூழலிலேயே இது நாம் வணங்கும் கடவுளை போல மிகுந்த பாதுகாப்பு வழங்கும் என்பது தற்போது தெரிய வந்திருக்கின்றது. இதனால் இந்த காருக்கு கிடைத்குக் கொண்டிருக்கும் வரவேற்பு வரும் நாட்களில் இரட்டிப்படையக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் இந்த கார் ரூ. 12.99 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 3 கதவுகளைக் கொண்ட தார் கார் மாடலில் 5 டோர் வெர்ஷனே தார் ராக்ஸ் ஆகும். பாதுகாப்பு தருவதில் 5 டோர் தார் ராக்ஸ் மட்டுமல்ல 3 டோர் தார்-ம் மிக சிறந்த வாகனம் ஆகும். குளோபல் என்சிஏபி நடத்திய மோதல் ஆய்வில் இந்த வெர்ஷனும் ஐந்துக்கு ஐந்து ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கையேப் பெற்றன என்பது கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications









