ஒரு காருக்காக இவ்ளோ பேர் வெயிட் பண்ணீட்டு இருக்காங்களா! வாங்கனா இததான் வாங்குவன்னு ஒத்த கால்ல நிக்கறாங்க!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மஹிந்திரா தார் (Mahindra Thar). லைஃப்-ஸ்டைல் எஸ்யூவி (Life-style SUV) ரகத்தை சேர்ந்த மஹிந்திரா தார் காரை டெலிவரி பெற இந்திய வாடிக்கையாளர்கள் பலரும் தற்போது ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்.

மஹிந்திரா நிறுவனத்தின் கார்களை எவ்வளவு வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து விட்டு டெலிவரிக்காக காத்து கொண்டுள்ளனர்? என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி நடப்பு 2024ம் ஆண்டு மே மாத நிலவரப்படி மஹிந்திரா கார்களின் டெலிவரிக்காக சுமார் 2.20 லட்சம் வாடிக்கையாளர்கள் காத்து கொண்டுள்ளனர். அதாவது மஹிந்திரா நிறுவனம் இன்னும் 2.20 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு கார்களை டெலிவரி செய்ய வேண்டியுள்ளது. இதில், மஹிந்திரா தார் எஸ்யூவி காரின் டெலிவரிக்காக காத்து கொண்டுள்ள வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மட்டும், 59 ஆயிரமாக உள்ளது. இது இந்தியாவில் மஹிந்திரா தார் எஸ்யூவி காரின் பிரபலத்தை வெளிக்காட்டுவதாக உள்ளது.

Mahindra Thar

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மஹிந்திரா தார் எஸ்யூவி காரின் ஆரம்ப விலை 11.35 லட்ச ரூபாயாக இருக்கிறது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 17.60 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

இந்த விலைக்கு மஹிந்திரா தார் எஸ்யூவி சிறப்பான ஒரு தயாரிப்பாக கருதப்படுவதால்தான், வாடிக்கையாளர்கள் பலரும் ஆர்வத்துடன் முன்பதிவு செய்து வருகின்றனர். இதன் காரணமாகவே மஹிந்திரா நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்ய வேண்டிய தார் எஸ்யூவி கார்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது.

Mahindra Thar Side Design

மஹிந்திரா தார் எஸ்யூவி காரில், 1.5 லிட்டர் டீசல் இன்ஜின், 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் என்று மொத்தம் மூன்று இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்பட்டு வருகின்றன. டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் உள்ளிட்ட கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் (Gear Box Options)கொடுக்கப்படுகின்றன. நிறைய இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் இருக்கின்றன காரணத்தால், பல தரப்பட்ட வாடிக்கையாளர்களையும் மஹிந்திரா தார் எஸ்யூவி கார் கவர்ந்து இழுக்கிறது.

மஹிந்திரா தார் எஸ்யூவி காரில் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு டீப் ஃபாரஸ்ட் என்ற கலர் ஆப்ஷன் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் தற்போது ஒட்டுமொத்தமாக 6 கலர் ஆப்ஷன்களில் மஹிந்திரா தார் எஸ்யூவி கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஃபோர்ஸ் கூர்கா (Force Gurkha) மற்றும் மாருதி சுஸுகி ஜிம்னி (Maruti Suzuki Jimny) ஆகிய கார்களுக்கு, மஹிந்திரா தார் எஸ்யூவி மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக பார்க்கப்படுகிறது. அடிக்கடி ஆஃப்ரோடு சாகச பயணங்களை மேற்கொள்பவர்களுக்கு, இது மிகச்சிறந்த கார் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

மஹிந்திரா நிறுவனம் இன்னும் சில மாதங்களில் தார் எஸ்யூவி காரின் 5 டோர் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதற்கு அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த புதிய மாடலின் வருகைக்கு பின், மஹிந்திரா தார் எஸ்யூவி காரின் பெண்டிங் ஆர்டர்களின் எண்ணிக்கை மேலும் உயரலாம் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

More from DriveSpark

Article Published On: Thursday, May 23, 2024, 23:50 [IST]
English summary
Mahindra thar suv pending orders may 2024 all you need to know
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+