இனி எல்லாரும் இந்த கலர்தான் வேணும்னு அடம் பிடிக்க போறாங்க... மஹிந்திரா அதிரடியால் கலங்கி போன மாருதி...

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மஹிந்திரா தார் (Mahindra Thar). இது எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். மஹிந்திரா நிறுவனம் தார் எஸ்யூவி காரில் 5 கலர் ஆப்ஷன்களை மட்டுமே வழங்கி வந்தது.

அவை ரெட் ரேக், எவரெஸ்ட் ஒயிட், ஸ்டெல்த் பிளாக், டெசர்ட் ஃப்ரீ மற்றும் டீப் க்ரே ஆகியவை ஆகும். இந்த வரிசையில் மஹிந்திரா தார் எஸ்யூவி காரில் தற்போது புதிதாக ஒரு கலர் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. அது டீப் ஃபாரஸ்ட் கலர் ஆப்ஷன் ஆகும். இதன் மூலமாக மஹிந்திரா தார் எஸ்யூவி காரின் கலர் ஆப்ஷன்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இந்திய சந்தையில், மிகவும் பிரபலமாக திகழ்ந்து வரும் மஹிந்திரா ஸ்கார்பியோ என் (Mahindra Scorpio N) காரில்தான், இந்த டீப் ஃபாரஸ்ட் கலர் ஆப்ஷன், முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டது.

Mahindra Thar Colours

அதை தொடர்ந்து மஹிந்திரா தார் எஸ்யூவி காரில் இந்த கலர் ஆப்ஷன் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய கலர் ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதன் மூலம், இனி வரும் நாட்களில் மஹிந்திரா தார் எஸ்யூவி காரின் விற்பனை எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செயல்திறனை பொறுத்தவரையில் மஹிந்திரா தார் எஸ்யூவி காரில் தற்போது மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்பட்டு வருகின்றன. அவை 1.5 லிட்டர் டீசல் இன்ஜின், 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆகியவை ஆகும்.

Mahindra Thar Deep Forest

இதில், 1.5 லிட்டர் டீசல் இன்ஜினின் பவர் அவுட்புட் 117 பிஹெச்பி மற்றும் 300 என்எம் ஆக இருக்கிறது. மறுபக்கம் 2.2 லிட்டர் டீசல் இன்ஜினின் பவர் அவுட்புட் 130 பிஹெச்பி மற்றும் 300 என்எம் ஆக உள்ளது. அதே நேரத்தில் 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜினானது, மொத்தம் 2 வகையான ட்யூனிங்கில் கிடைத்து கொண்டுள்ளது. அவை 150 பிஹெச்பி/300 என்எம் மற்றும் 150 பிஹெச்பி/320 என்எம் ஆகியவை ஆகும். டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் ஆகிய கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மஹிந்திரா தார் எஸ்யூவி காரின் ஆரம்ப விலை 11.35 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 17.60 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ஃபோர்ஸ் கூர்கா (Force Gurkha) மற்றும் மாருதி சுஸுகி ஜிம்னி (Maruti Suzuki Jimny) ஆகிய கார்களுடன், மஹிந்திரா தார் போட்டியிட்டு வருகிறது. இந்த சூழலில் தார் எஸ்யூவியில் புதிய கலர் ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், கூர்கா மற்றும் ஜிம்னிக்கு நெருக்கடி அதிகமாகலாம்.

மஹிந்திரா தார் போன்ற ஒரு முரட்டுத்தனமான ஆஃப் ரோடு எஸ்யூவி காருக்கு இந்த டீப் ஃபாரஸ்ட் கலர் ஆப்ஷன் மிகவும் பொருத்தமாக இருக்கலாம் என நாங்கள் கருதுகிறோம். எனவே இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த புதிய கலர் ஆப்ஷனுக்கு நல்ல வரவேற்பு கிடைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 21, 2024, 16:14 [IST]
English summary
Mahindra thar suv gets new colour option check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+