மஹிந்திரா தார் ராக்ஸ் காரின் விலையை முழுசா சொல்லீட்டாங்க... இவ்ளோ கம்மியான ரேட்ல வரும்னு யாருமே எதிர்பாக்கல!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த மஹிந்திரா தார் ராக்ஸ் (Mahindra Thar Roxx), நேற்று (ஆகஸ்ட் 14) விற்பனைக்கு களமிறக்கப்பட்டது. இது ஏற்கனவே விற்பனையில் இருக்கும் மஹிந்திரா தார் எஸ்யூவி காரின் 5 டோர் (5 Door) வெர்ஷன் ஆகும். இதற்கு முன்பாக, 3 டோர் (3 Door) வெர்ஷனில் மட்டும்தான் மஹிந்திரா தார் கிடைத்து கொண்டிருந்தது. நேற்றைய தினம் ஆரம்ப நிலை பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்களின் (Variants) விலை மட்டும்தான் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) பற்றிய தகவல்களும் கூட, பெரிதாக வெளியாகவில்லை.
ஆனால் இன்று (ஆகஸ்ட் 15) சுதந்திர தினத்தை (Independence Day) முன்னிட்டு, மஹிந்திரா தார் ராக்ஸ் காரின் வேரியண்ட் வாரியான விலை (Variant-wise Prices) விபரம் வெளியிடப்பட்டுள்ளது. இன்று அறிவிக்கப்பட்டிருப்பது, மஹிந்திரா தார் ராக்ஸ் காரின், ரியர் வீல் டிரைவ் (RWD - Rear Wheel Drive) மாடல்களின் விலை ஆகும்.

4X4 மாடல்களின் விலை பின்னர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சரி, விஷயத்திற்கு வருவோம். மஹிந்திரா தார் ராக்ஸ் காரில், 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இவை பல்வேறு விதமான பவர் அவுட்புட்களில் கிடைக்கும்.
அதாவது பெட்ரோல் இன்ஜினானது, 150 பிஹெச்பி/330 என்எம், 160 பிஹெச்பி/330 என்எம் மற்றும் 175 பிஹெச்பி/380 என்எம் என மொத்தம் 3 வகையான ட்யூனிங்கில் வழங்கப்படும். மறுபக்கம் டீசல் இன்ஜினானது, 150 பிஹெச்பி/330 என்எம், 171 பிஹெச்பி/370 என்எம் என 2 வகையான ட்யூனிங்கில் கிடைக்கும்.

மஹிந்திரா தார் ராக்ஸ் காரின் வசதிகளை (Features) பொறுத்தவரையில், அடாஸ் (ADAS), கனெக்டட் கார் தொழில்நுட்பம், பனரோமிக் சன்ரூஃப் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவையாக உள்ளன. வேரியண்ட்களை பொறுத்து, வசதிகள் மாறுபடும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
சரி, மஹிந்திரா தார் ராக்ஸ் காரின் விலை எவ்வளவு? என்பது நீங்கள் கேட்பது புரிகிறது. மஹிந்திரா தார் ராக்ஸ் காரின் MX1 MT RWD வேரியண்ட்டின் விலை 12.99 லட்ச ரூபாய் ஆகவும், MX3 AT RWD வேரியண்ட்டின் விலை 14.99 லட்ச ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை இரண்டுமே பெட்ரோல் வேரியண்ட்கள் ஆகும்.
இனி நாம் பார்க்க இருக்கும் அனைத்துமே டீசல் வேரியண்ட்கள் ஆகும். மஹிந்திரா தார் ராக்ஸ் காரின் MX1 MT RWD வேரியண்ட்டின் விலை 13.99 லட்ச ரூபாய் ஆகவும், MX3 MT RWD வேரியண்ட்டின் விலை 15.99 லட்ச ரூபாய் ஆகவும், AX3L MT RWD வேரியண்ட்டின் விலை 16.99 லட்ச ரூபாய் ஆகவும், MX5 MT RWD வேரியண்ட்டின் விலை 16.99 லட்ச ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் AX5L AT RWD வேரியண்ட்டின் விலை 18.99 லட்ச ரூபாய் ஆகவும், AX7L MT RWD வேரியண்ட்டின் விலை 18.99 லட்ச ரூபாய் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்த விலைக்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக மஹிந்திரா தார் ராக்ஸ் கருதப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மஹிந்திரா தார் ராக்ஸ் காரின் விலை நிர்ணயம் சிறப்பாக உள்ளது என்பது எங்களுடைய கருத்து. மஹிந்திரா தார் ராக்ஸ் காருக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் வரும் அக்டோபர் 3ம் தேதியில் இருந்து தொடங்கப்படவுள்ளன. டெலிவரி (Delivery) பணிகள் வரும் நவம்பர் மாதத்தில் இருந்து தொடங்கப்படவுள்ளது.


Click it and Unblock the Notifications








