இந்த தீபாவளிக்கு புக் பண்ணா அடுத்த தீபாவளிக்கு தான் கிடைக்கும்! எந்த காருக்கு இவ்வளவு டிமாண்ட் தெரியுமா?

மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் தனது கார் காரின் 5 டோர் கார் வெர்ஷன் காராக தார் ராக்ஸ் என்ற காரை இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியது. இந்த காருக்கான புக்கிங் கடந்த அக்டோபர் 3ம் தேதி துவங்கிய நிலையில், தற்போது இந்த காரை புக் செய்தால் டெலிவரிக்கு ஒரு ஆண்டு காலம் வரை வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மஹிந்திரா நிறுவனம் ஆஃப் ரோடு ஸ்டைல் எஸ்யூவி காரில் தார் என்ற காரை சிறப்பாக விற்பனை செய்து வருகிறது. இந்த கார் 3 டோர் கொண்ட வெர்ஷன் காராக மட்டுமே இந்திய மார்க்கெட்டின் விற்பனையாகி வந்த நிலையில், ஓட்டு நிறுவனமான மாருதி நிறுவனம் தனது ஜிமனி காரின் ஐந்து டோர் வெர்ஷன் காரை இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியது.

Mahindra Thar Roxx Waiting Period

இதையடுத்து இந்திய மக்களுக்கு ஐந்து டோர் கொண்ட ஆஃபர் உடைய எஸ்யூவி காரின் தேவை என்பதை உணர்ந்த மஹிந்திரா நிறுவனம் தனது கார் காரின் ஐந்து டோர் கொண்ட வெர்ஷன் காராக தார் ராக்ஸ் என்ற காரை உருவாக்கி இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காருக்கான புக்கிங் கடந்த 3ம் தேதியே துவங்கி விட்டது. வரும் 12ஆம் தேதி முதல் இந்த காரின் டெலிவரி துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த காருக்கான புக்கிங் துவங்கிய 60 நிமிடங்களிலேயே 1.76 லட்சம் பேர் இந்த காரை புக் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தனை மக்கள் தற்போது காரின் டெலிவரிக்காக காத்திருக்கிறார்கள். நாடு முழுவதும் அடுத்த மூன்று வாரங்களில் டெலிவரிகள் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது புக்கிங் செய்யப்பட்ட அனைத்து கார்களும் விற்பனை செய்யப்பட்டால் கூட நிர்வனத்திற்கு ரூபாய் 31,730 கோடி வருமானமாக கிடைக்கும்.

Mahindra Thar Roxx Waiting Period

தற்போது தொடர்ந்து புக்கிங் நடந்து வருகிறது. இதன் காரணமாக மஹிந்திரா நிறுவனம் இந்த காரை வாங்குவதற்கான காத்திருப்பு காலத்தை அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தான் மஹிந்திரா தார் ராக்ஸ் காரின் முதல் காரை ரூ1.31 கோடிக்கு ஏலம் போடப்பட்டு அந்த கார் டெலிவரி செய்யப்பட்டது.

மற்ற கார்கள் எல்லாம் படிப்படியாக டெலிவரிக்கு தயாராக இருக்கும் நிலையில், தற்போது இந்த காரை புக்கிங் செய்தால் டெலிவரி எடுப்பதற்கு ஓராண்டு காலம் வரை கூட காலம் எடுத்துக் கொள்ளலாம் என தெரிகிறது. இந்த தீபாவளிக்கு நீங்கள் இந்த காரை புக் செய்தால் அடுத்த தீபாவளிக்கு தான் இந்த கார் கிடைக்கும் அந்த அளவுக்கு இந்த காருக்கு மிகப்பெரிய அளவில் டிமாண்ட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mahindra Thar Roxx Waiting Period

ஆனால் இந்த தகவலை மஹிந்திரா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. மஹிந்திரா நிறுவனம் புக்கிங் வந்தது குறித்தும் அந்த நிறுவனத்தின் தயாரிப்பு திறன் குறித்தும் ஒப்பிட்ட பிறகுதான் அதிகாரப்பூர்வமான காத்திருப்பு காலம் குறித்து தகவல்கள் வெளியாகும் புக்கிங் அதிகமாக குவிந்துள்ளதால் தயாரிப்பு திறனை அதிகமாக்கி காத்திருப்பு காலத்தை குறைப்பதற்கு கூட வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ என் மற்றும் எக்ஸ்யூவி 700 ஆகிய கார்களை அறிமுகப்படுத்தும் போதும் இதே சூழ்நிலைதான் நிலவியது. தற்போது அந்த கார்களுக்கும் அதிகமான புக்கிங் குவிந்துவருகிறது. இதனால் மகேந்திரா நிறுவனம் தனது தயாரிப்பு அதிகப்படுத்தியதால் தற்போது மாதம் 50 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.

மஹிந்திரா நிறுவனம் தனது தார் ராஸ்க் கார் ரூ 12.99 லட்சம் முதல் ரூ 22.49 லட்சம் என்ற விலையில் விற்பனை செய்து வருகிறது. இந்த கார் 4 வீல் டிரைவ் ஆப்ஷன் உடன் விற்பனைக்கு வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டு விதமான இன்ஜின் ஆப்ஷன்களும் இதில் பொருத்தப்பட்டுள்ளன ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் கியர் ஆப்ஷன்களும் இந்த காரில் இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனத்தின் தயாரிப்புகள் எல்லாம் தற்போது மக்கள் மத்தியில் நல்ல பிரபலமாகி வருகிறது. இந்த கார்கள் எல்லாம் விரைவில் விற்பனையாகி வருகின்றன. அதிகமான புக்கிங் இருப்பதால் மஹிந்திரா நிறுவனம் தனது தயாரிப்பு திறனை அதிகப்படுத்துவதன் மூலம் காத்திருப்பு காலத்தை குறைத்தால் அதிகமான கார்கள் விற்பனையாகி நம்பர் 1 இடத்தை பிடித்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.

More from DriveSpark

Article Published On: Friday, October 11, 2024, 7:00 [IST]
English summary
Mahindra thar roxx waiting period extends more than a year
மேலும்... #mahindra #india #diwali
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X