ரோடே இல்லாத இடத்துலயும் அசால்டா போகும்! மஹிந்திரா தார் ராக்ஸ் ரிவியூ வீடியோ!
மஹிந்திரா நிறுவனம் தனது தார் காரின் ஐந்து டோர் வெர்ஷன் காராக மஹிந்திரா தார் ராக்ஸ் என்ற காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் குடும்பத்துடன் பயணிக்கும் ரக ஆப்-ரோடு அம்சங்கள் நிறைந்த காராக உருவாக்கப்பட்டுள்ளது. மஹிந்திரா கார் காரில் இருந்து இந்த காரில் ஏகப்பட்ட அப்டேட்டுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த காரை மஹிந்திரா தார் ரசிகர் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்தார்கள். தற்போது இந்த காரை வாங்க ஏராளமான நபர்கள் முன் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நமது டிரைவ்ஸ்பார்க் குழுவிற்கு மஹிந்திரா நிறுவனத்தின் தார் ராக்ஸ் காரை ஓட்டி பார்க்க அழைப்பு வந்தது. அதன் பெயரில் நமது குழுவினர் கேரள மாநிலத்தில் உள்ள கொச்சின் பகுதிக்கு சென்றனர். அங்கு இந்த காரை ஓட்டி பார்த்தனர். அங்கு இந்த காரை ஓட்டி பார்த்தபோது அவர்களுக்கு கிடைத்த அனுபவம் குறித்த விரிவான விபரங்களை வீடியோவாக வெளியிட்டுள்ளோம். இந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
மஹிந்திரா தார் ராக்ஸ் காரைப் பொறுத்தவரை மகேந்திரா கார் காரில் இருந்து உட்புறமும் வெளிப்புறமும் ஏகப்பட்ட அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. முக்கியமாக இந்த காரின் முன் பக்கம் எல்இடி ஹெட் லைட் மற்றும் சி வடிவ டிஆர்எல் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்க கிரில் பகுதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பானட் பகுதி பழைய கார் போலவே அமைக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் பின்பக்க சீட்டுகளுக்கான தனிக்கதவுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த காரில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டு விதமான இன்ஜின் ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளது. மற்றும் ரியர் வீல் டிரைவ் 4X4 என்ற டிரைவ் ஆப்ஷனும் இதில் வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் ரூபாய் 12.99 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. குடும்பத்துடன் ஆஃப் ரோடு பயணம் செய்ய விரும்பும் மக்கள் இந்த காரை துணிந்து தேர்வு செய்யலாம்.


Click it and Unblock the Notifications








