மஹிந்திரா வாகனம் இது என்று சொன்னால் உங்களால் நம்பவே முடியாது... தண்ணி போல பணத்தை செலவு பண்ணி இருக்காங்க!!

மஹிந்திரா தார் (Mahindra Thar) இந்தியாவில் அதிக பேர் வாங்கும் ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனம். 3 கதவுகளை மட்டுமே கொண்டிருப்பினும் மக்கள் நிறைய பேர் மஹிந்திரா தாரை விரும்பி வருகின்றனர் என்பதை புள்ளி விபரங்கள் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. அதற்கு முக்கியமான காரணங்களுள் ஒன்று, மஹிந்திரா தார் வாகனத்தை விருப்பத்திற்கு ஏற்ப மாடிஃபிகேஷன் செய்து கொள்வது எளிது என்பதாகும். இந்த வகையில், இங்கு ஒரு மஹிந்திரா தார் வாகனம் அளவில் பெரியதான 22 இன்ச் சக்கரங்கள் உடன் மாடிஃபிகேஷன் செய்யப்பட்டு உள்ளது.

கார் மாடிஃபிகேஷன்களுக்கு நம் இந்தியாவில் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. இருப்பினும், ஒருபக்கம் கார்களை தங்களது விருப்பத்திற்கு ஏற்றப்படி மாற்றிக் கொள்பவர்கள் தொடர்ந்து மாடிஃபிகேஷன் செய்துக் கொண்டுத்தான் இருக்கின்றனர். கார் மாடிஃபிகேஷன்களை முறையான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப் ஷோரூம்கள் மூலமாக மேற்கொண்டால் பிரச்சனையே இல்லை.

mahindra thar with 22-inch wheels

மஹிந்திரா தார் ஆனது மாடிஃபிகேஷன் செய்வதற்கு ஏற்ற வாகனமாக விளங்குகிறது. 2020ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து பல்வேறு மாடிஃபை செய்யப்பட்ட மஹிந்திரா தார் வாகனங்களை நமது செய்தித்தளத்தில் பார்த்துள்ளோம். அந்த வகையில், கருப்பு நிறத்திலான மஹிந்திரா தார் ஒன்று அளவில் பெரியதான சக்கரங்கள் உடன் மிகவும் முரட்டுத்தனமான தோற்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

மாஃபியா தார் 4.0 என அழைக்கப்படும் இந்த குறிப்பிட்ட தார் வாகனத்தின் முன்பக்கம் முழுவதுமாக புதியதொரு தோற்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், முன்பக்க பம்பரை புரோமேன் உலோக ஆஃப்-ரோடு பம்பராக மாற்றியுள்ளனர். மேலும் இந்த பம்பரில் சிறிய அளவில் புல் பாரை கொடுத்துள்ளனர். நம் தமிழ்நாட்டில், புல் பார் உடன் கார் ஓட்டுவது சட்டத்திற்கு புறம்பானது ஆகும்.

mahindra thar with 22-inch wheels

முன்பக்க பம்பரில் பொருத்தப்பட்டுள்ள எல்இடி புரோஜெக்டர் ஃபாக் விளக்குகள் பார்வையை இன்னும் பிரகாசப்படுத்தும் விதமாக வழங்கப்பட்டுள்ளன. தார் வாகனத்தில் மஹிந்திரா வழங்கிய க்ரில் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக ஜீப் வ்ராங்லர் வாகனத்தில் வழங்கப்படும் 7-ஸ்லாட் க்ரில் போன்றதான ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. இதற்கேற்ப, டி.ஆர்.எல்-கள் மற்றும் இண்டிகேட்டர்களுடன் ஹெட்லைட்களும் மாற்றப்பட்டுள்ளன.

க்ரில் மட்டுமின்றி, ஹெட்லைட்களையும் ஜீப் வ்ராங்க்லரின் ஹெட்லைட் டிசைனில் இருந்து பெற்றுள்ளதாக இந்த தார் வாகனத்தை மாடிஃபை செய்தவர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல், வாகனத்திற்கு மேற்கூரையில் டிஃபெண்டர் கார்களில் வழங்கப்படுவதை போன்று விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த தார் வாகனத்தில் வழங்கப்பட்டுள்ள முக்கியமான சிறப்பம்சமான 22-இன்ச் ஆஃப்-ரோடு சக்கரங்களில் ரேடார் ரப்பர் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

mahindra thar with 22-inch wheels

வெளிப்பக்க கதவுகளுக்கு கீழே, கதவு கைப்பிடிகள் மற்றும் பின்பக்கத்தை காட்டும் வெளிப்பக்க கண்ணாடிகள் மஹிந்திரா தாரில் வழக்கமான சொரசொரப்பான ஃபினிஷிங்கில் வழங்கப்படுகின்றன. அவை இந்த குறிப்பிட்ட தார் வாகனத்தில் பளபளப்பான கருப்பு நிற ஃபினிஷிங்கிற்கு மாற்றப்பட்டுள்ளன. அதேபோல், தார் வாகனத்தில் பின்பக்கத்தை காட்டும் வெளிப்பக்க கண்ணாடிகளை எலக்ட்ரிக் மூலமாக மடக்க முடியாது, ஆனால் அந்த வசதியை இந்த தாரில் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.

பயணிகள் வாகனத்திற்குள் ஏற/இறங்குவதற்கான படிக்கட்டு ஆனது கதவுகளை பொறுத்து செயல்படுமாம். அதாவது, கதவு திறந்தால் தானாக படிக்கட்டு வெளியே வருமாம். கதவுகளை மூடியவுடன் படிக்கட்டும் தானாக உள்ளே சென்றுவிடும் என தெரிவித்துள்ளனர். இவற்றுடன், ஸ்டெல்லர் ரூஃப் கேரியரும் இந்த தார் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக, வாகனத்தின் மேற்கூரையிலும் பொருட்களை கொண்டு செல்ல முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கரடு, முரடான ஆஃப்-ரோடு பயணங்களுக்கு மஹிந்திரா தார் மிகவும் ஏற்ற வாகனம் ஆகும். பொதுவாகவே தார் பார்ப்பதற்கு முரட்டுத்தனமான வாகனம் ஆகும். அத்தகைய வாகனத்தை இவர்கள் இன்னும் மெருக்கேற்றி உள்ளனர் என்றுதான் சொல்ல வேண்டும். மஹிந்திரா தார் வாகனத்தின் புதிய 5-டோர் வெர்சன் ராக்ஸ் என்கிற பெயரில் விரைவில் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Sunday, August 11, 2024, 17:00 [IST]
English summary
Mahindra thar with 22 inch wheels looks very rugged check all details here
மேலும்... #car modification #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X