டாடாவுக்கு இப்போவே வேர்க்க ஆரம்பிச்சி இருக்கும்! மஹிந்திரா தரமான செய்கைக்கு தயாராகிட்டு இருக்கு!!
மஹிந்திரா (Mahindra), இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான இது, எலக்ட்ரிக் கார்கள் விஷயத்திலும் கடந்த சில வருடங்களாக முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில் கடந்த 2022ஆம் ஆண்டில் மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மேலும் புது, புது எலக்ட்ரிக் கார்களிலும் மஹிந்திரா கவனம் செலுத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக, புதிய மஹிந்திரா எக்ஸ்.இ.வி 9இ (XEV 9e) மற்றும் பிஇ 6இ (BE 6e) என்கிற எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களை இந்த நிறுவனம் வெளியீடு செய்கிறது. இந்த புதிய மஹிந்திரா எலக்ட்ரிக் கார்களை பற்றிய விரிவான விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களுக்கான மார்க்கெட் மெல்ல, மெல்ல விரிவடைந்து வருகிறது. இதனை துவங்கி வைத்தது என்னமோ டாடா மோட்டார்ஸ் என்றாலும், டாடா நிறுவனத்தை போன்று மஹிந்திராவும் எலக்ட்ரிக் கார்களுக்காக நிறைய திட்டங்களை வைத்துள்ளது. அதன்படி, எக்ஸ்.இ.வி மற்றும் பிஇ என 2 புதிய பிராண்ட்களை எலக்ட்ரிக் கார்களுக்காக மஹிந்திரா அறிமுகம் செய்ய உள்ளது.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ளதன் படி, வருகிற நவம்பர் 26ஆம் தேதியில் சென்னையில் இருந்து உலகளவில் இந்த புதிய எலக்ட்ரிக் கார் பிராண்ட்களை மஹிந்திரா அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது, இந்த பிராண்ட்களில் இருந்து உருவாக்கப்படும் புதிய மஹிந்திரா எலக்ட்ரிக் கார்கள் உலகம் முழுவதும் விற்பனை செய்யப்பட உள்ளன. இந்த புதிய மஹிந்திரா பிராண்ட்களில் இருந்து முதல் எலக்ட்ரிக் கார்களாக எக்ஸ்.இ.வி 9இ மற்றும் பிஇ 6இ வருகிற நவம்பர் 26ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளன.
எலக்ட்ரிக் கார்களை உருவாக்குவதற்காக மஹிந்திரா வடிவமைத்த இன்க்லோ (INGLO) பிளாட்ஃபாரத்தில் தான் இந்த புதிய மஹிந்திரா எலக்ட்ரிக் கார்களும் வடிவமைக்கப்பட உள்ளன. இதன்படி, இந்த எலக்ட்ரிக் கார்களில் அட்வான்ஸான பாதுகாப்பு வசதிகளும், சிறப்பான பெர்ஃபார்மன்ஸும், அதிகமான ரேஞ்சும் கிடைக்கும் என மஹிந்திரா தெரிவிக்கிறது.

மஹிந்திரா அறிமுகம் செய்ய உள்ள எக்ஸ்.இ.வி 9இ எலக்ட்ரிக் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது மஹிந்திராவின் லக்சரியான காராக உருவாக்கப்பட உள்ளது. இந்தியாவின் லக்சரியான எலக்ட்ரிக் கார்கள் மார்க்கெட்டில் எக்ஸ்.இ.வி 9இ பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்கிற அளவிற்கு இதனை மஹிந்திரா தூக்கி வைத்து பேசுகிறது. இந்தியாவில் விலையுயர்ந்த எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்வதில் மெர்சிடிஸ்-பென்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ நிறுவனங்கள் தற்சமயம் முன்னிலையில் உள்ளன.
மறுப்பக்கம், பிஇ 6இ எலக்ட்ரிக் கார் ஆனது கம்பீரமான தோற்றத்துடன் பெர்ஃபார்மன்ஸ் மிக்க எலக்ட்ரிக் காராக உருவாக்கப்படுகிறது. இதற்கேற்ப இந்த எலக்ட்ரிக் கார் பார்ப்பதற்கு முரட்டுத்தனமான தோற்றத்தில் இருக்கும். இந்த எலக்ட்ரிக் கார்கள் தொடர்பாக தற்போது வெளியிடப்பட்டுள்ள டீசர் வீடியோவில், இந்த எலக்ட்ரிக் கார்களின் உட்புறம் மற்றும் வெளிப்புற தோற்றங்கள் காட்டப்பட்டுள்ளன.

இந்த எலக்ட்ரிக் கார்களை உருவாக்க பயன்படுத்தப்படும் இன்க்லோ பிளாட்ஃபாரம் முழுக்க முழுக்க இந்தியாவிற்கும், இந்திய மக்களுக்குமான பிளாட்ஃபாரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது, மஹிந்திராவின் இன்க்லோ பிளாட்ஃபாரத்தில் வருங்காலங்களில் உருவாக்கப்படும் எலக்ட்ரிக் கார்கள் இந்திய சாலைகளுக்கும், இந்திய வெப்ப சூழலுக்கும் ஏற்றவையாக இருக்கும் என மஹிந்திரா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய பி.இ.வி 9இ மற்றும் பிஇ 6இ எலக்ட்ரிக் கார்களை முக்கியமாக வெளிநாட்டு சந்தைகளை டார்க்கெட் செய்தே மஹிந்திரா களமிறக்குவதாக எண்ணுகிறோம். அதனால்தான், புதிய பிராண்ட்களில் முதல் எலக்ட்ரிக் கார்களை சற்று விலைமிக்கதாக மஹிந்திரா கொண்டுவருகிறது. ஏனெனில், இதன் மூலமாக இந்திய மார்க்கெட்டில் கவனத்தை பெறும் அதேநேரம், வெளிநாட்டு சந்தைகளிலும் மஹிந்திரா கவனத்தை ஈர்க்கும்.


Click it and Unblock the Notifications









