நாடே எதிர்பார்த்த மஹிந்திரா காரின் டெலிவரி தொடங்கிருச்சு! 1 மணி நேரத்தில் 1.76 லட்சம் புக்கிங்கை குவித்த கார்!

ஒட்டுமொத்த இந்தியாவே எதிர்பார்த்த கார் மாடல் மஹிந்திரா தார் ராக்ஸ் (Mahindra Thar Roxx). இது 3 டோர்கள் கொண்ட தார் கார் மாடலின் 5 கதவுகள் கொண்ட வெர்ஷன் ஆகும். இந்த காருக்கு சமீபத்திலேயே புக்கிங் பணிகள் நாட்டில் தொடங்கின. அக்டோபர் 3 ஆம் தேதி அன்றே புக்கிங் பணிகள் தொடங்கின. இந்த நிலையிலேயே அதன் டெலிவரி பணிகளும் தற்போது தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக கார் டெலிவரி செய்யப்படும் படங்கள் இணையத்தில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

புக்கிங் பணிகள் தொடங்கப்பட்ட முதல் ஒரு மணி நேரத்திலேயே 1.76 லட்சம் யூனிட்டுகளுக்கான புக்கிங்கை குவித்த கார் மாடலே தார் ராக்ஸ் ஆகும். இத்தகைய கார் மாடலின் டெலிவரி பணிகளே தற்போது நாட்டில் தொடங்கி இருக்கின்றது. இந்த கார் இந்தியாவில் இரண்டு விதமான எஞ்சின் தேர்வுகள் மற்றும் ஆறு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

Mahindra thar roxx customer deliveries begin

எம்எக்ஸ்1 (MX1), எம்எக்ஸ்3 (MX3), ஏஎக்ஸ்3எல் (AX 3L), எம்எக்ஸ்5 (MX5), ஏஎக்ஸ்5எல் (AX 5L) மற்றும் ஏஎக்ஸ்7எல் (AX 7L) ஆகியவையே அவை ஆகும். மேலும், இந்த கார் ரூ. 12.99 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

இத்தகைய அதிக விலையில் விற்கப்படும் காருக்கே இந்தியாவில் நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது. 2.2 லிட்டர் டிஜிடிஐ பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் சிஆர்டிஐ டீசல் ஆகிய எஞ்சின் ஆப்ஷன்களிலேயே தார் ராக்ஸ் 5 டோர் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இரண்டு மோட்டாரிலும் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் டார்க் கன்வெர்டர் ஆகிய கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன், வெகு சமீபத்திலேயே இந்த காரில் 4x4 வசதி வழங்கப்பட்டது. முன்னதாக இந்த 2 வீல் டிரைவ் அம்சத்துடன் மட்டுமே தார் ராக்ஸ் விற்பனைக்குக் கிடைத்தது.

4வீல் டிரைவ் அம்சம் வழங்கப்பட்டதனால் தார் ராக்ஸ் 5 டோர் கூடுதல் ஆஃப்-ரோடு திறன்மிக்க கார் மாடலாக மாறியிருக்கின்றது. இதுதவிர பிரீமியம் அம்சங்களையும் மிக அதிக அளவில் தாங்கிய கார் மாடலாக இந்த வாகனம் காட்சியளிக்கின்றது. மிக முக்கியமாக பிரீமியம் லெதர் போர்த்தப்பட்ட இருக்கை, அமைதியான உட்பக்கம் (வெளிப்புற சத்தம் உள்பக்கத்தில் கேட்காது) ஆகியவற்றை இந்த கார் மாடல் தாங்கி இருக்கின்றது.

இத்துடன், இரண்டு 26.03 அங்குல டிஜிட்டல் திரைகள் (ஒன்று டிரைவருக்கானது, மற்றொன்று, இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமாக செயல்படும்), பனோரமிக் சன்ரூஃப், ஹர்மென் கர்டோன் பிரேண்ட் ஆடியோ சிஸ்டம் மற்றும் லெவல் 2 வகை அடாஸ் (Level 2 ADAS) அம்சம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுதவிர தார் ராக்ஸ் காரில் வழங்கப்பட்டு இருக்கும் இருக்கை வெண்டிலேட் வசதிக் கொண்டது என்றும், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிராவும் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. மஹிந்திரா தார் கார் மாடலைக் காட்டிலும் கூடுதல் டோர்களை மட்டுமல்ல அதிக இட வசதி மற்றும் சிறப்பம்சங்களைத் தாங்கியதாகவும் அது காட்சியளிக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மஹிந்திரா தார் கார் மாடலுக்கு கிடைத்துக் கொண்டிருந்ததைப் போலவே தார் ராக்ஸ் கார் மாடலுக்கும் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. சமீபத்தில் புக்கிங் விபரத்தின் வாயிலாகவே இது உறுதியாகி இருக்கின்றது. இந்த நிலையிலேயே தார் ராக்ஸ் கார் மாடலின் டெலிவரி பணிகள் தற்போது தொடங்கி இருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Monday, October 14, 2024, 14:32 [IST]
English summary
Mahindra thar roxx customer deliveries begin in india amid high demand
மேலும்... #mahindra #Mahindra Thar Roxx #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+