குட்டியானை எல்லாம் ஓரமா போ! இனி ஊருக்கு ஊரு இந்த வண்டி தான் ஓடப்போகுது!
மஹிந்திரா லாஸ்ட் மைல் மொபிலிட்டி லிமிடெட் (எம்எல்எம்எம்எல்), ஒரு முக்கியமான எலெக்ட்ரிக் மூன்றுசக்கர வாகன உற்பத்தியாளராக உள்ளது, உலக இவி நாளில் தனது புதிய கம்ரஷியல் எலெக்ட்ரிக் 4வீலர் வாகனத்தின் பெயரை அறிவித்துள்ளது. "E-ZEO" என்று பெயரிடப்பட்ட இந்த வாகனம், "ஜீரோ எமிஷன் ஆப்ஷன் (ZEO)" என்பதை குறிக்கிறது. மற்றும் உயர் மின்னழுத்த கட்டமைப்பைக் கொண்ட சிறு கமர்ஷியல் வாகன (எஸ்.சி.வி) பிரிவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மஹிந்திரா நிறுவனம், E-ZEO-வின் சிறந்த ஆற்றல் திறன், கூடுதல் ரேஞ்ச் மற்றும் விரைவான சார்ஜிங் நேரங்களை கொண்டிருக்கும் என தெரிவித்துள்ளது. மஹிந்திரா லாஸ்ட் மைல் மொபிலிட்டி, எம்.டி & சி.இ.ஓ, சுமன் மிஸ்ரா கூறும் போது, "கடைசி மைல் எலெக்ட்ரிக் மூன்றுசக்கர வாகனத்தை சிறப்பாக விற்பனை செய்து வரும் நிலையில் தற்போது , எங்கள் நான்குசக்கர வாகனமான ' E-ZEO'வின் பிராண்ட் பெயரை வெளிப்படுத்துவதில் எங்களுக்கு மகிழ்ச்சி" என கூறினார்.

மேலும் அவர் கூறும் போது இந்த பெயர் எங்களின் நோக்கத்துடன் ஆழமாக ஒத்திசைந்தது மற்றும் எலெக்ட்ரிக் வாகனத்தை ஏற்றுக்கொள்வதை துரிதப்படுத்துவதற்கான உலகளாவிய முயற்சிகளுடன் ஒத்துப்போகிறது, குறிப்பாக இரண்டு டன் கீழ் உள்ள பிரிவில். மஹிந்திரா நம்பிக்கையை பெற்று வருகிறது ' E-ZEO' நகர்ப்புற லஜிஸ்டிக்ஸை மறுவடிவமைத்து செய்து எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வருமானத்தை ஏற்படுத்தும்." என கூறினார்.
E-ZEO 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி உள்ளூர் சந்தையில் வெளியிடப்பட உள்ளது. மஹிந்திராவின் கடைசி மைல் மொபிலிட்டி பிரிவு எலெட்ரிக், பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் டீசல் மூலம் இயங்கும் வாகனங்களை உள்ளடக்கிறது. இது பயணிகள் மற்றும் சரக்கு என இரண்டு வகை வாகனங்களும் கொண்டுள்ளதாக இருக்கிறது. இதில் மஹிந்தி ஜீட்டோ 4 வீலர் மற்றும் ஆல்ஃபா சிரீஸ் 3 வீலர்களும் உள்ளடங்கும்.
மஹிந்திராவின் பல்வேறு வகைகளில் ஸோர் கிராண்ட் மற்றும் டிரீயோ சீரீஸ் போன்ற எலெக்டரிக்கில் மட்டுமே உள்ள வாகனங்களும் இதில் அடங்கும். இந்த வாகனங்கள் நகர்ப்புற மற்றும் கிராமப்புற போக்குவரத்து தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன. மஹிந்திரா வெளியிட்ட டீஸர் வீடியோ, வரவிருக்கும் E-ZEO-வின் வெளிப்புற அம்சங்களை காண்பித்து, அது ஜீட்டோ மாடலை அடிப்படையாகக் கொண்டிருக்கலாம் என தெரிகிறது.
E-ZEO-வின் வெளிப்புற வடிவமைப்பில் செவ்வக ORVMs இல் நீல நிற முக்கிய அம்சங்கள் மற்றும் மையத்தில் மஹிந்திரா லோகோ கொண்ட முன் கிரில் ஆகியவை உள்ளன. பக்கங்களில் வழக்கமான EV வரைபடங்கள், ஹெக்ஸாகனல் கீழ் கிரில் பகுதி, மறுவடிவமைக்கப்பட்ட முன்பக்க பம்பர், வீல் கவர் வடிவமைப்பு மற்றும் எல்இடி DRL ஸ்ட்ரிப் போன்ற வடிவமைப்பு கூறுகளும் இருக்கிறது.. ஒட்டுமொத்த வடிவமைப்பு வழக்கமான ஜீட்டோ மாடலில் இருந்து ஒரு பரிணாம வளர்ச்சியைக் பெற்றிருப்பதை குறிக்கிறது.
எலெக்ட்ரிக் வாகனங்களில் புதுமைக்கான மஹிந்திராவின் அர்ப்பணிப்பு அவர்களின் சமீபத்திய வழங்கலில் தெளிவாக உள்ளது. E-ZEO நகர்ப்புற லஜிஸ்டிக்ஸை மேம்படுத்தும் அதே நேரத்தில் பூஜ்ஜிய-உமிழ்வு தொழில்நுட்பத்தின் மூலம் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை ஊக்குவிக்கிறது. இது எதிர்கால உலகிற்கான சிறந்த சூழ்நிலையை உருவாக்குகிறது. அரசு விதிகளுக்கு ஏற்ப செயல்படுகிறது.
இந்தியாவில் சரக்கு வாகன செக்மெண்டில் எலெக்ட்ரிக் வாகனங்களை முதலில் கடைசி மைல் டெலிவரி தொழிலில் தான் சுலபமாக கொண்டு வர முடியும். அதற்கு இது போன்ற வாகனங்கள் நிச்சயம் பெரிய அளவில் பலனுள்ளதாக இருக்கும். இதை வாகன தயாரிப்பு நிறுவனங்கள் சிறந்த முறையில் உருவாக்கினால் நிச்சயம் விற்பனை அதிகமாகும்.
தற்போது உள்ள பெட்ரோல் டீசல் வாகனங்களை ஒப்பிடும் போது எலெக்ட்ரிக் வாகனங்கள் குறைவான செலவை ஏற்படுத்தக்கூடியவை இதற்கு பராமரிப்பு செலவு என எதுவும் கிடையாது. வாகன தயாரிப்பு நிறுவனங்களும் இப்படியான வாகனங்களை தயாரிக்க அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனத்தின் E-ZEO என்ற வாகனம் நிச்சயம் பெரிய அளவில் பலனை தரும் வாகனமாக இருக்கும் என்பதில் எந்த விதமான மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. இந்த வாகனம் விற்பனைக்கு வரும் போது கமர்ஷியல் வாகன பிரிவில் மிகப்பெரிய புரட்சியே ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.


Click it and Unblock the Notifications








