வெயிட்டிங்கே வெறியாகுதே! குடும்பத்துடன் பயணிக்கும் தார் ராக்ஸ் கார் நாளை அறிமுகம்!
சுதந்திர தினத்தை முன்னிட்டு மஹிந்திரா நிறுவனம் தனது தார் காரின் 5 டோர் வெர்ஷன் காரான தார் ராக்ஸ் காரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக நிறுவனம் முழுவதுமாக தயாராகியுள்ளது. இந்த காரின் 3 வெர்ஷன் ஏற்கனவே இந்திய மார்க்கெட்டில் மிகப்பெரிய ஹிட்டானா நிலையில் இதன் 5 டோர் வெர்ஷனுக்கு இதில் ரசிகர்கள் பலர் காத்திருக்கிறார்கள். இந்நிலையில் இந்த காரில் என்னென்ன விஷயங்கள் எல்லாம் புதிதாக அப்டேட்டாகி வரப்போகின்றன என்ற விரிவான விவரங்களை தான் இங்கே காணப் போகிறோம்.
இந்தியர்கள் மிக நீண்ட நாட்களாக எதிர்பார்த்த மஹிந்திரா நிறுவனத்தின் தார் ராக்ஸ் கார் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கிடையில் நாளை சுதந்திர தினத்தை முன்னிட்டு அறிமுகமாக உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் மஹிந்திரா நிறுவனம் தனது தார் காரின் இரண்டாம் தலைமுறை வெர்ஷனை வெளியிட்டது. அந்த கார் 3 டோர் வெர்ஷன் காராக இருக்கிறது. தற்போது இந்திய மார்க்கெட்டில் இந்த கார் சிறப்பாக விற்பனையாகி வருகிறது.

இந்நிலையில் இந்த காரை நீட்டிக்கப்பட்ட 5 டோர் வெர்ஷனாக தார் ராக்ஸ் என்ற காரை அந்நிறுவனம் உருவாக்கி உள்ளது0 இந்த கார் பின்பக்க சீட்டுக்கான பிரத்தியேக கதவுகள் கொண்ட காராக உருவாக்கப்பட்டுள்ளது. வெறும் கதவுகளை மட்டும் புதிதாக அப்டேட் செய்து இந்த காரை வெளியிடவில்லை. இந்த காரில் உள்ள அம்சங்களையும் அந்நிறுவனம் அப்டேட் செய்துள்ளது.
இந்த காரின் வெளிப்புற அம்சங்களை பொறுத்தவரை இந்த காரின் முன்பக்கம் புதிய கிரில் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோக சி வடிவ டிஆர்எல் மற்றும் வட்ட வடிவிலான ஹெட்லைகள் வழங்கப்பட்டுள்ளன. இதுபோக புதிய அலாய் வீல் டிசைன்கள் பின்பக்க குவாட்டர் கிளாஸ் வடிவமைப்பில் மாற்றம், தற்போது உள்ள தார் மாடல் உள்ள வீல் ஆர்ச்களை விட அதிக ஸ்கொயர் வடிவிலான புதிய டிசைன் மாற்றம் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளன.

இந்த காரின் உட்பகுதியை பொருத்தவரை பின்பக்க பயணிகள் சீட்டுக்கு அதிக இட வசதி வழங்கப்பட்டுள்ளது. பெரிய வீல் பேஸ் இருப்பதால் இந்த இட வசதியை அந்த நிறுவனத்தால் கொடுக்க முடிகிறது. இதுபோக பின்பக்க சீட்டில் உள்ள பயணிகளுக்கு நாம் ஏற்கனவே சொன்னது படி தனி கதவுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த காரில் அதிகமான சரக்குகளை ஏற்றி செல்வதற்கான இட வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த காரில் உள்ள அம்சங்களை பொருத்தவரை குடும்பத்துடன் பயணிக்கும் விதமான பல்வேறு அப்டேட்கள் கொண்டுவரப்பட்டுள்ள முக்கியமாக இதில் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக முன்பக்க சீட்டுகள் எல்லாம் வெண்டிலேட்டர் சீட்டுகளாகவும் வழங்கப்பட்டுள்ளன. தற்போது உள்ள கார் மாடலில் உள்ள இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் அளவைவிட கார் பெரிய இன்ஃபோடைமென்ட் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரில் அடாஸ் தொழில்நுட்பமும் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த காரில் உள்ள இன்ஜின் ஆப்ஷனை பொறுத்தவரை மஹிந்திரா நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை. நாளை தான் இது குறித்து தகவல் எல்லாம் வெளியாகும். ஆனால் இந்த காரில் இரண்டு பெட்ரோல் இன்ஜின் மற்றும் ஒரு டீசல் இன்ஜின் ஆப்ஷன் இடம்பெறும் என எதிர்பார்க்கலாம். கியர் பாக்ஸை பொறுத்தவரை மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்களும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த காரின் விலையை பொறுத்தவரை மஹிந்திரா நிறுவனம் அதிக பிரிமியம் அம்சம் கொண்ட காராக இருப்பதால், மஹிந்திரா தார் ராக்ஸ் ரூபாய் 15 லட்சம் முதல் ரூபாய் 19 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அறிமுக விலையாக குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் குறைவான விலையில் இந்த காரை விற்பனைக்கு கொண்டு வரவும் இந்நிறுவனம் திட்டமிடும் வாய்ப்பு இருக்கிறது.
இந்திய மார்க்கெட்டில் ஏற்கனவே மஹிந்திரா தார் ராக்ஸ் காருக்கு போட்டியாக மாருதி நிறுவனம் ஜிம்னி என்ற ஐந்து டோர் கொண்ட ஆஃப் ரோடு எஸ்யூவி காரை விற்பனை செய்து வருகிறது. இது போக போர்ஸ் நிறுவனத்தின் கூர்கா காரும் இந்த காருக்கு போட்டியாக விற்பனையாகி வருகிறது. இந்த கார்களின் விற்பனை எல்லாம் பின்னுக்கு தள்ளி மஹிந்திரா நிறுவனத்தின் தார் ராக்ஸ் அதிகமாக விற்பனை ஆகுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மஹிந்திரா நிறுவனத்தின் தார் காருக்கு மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. மற்ற நிறுவனங்களில் கார்கள் பெரிய அளவில் விற்பனையாகவில்லை என்றாலும், மஹிந்திரா நிறுவனத்தின் தார் கார் சிறப்பாக விற்பனையாகி வருகிறது. அதே போலவே இந்த தார் ராக்ஸ் காரும் நல்ல விற்பனையை பெறும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









