ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு இவ்வளவு மைலேஜ் தருமா? மஹிந்திரா தார் ராக்ஸ் காரை வாங்கலாமா வேணாமா?
மஹிந்திரா நிறுவனம் தனது தார் ராக்ஸ் காரை தற்போது இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே விற்பனையாகி வந்த மூன்று டோர் கொண்ட கார் காரின் நீட்டிக்கப்பட்ட வெர்ஷனாக, இந்த ஐந்து டோர் கொண்ட தார் ராக்ஸ் அறிமுகமாகியுள்ளது. இந்த பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களிலும் அறிமுகமாகியுள்ள நிலையில், இந்த காரின் மைலேஜ் குறித்த விவரங்களை காணலாம் பாருங்கள்.
மஹிந்திரா நிறுவனம் தனது தார் ராக்ஸ் காரை இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் இருக்கிறது. இதுதான் பேஸ் வேரியண்டில் இருக்கும் இன்ஜின் ஆப்ஷனாக உள்ளது. இந்த கார் ரூபாய் 12.99 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த இன்ஜின் 160 பிஎச்பி பவரையும் 330என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது.

இது போக கூடுதலாக 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன் இருக்கிறது. இந்த இன்ஜின் 150 பிஎச்பி பவரையும் 330என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு இன்ஜின்களும் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளன. இந்த காரில் பென்டா லிங்க் சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக வாட் லிங்க் பிரேக் லாகின் டிஃப்ரன்ஸியேஷன் வழங்கப்பட்டுள்ளது.
இந்த காரில் மொத்தம் 6 ஏர்பேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. பேஸ் வேரியண்ட் முதல் இந்த ஏர்பேக் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் மைலேஜ் குறித்து தெரிந்து கொள்ள பலரும் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டு இன்ஜின்களும் பயன்படுத்தப்படும் நிலையில், பல்வேறு விதமான டிரைவிங் கண்டிஷன்களை பொறுத்து இதன் மைலேஜ் மாறுபடும்.

பெட்ரோல் வேரியன்டை பொறுத்தவரை 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 12 முதல் 15 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நார்மல் கண்டிஷன் மைலேஜ் தான் ஆஃப்ரோடில் மாறுபடலாம். இந்த கார் ஒரு மணி நேரம் 60 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க இயக்கினால் நான்கு முதல் ஐந்து லிட்டர் பெட்ரோல் வரை செலவாக வாய்ப்புள்ளது.
டீசல் வேரியன்டை பொறுத்தவரை 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மைலேஜ் பொறுத்தவரை ஒரு லிட்டர் டீசலுக்கு 14 முதல் 17 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜினை ஒரு மணி நேரம் 60 கிலோமீட்டர் வேகத்தில் நார்மலான கண்டிஷன்ல இயக்கினால் 3.5 முதல் 4.5 லிட்டர் டீசல் வரை செலவாகும் என தெரிகிறது.

இந்த தகவலை வைத்து நீங்கள் மஹிந்திரா நிறுவனத்தின் தார் ராஸ்க் எவ்வளவு மைலேஜ் தரும் நீங்கள் எப்படியான கண்டிஷனை ஓட்டுவீர்கள் என்பதை பொறுத்து முடிவு செய்து கொள்ள முடியும். இதனால் இந்த கார் உங்களுக்கு சரியான தேர்வா என்பதையும் நீங்கள் முடிவு செய்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கிறது. இது ஒரு ஆஃப்ரோடு எஸ்யூவி கார் என்பதால் மைலேஜ் அதிகம் கிடைக்க வாய்ப்பில்லை.
பொதுவாக இந்த கார் ஆஃப் ரோடு கண்டிஷனில் இயங்கும்போது நார்மல் கண்டிஷன் இயங்குவதை விட அதிகமாக எரிபொருள் செலவாகும் இதையும் நீங்கள் கணக்கிட்டுக் கொள்ள வேண்டும். நீங்கள் ஆஃப்ரோடு அதிகம் பயணம் செய்யும் ஓவராக இருந்தால் இந்த மைலேஜ் கணக்கிட்டு வாகனத்தை வாங்குவது சரியாக இருக்காது. ஆஃப் ரோடு கண்டிசனுக்கு ஏற்ப மைலேஜ் மாறுபடும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த காரை வாங்கும் வாடிக்கையாளர்கள் மைலேஜ் கணக்கிட்டு வாங்குவது சரியான விஷயமாக இருக்காது. இந்த காரில் உள்ள வசதிகள் மற்றும் அம்சங்கள் ஆகியவற்றை பார்த்து இந்த அம்சங்கள் வசதிகள் எல்லாம் உங்களுக்கு தேவையா என்பதை யோசித்து இந்த காரை வாங்குவது தான் சிறந்தது. மைலேஜ் குறைவாக தான் இருக்கும் என்பதை மனதில் வைத்து காரை வாங்குங்கள்.


Click it and Unblock the Notifications









