காருக்கு இணையாக மைலேஜ்... பிஸ்னஸ் செய்பவர்களுக்காக மஹிந்திராவின் புதிய சர்பிரைஸ்!!

மஹிந்திரா (Mahindra), இந்தியாவில் கமர்ஷியல் வாகனங்கள் விற்பனையில் முன்னணியில் உள்ள நிறுவனங்களுள் ஒன்று. இத்தகைய மஹிந்திரா நிறுவனம் அதன் புதிய வீரோ (Veero) கமர்ஷியல் வாகனத்தை சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. எடை குறைவான கமர்ஷியல் வாகனங்கள் பிரிவில் இந்த புதிய மஹிந்திரா வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.7.99 லட்சத்தில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு உள்ள இந்த புதிய மஹிந்திரா கமர்ஷியல் வாகனத்தை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கார்களை விற்பனை செய்வதில் இன்று இந்தியாவின் தவிர்க்க முடியாத நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் மஹிந்திராவின் பயணம் கமர்ஷியல் வாகனங்களில் இருந்துதான் துவங்கியது என்பது நம் எல்லாருக்குமே தெரிந்த விஷயம். மஹிந்திராவில் தற்சமயம் எடைமிக்க கமர்ஷியல் வாகனங்களில் இருந்து 3-சக்கர கமர்ஷியல் வாகனங்கள் வரையில் விற்பனை செய்யப்படுகின்றன.

mahindra veero lcv launched

குறிப்பாக, எடை குறைவான கமர்ஷியல் வாகனங்கள் விற்பனையில் மஹிந்திரா முன்னணியில் உள்ளது. இதனை மேலும் பலப்படுத்தும் வகையில் மஹிந்திரா அறிமுகம் செய்து இருப்பதுதான் புத்தம் புதிய வீரோ லைட்-வெயிட் கமர்ஷியல் வாகனம் ஆகும். இது 3.5 டன்கள் அல்லது அதற்கும் குறைவான எடை கொண்ட கமர்ஷியல் வாகனங்கள் பிரிவில் விற்பனை செய்யப்பட உள்ளது.

வி2, வி4 மற்றும் வி6 என 3 விதமான வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த வாகனத்தின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.7.99 லட்சத்தில் இருந்து ரூ.9.56 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. சிறந்த மைலேஜ், மல்டிபிள் என்ஜின் ஆப்ஷன்கள் உடன் அதிகப்படியான செயல்படுதிறன், சிறந்த பாதுகாப்பு வசதிகள் ஆகியவற்றை கொண்டதாக வீரோ வாகனத்தை உருவாக்கி உள்ளதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது. அதேபோல், வாகனத்திற்குள் கேபினும் பிரீமியம் தரத்தில் வடிவமைக்கப்பட்டு உள்ளதாம்.

mahindra veero lcv launched

இந்தியாவின் முதல் கிரவுண்ட்-அப் மல்டி-எனர்ஜி மாடுலர் பிளாட்ஃபாரத்தில் மஹிந்திரா வீரோ உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்படும் வாகனங்களில் 1 டன்னில் இருந்து 2 டன்களுக்கும் அதிகமான சுமையை ஏற்றிச் செல்லலாம். ஆனால், புதிய வீரோவின் பேலோடு கெப்பாசிட்டி ஆனது 1,600 கிலோ ஆகும். இந்த கமர்ஷியல் வாகனத்தை 1.5 லிட்டர் எம்டிஐ டீசல் என்ஜின் அல்லது டர்போ எம்சிஎன்ஜி என்ஜின் உடன் வாங்கலாம்.

இதில் டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 59.7 கிலோவாட்ஸ் மற்றும் 210 என்.எம் டார்க் திறனையும், டர்போ எம்சிஎன்ஜி என்ஜின் ஆனது 67.2 கிலோவாட்ஸ் மற்றும் 210 என்.எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக் கூடியவைகளாக உள்ளன. டீசல் என்ஜினில் அதிகப்பட்சமாக லிட்டருக்கு 18.4கிமீ மைலேஜையும், சிஎன்ஜி என்ஜினில் ஒரு கிலோ சிஎன்ஜி-க்கு 19.2கிமீ மைலேஜையும் பெறலாம் என மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

mahindra veero lcv launched

சிறந்த மைலேஜை பெற 20,000கிமீ-க்கு ஒருமுறை சர்வீஸ் செய்ய வேண்டும் எனவும் மஹிந்திரா பரிந்துரை செய்துள்ளது. AIS096 பாதுகாப்பு தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வாகனத்தில் பயணிகளின் பாதுகாப்பிற்கு டிரைவர் ஏர்பேக் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன், 26.03 செ.மீ-இல் டச் ஸ்க்ரீன், பவர் விண்டோக்கள் மற்றும் ஸ்டேரிங் சக்கரத்தில் கண்ட்ரோல்கள் உள்ளிட்டவையும் மஹிந்திரா வீரோவில் வழங்கப்பட்டுள்ளன.

இந்த வாகனத்திற்கான கார்கோ படுக்கையை 3035மிமீ (XL) அல்லது 2765மிமீ (XXL)-இல் வாங்கலாம். அதேபோல் கார்கோ வகையையும் வாடிக்கையாளர்கள் தேவைக்கேற்ப தேர்வு செய்துக் கொள்ளலாம். ஸ்டாண்டர்ட் டெக், ஹை டெக் மற்றும் சிபிசி என்பன வீரோ வாகனத்தின் கார்கோ படுக்கை வகைகள் ஆகும். 5.1 மீட்டர் நீளத்தில் இந்த வாகனத்தை யு-டர்ன் செய்துவிட முடியும் என்கிறது மஹிந்திரா நிறுவனம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சிறு வணிகம் செய்வோர்கள் ஏராளமானோர் உள்ளனர். இதன் காரணமாகவே, எடை குறைவான கமர்ஷியல் வாகனங்களுக்கு மார்க்கெட்டில் அதிக டிமாண்ட் உள்ளது. அதுமட்டுமின்றி, பெரிய பெரிய வணிகங்களை மேற்கொள்வோரும் மைலேஜை கருத்தில் கொண்டு லைட்-வெயிட் கமர்ஷியல் வாகனங்களை தேடுகின்றனர். ஆதலால், மஹிந்திராவின் வீரோ வாகனத்திற்கு நிறைய கஸ்டமர்கள் கிடைப்பார்கள் என்பது உறுதி.

More from DriveSpark

Article Published On: Monday, September 16, 2024, 22:08 [IST]
English summary
Mahindra veero light weight commercial vehicle launched check price here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X