இது எல்லாம் சொந்த காசில் சூனியம் வெச்சுகுற மாதிரி!! பல லட்சங்கள் கொடுத்து வாங்கி என்ன பிரயோஜனம்?

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் சமீப கால தரமான தயாரிப்புகளுள் ஒன்றாக தார் ராக்ஸ் (Thar ROXX) வாகனத்தை சொல்லலாம். ஏனெனில், ஏற்கனவே விற்பனையில் ஜொலித்துக் கொண்டிருந்த மஹிந்திரா தார் வாகனத்தின் 5-டோர் வெர்சனாக இது அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வாகனத்தை கஸ்டமர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் சமீபத்தில்தான் துவங்கப்பட்டன. இந்த நிலையில், இங்கு ஒரு தார் ராக்ஸ் வாகனம் 22-இன்ச் சக்கரங்களுடன் மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. இந்த தார் ராக்ஸ் வாகனத்தை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

3-கதவுகள் உடன் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்த மஹிந்திரா தார் வாகனம் சமீபத்தில் 5 கதவுகள் உடன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வாகனத்திற்கு தார் ராக்ஸ் என மஹிந்திரா பெயர் சூட்டியது. பல எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்ட தார் ராக்ஸ் வாகனத்திற்கான புக்கிங்குகள் ஏற்கனவே துவங்கப்பட்டு நடைபெற்றுவந்த நிலையில் இந்த வாகனத்தை வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் நாடு முழுவதும் சமீபத்தில் துவங்கப்பட்டன.

thar roxx with 22-inch wheels

அவ்வாறு தார் ராக்ஸ் வாகனத்தை பஞ்சாப்பில் டெலிவிரி பெற்ற வாடிக்கையாளர் ஒருவர் அதில் அளவில் பெரியதான 22-இன்ச் சக்கரங்களை பொருத்தி மேலும் அழகாக்கி உள்ளார். வாகனத்தை டெலிவிரி எடுத்த அதே நாளில் அவர் இவ்வாறு மாற்றிக் கொண்டுள்ளார். பிராண்ட்-நியூ தார் ராக்ஸில் இவ்வாறு 22-இன்ச் சக்கரங்களை பொருத்தியுள்ளதை இந்த பணிகளை மேற்கொண்ட மெக்கானிக் கடை அதன் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இந்த கடையின் பெயர் ரவி டயர்ஸ் ஆகும். இந்த மாடிஃபிகேஷன்களுக்கு உட்படுத்தப்பட்டு இருப்பது தார் ராக்ஸ் வாகனத்தின் விலைமிக்க வேரியண்ட் ஆகும். இதில், 19-இன்ச்சில் அலாய் சக்கரங்கள் தொழிற்சாலையில் பொருத்தப்படுகின்றன. அதுவே, தார் ராக்ஸின் எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்களில் 18-இன்ச்சில் சக்கரங்கள் பொருத்தப்படுகின்றன. இந்த தார் ராக்ஸில் பொருத்தப்பட்டு இருப்பது 22-இன்ச் ஃப்யுல் காண்ட்ரா சக்கரங்கள் ஆகும்.

thar roxx with 22-inch wheels

கருப்பு மற்றும் சிவப்பு நிறங்கள் கலந்த கலவையில் உள்ள இந்த சக்கரங்களின் ரிம்கள் ஆஃப்-ரோடு பயணங்களுக்கு ஏற்றவை என வாகனத்தை கஸ்டமைஸ் செய்த நிறுவனம் தெரிவிக்கிறது. இந்த சக்கரங்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்துள்ளனர். இதனால், இவை விலையுயர்ந்தவை ஆக விளங்குகின்றன. இருப்பினும், உண்மையில் இது சொந்த காசில் சூனியம் வைத்துக் கொள்வது போல தான்.

ஏனெனில், தார் ராக்ஸில் 22-இன்ச்சில் அலாய் சக்கரங்களை வழங்க மஹிந்திராவுக்கு தெரியாமல் இல்லை. இவ்வாறான அளவில் பெரியதான சக்கரங்களினால் வாகனத்தின் செயல்படுதிறன் பாதிக்கப்படும். இதனால், வாகனத்தை ஹேண்ட்லிங் செய்வது சிரமமாகுவது மட்டுமின்றி, ரைடிங்கின் தரமும் பாதிக்கப்படும். இது ஒரு கட்டத்திற்கு மேல் வாகனத்திற்கு சேதங்களையும் ஏற்படுத்தக்கூடும்.

thar roxx with 22-inch wheels

ஏனெனில், அளவில் பெரிய சக்கரங்களினால், வாகனம் வழக்கத்தை காட்டிலும் அதிகமாக குதித்து செல்லும். குறிப்பாக, பள்ளம் மேடான பகுதிகளில் செல்லும்போது சக்கரங்கள் உடைப்படுவதற்கு கூட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தார் ராக்ஸ் போன்ற வாகனங்களை வாங்குவதே கரடு முரடான ஆஃப்-ரோடுகளில் அடிக்கடி பயணம் செய்வதற்கு தான். அப்படியிருக்கையில், முக்கியமான விஷயத்திலேயே கை வைப்பது ஏற்கக்கூடியது அல்ல.

இருப்பினும், இந்த கஸ்டமர் இவ்வாறு யோசித்து இருப்பதற்கு காரணம், அவர் தார் ராக்ஸ் வாகனத்தை ஆஃப்-ரோடு பயணங்களுக்காக வாங்கவில்லை. ஏனெனில், இந்த குறிப்பிட்ட தார் ராக்ஸ் ஆனது 4x2 வேரியண்ட் ஆகும். இந்த வேரியண்ட்டை அதிகமாக ஆஃப்-ரோடு பயணங்களை மேற்கொள்ளாதவர்கள் தான் வாங்குவர். அத்தகைய கஸ்டமர்களுக்கு இவ்வாறான சக்கரங்கள் பெரிய பிரச்சனையாக இருக்காது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சக்கரங்கள் மாறியுள்ளதால், இந்த தார் ராக்ஸ் வாகனத்தின் மொத்த தோற்றமும் மாறியுள்ளது. ஏற்கனவே கூறியதுபோல், இந்த மாடிஃபிகேஷன் ஆபத்தானவையாக இருந்தாலும், நேர்த்தியாக செய்யப்பட்டுள்ளது. வீடியோவை வெளியிட்டுள்ள மெக்கானிக் கடையும் பஞ்சாப்பில் தான் உள்ளது. பஞ்சாப் காரர்கள் இவ்வாறான கார் கஸ்டமைசேஷன்களில் மிகவும் ஈடுப்பாட்டுடன் ஈடுப்படுவதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 15, 2024, 23:33 [IST]
English summary
Mahindra thar roxx 5 door with 22 inch wheels car customization in punjab check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X