பெட்ரோலை விட டீசல் தார் காரை தான் மக்கள் விரும்புறாங்க! எந்த அளவிற்கு தெரியுமா?
மஹிந்திரா நிறுவனத்தின் தயாரிப்புகள் எல்லாம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. எஸ்யூவி கார்கள் என்றாலே மஹிந்திரா நிறுவனத்தின் கார்கள் தான் மக்களுக்கு அதிகம் நினைவில் வருகிறது. அந்த அளவிற்கு பெயர் பெற்ற நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் விற்பனை செய்யும் தார் கார் மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றுள்ளது. இந்த காரின் விற்பனை சிறப்பாக இருக்கிறது. போட்டி நிறுவனங்களின் தயாரிப்புகளை எல்லாம் பெண்ணுக்கு தள்ளி தார் கார் சிறப்பாக விற்பனையாகி வரும் காராக உள்ளது. இந்த காரின் மே மாத விற்பனை விபரங்கள் வெளியாகி உள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்நிறுவனம் தற்போது இந்தியாவில் மஹிந்திரா 3எக்ஸ்ஓ, மஹிந்திரா 400, தார், ஸ்கார்பியோ, ஸ்கார்பியோ என், பொலிரோ, எக்ஸ்யூவி 700 ஆகிய கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்த அத்தனை கார்களும் மார்க்கெட்டில் மிகப்பெரிய ஹிட்டான கார்களாக இருக்கின்றன. மஹிந்திரா நிறுவனம் தொடர்ந்து சிறப்பான விற்பனையை பெறும் நிறுவனமாக இருக்கிறது.

இந்நிறுவனம் விற்பனை செய்யும் மகேந்திரா தர்காருக்கு மார்க்கெட்டில் தனி மரியாதை இருக்கிறது. இந்த காரின் விற்பனை தொடர்ந்து சிறப்பாக இருந்து வருகிறது. கடந்த மே மாதம் மட்டும் 5750 தார் கார்கள் விற்பனை விற்பனையாகியுள்ளன. இது கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் மொத்தம் விற்பனையான கார்களில் 5207 கார்கள் டீசல் வெர்ஷன் கார்களாக இருக்கிறது. பெட்ரோல் வெர்ஷனை பொருத்தவரை வெறும் 543 கார்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளன.
இதுவே இந்த காரின் விற்பனை கடந்த ஆண்டு மே மாதம் மொத்தம் டீசல் வெர்ஷன் மட்டும் 3190 கார்களும் பெட்ரோல் வெர்ஷனில் 1106 கார்களும் விற்பனையாகி வந்தன. தற்போது பெட்ரோல் வெர்ஷன் கார்களின் விற்பனை என்பது குறைந்துவிட்டது. அதே நேரம் டீசல் வெர்ஷன் விற்பனை அதிகரித்துவிட்டது. மக்கள் பெட்ரோல் வெர்ஷனை விட டீசல் வெர்ஷன் கார்களை தான் அதிகம் விரும்புகிறார்கள்.

இதே மஹிந்திரா கார் காரின் கடந்த ஏப்ரல் மாத விற்பனையை பார்க்கும் போது மொத்தம் 524 கார்கள் டீசல் வெர்ஷனில் விற்பனையாகி உள்ளன. இதுவே பெட்ரோல் வெர்ஷனை பார்க்கும்போது வெறும் 482 கார்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளது. மஹிந்திராவின் தார் காரில் டீசல் வெர்ஷன் அதிகமாக விற்பனையாகிறது. பொதுவாக பெட்ரோல் வெர்ஷன், டீசல் வெர்ஷன் கார்கள் இருந்தால் பெட்ரோல் வெர்ஷன் தான் அதிகமாக விற்பனை ஆகும்.
டீசல் வெர்ஷன் கார்கள் அதிகமாக விற்பனையாகி வருகிறது. தற்போது இந்த கார்களின் உற்பத்தியை ஓரளவுக்கு மஹிந்திரா நிறுவனம் குறைத்துள்ளது. இதற்கு முக்கியமான காரணம் தார் கார் விரைவில் 5 டோர் வெர்ஷன் கொண்ட கார் ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக இந்த காரின் விற்பனை மந்தமாக வாய்ப்புகள் உள்ளன.
ஏற்கனவே மார்க்கெட்டில் மாருதி நிறுவனம் ஜிம்னி என்ற ஆஃப் ரோடு ஸ்டைல் எஸ்யூவி காரை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. அந்த காருக்கு போட்டியாக மஹிந்திரா நிறுவனம் தனது தார் காரின் 5டோர் ஷெர்ஷனை விரைவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. இந்த காரை அந்நிறுவனம் ஏற்கனவே இந்திய சாலைகளில் சோதனை செய்ய துவங்கி விட்டது. இதன் ஸ்பை புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றன.
நமக்கு கிடைத்த தகவல் படி மஹிந்திரா நிறுவனம் தனது 5 டோர் வெர்ஷன் கொண்ட தார் காரை வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி விற்பனைக்காக அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் அறிமுகமானால் மாருதி நிறுவனத்தின் ஜிம்னி காருக்கு கடும் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். ஏற்கனவே மாருதி நிறுவனத்தின் ஜிம்னி கார் விற்பனையில் மிக மோசமான நிலையை எட்டி உள்ளது.
ஆஃப் ரோடு ஸ்டைல் எஸ்யூவி கார்களில் மஹிந்திரா நிறுவனத்தின் தார் கார் தனக்கென மார்க்கெட்டில் மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ள நிலையில், போட்டி நிறுவனங்களின் தயாரிப்புகள் இந்த இடத்தை எட்டிப் பிடிக்க முயற்சித்தாலும், மஹிந்திரா தார் அதை விடாமல் காத்து வருகிறது. போட்டி நிறுவனங்கள் இன்னும் தங்கள் தயாரிப்புகளை மேம்படுத்துவதன் மூலம் மட்டுமே தார்க்காரின் விற்பனையை தட்டிப் பறிக்க முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மகேந்திரா நிறுவனம் தனது தார் காரை நீண்ட ஆண்டுகளாக இந்திய மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகிறது இந்த காருக்கு நல்ல மவுசு இருக்கிறது இந்தியர்கள் பலர் இந்த காரை விரும்பி வாங்கி வருகிறார்கள் இது அவர்களுக்கு தனி அந்தஸ்தை தருவதாக கருதுகிறார்கள் இதனால் தொடர்ந்து இந்த காரின் விற்பனை சிறப்பாக இருந்து வருகிறது.


Click it and Unblock the Notifications








