கூட்டு குடும்பமாக செல்ல வாகனத்தை உருவாக்கும் மஹிந்திரா... இரண்டில் எதை வாங்குவது ஒரே குழப்பமாக இருக்கே!!

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக புதிய தார் ராக்ஸ் (Thar ROXX) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது, ஏற்கனவே விற்பனையில் இருக்கும் 3-கதவு தார் வாகனத்தின் 5-கதவு வெர்சனாக களமிறக்கப்படுகிறது. புதிய மஹிந்திரா தார் ராக்ஸ் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தின்போது வெளியீடு செய்யப்பட உள்ளது. கூடுதலாக கதவுகளை பெற்றுவருவது மட்டுமின்றி, இன்னும் நிறைய அம்சங்கள் தார் ராக்ஸ் வாகனத்தில் சேர்க்கப்பட உள்ளன. அவை என்னென்ன என்பதை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

கிரில் டிசைன்: தார் வாகனத்தின் முன்பக்க க்ரில் பகுதியை புதிய தார் ராக்ஸில் மஹிந்திரா நிறுவனம் இன்னும் முரட்டுத்தனமான தோற்றத்திற்கு மாற்றியுள்ளது. 3-கதவு தாரில் வழங்கப்படும் 6-ஸ்லாட் க்ரில்லுக்கு பதிலாக புதிய, தடிமனான டிசைனில் க்ரில் வழங்கப்பட்டுள்ளது. தார் ராக்ஸின் முன்பக்க கிரில் பகுதியில் கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதில் இருந்து, இந்த வாகனத்தில் 360-டிகிரி கேமரா செட்அப் வழங்கப்படும் என்பது உறுதியாகி உள்ளது.

thar roxx vs thar 3-door

எல்இடி ஹெட்லைட்கள்: 3-கதவு தார் வாகனத்தில் ஹலோஜன் ஹெட்லைட் செட்-அப் வழங்கப்படுகிறது. ஆனால், புதிய தார் ராக்ஸ் வாகனத்தில் C-வடிவிலான எல்இடி டிஆர்எல்-கள் உடன் புதிய எல்இடி ஹெட்லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், தார் ராக்ஸில் ஹெட்லைட்களை சுற்றிலும் வ்ராப் கொடுக்கப்பட்டு உள்ளது.

அதிகமான வீல்பேஸ்: 3-கதவு தார் மற்றும் 5-கதவு தார் ராக்ஸ் இவை இரண்டிற்கும் இடையேயான மிக முக்கியமான வித்தியாசமே அவற்றின் வீல்பேஸ் நீளமாகும். ஏனெனில், தார் ராக்ஸ் வாகனத்தில் 5 கதவுகளை வழங்குவதற்காக சக்கரங்களுக்கு இடையேயான தூரம் கூடுதல் நீளமானதாக வழங்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, வாகனத்தினுள் பின் இருக்கைகளில் அமர்பவர்களுக்கு கூடுதல் இடவசதி கிடைக்கும்.

புதிய அலாய் சக்கரங்கள்: 3-கதவு தார் வாகனத்தை போன்று, தார் ராக்ஸ் வாகனத்திலும் 18-இன்ச் அலாய் சக்கரங்கள் தான் வழங்கப்பட்டுள்ளன என்றாலும், தார் ராக்ஸில் அலாய் சக்கரங்களை இரு நிறங்களில் பெறலாம். அதேபோல், சக்கரங்களுக்கான வீல் ஆர்ச்சுகள் 3-கதவு தாரில் வட்ட வடிவில் வழங்கப்படுகின்றன. ஆனால், தார் ராக்ஸில் சதுரமாக கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய டெயில்லைட் செட்-அப்: தார் ராக்ஸ் வாகனத்தின் பின்பக்க தோற்றம் எப்படி இருக்கும் என்பது இன்னும் நமக்கு முழுமையாக தெரியவில்லை. ஆனால், இந்த புதிய வாகனத்தில் 'C' டிசைனில் எல்இடி டெயில்லைட்கள் வழங்கப்பட்டு இருப்பது சமீபத்திய டீசர் ஒன்றின் மூலமாக தெரியவந்தது. ஆனால், 3-கதவு தார் வாகனத்தில் நீள் செவ்வக வடிவில் டெயில்லைட்கள் கொடுக்கப்படுகின்றன.

thar roxx vs thar 3-door

தொழிற்நுட்ப வசதிகள்: தார் ராக்ஸ் வாகனத்தின் உட்புற தோற்றம் சமீபத்தில் இணையத்தில் கசிந்தது. அதன்படி பார்க்கும்போது, பழுப்பு நிறத்திலான கேபினை தார் ராக்ஸ் பெற்றுவர உள்ளது. தொழிற்நுட்ப அம்சங்களை பொறுத்தவரையில், டேஸ்போர்டில் 10.25-இன்ச்சில் இரு திரைகள், வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ, பனோராமிக் சன்ரூஃப், கீலெஸ் எண்ட்ரீ மற்றும் வாகனத்தை ஸ்டார்ட் & ஸ்டாப் செய்வதற்கு புஷ் பொத்தானை எதிர்பார்க்கிறோம்.

பயணிகளின் பாதுகாப்புக்கு 6 ஏர்பேக்குகள், முன்பக்கமாக/ பின்பக்கமாக பார்க்கிங் செய்வதற்கு உதவியாக சென்சார்கள், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், 360-டிகிரி கேமரா மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்ஸ் உள்ளிட்டவை தார் ராக்ஸில் வழங்கப்பட உள்ளன. இவற்றில் நிறைய வசதிகள் 3-கதவு தார் வாகனத்தில் வழங்கப்படுவதில்லை.

என்ஜின்: 3-கதவு தார் வாகனத்தில் வழங்கப்படும் அதே 2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் தான் புதிய தார் ராக்ஸ் வாகனத்திலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கிறோம். ஆனால், இந்த என்ஜின்கள் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் அளவுகள் சற்று அதிகமாக இருக்கலாம். அதாவது, அதற்கேற்றவாறு என்ஜின்கள் ட்யூன் செய்யப்படலாம். தார் ராக்ஸ் வாகனம் 2-டிரைவ்-சிஸ்டம் மற்றும் 4-டிரைவ்-சிஸ்டம் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த 2024ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் மிக முக்கியமான அறிமுகங்களுள் ஒன்றாக மஹிந்திரா தார் ராக்ஸ் 5-டோர் வாகனம் பார்க்கப்படுகிறது. ஏனெனில், சிறப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கும் 3-கதவு தார் வாகனத்தின் ஒரேயொரு குறையாக பார்க்கப்படுவது வாகனத்திற்குள் போதுமான இடவசதி கிடைப்பதில்லை என்பதுதான். அந்த குறையை நிவர்த்தி செய்யும் விதமாக களமிறக்கப்படுவதால், தார் ராக்ஸின் விற்பனை மேலும் அதிகமாக இருக்கும் என்பதை உறுதியாக சொல்லலாம்.

More from DriveSpark

Article Published On: Sunday, August 11, 2024, 13:52 [IST]
English summary
Mahindra thar roxx 5 door vs thar 3 door check main differences here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+