போற போக்கை பார்த்தால் டாடாவை முந்திவிடும் போல!! மஹிந்திரா கார்களை வாங்க கஸ்டமர்ஸ் குவியுறாங்க!

மஹிந்திரா (Mahindra), இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனம். மாருதி சுஸுகி, ஹூண்டாய், டாடா மோட்டார்ஸுக்கு அடுத்து கார்கள் விற்பனையில் 4வது பெரிய நிறுவனமாக விளங்கும் மஹிந்திரா கடந்த 2024 ஏப்ரல் மாதத்தில் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கைகள் குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பான கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்தியாவில் எஸ்யூவி மற்றும் எம்பிவி ரக கார்களின் விற்பனை சமீப ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, மஹிந்திரா நிறுவனம் முற்றிலுமாக எஸ்யூவி மற்றும் எம்பிவி கார்களை மட்டுமே விற்பனை செய்ய ஆரம்பித்தது. இதன் மூலமாக, மஹிந்திரா கார்களின் விற்பனை கடந்த 10 வருடங்களில் கணிசமாக முன்னேற்றம் கண்டுள்ளது.

mahindra vehicles sales crossed 70k

அதேநேரம், டிராக்டர்கள், லாரிகள் உள்ளிட்ட கமர்ஷியல் வாகனங்கள் விற்பனையிலும் வழக்கம்போல் மஹிந்திராவின் ஆதிக்கம் தொடர்கிறது. கடந்த 2024 ஏப்ரல் மாதத்தில் மட்டும் மொத்தம் 70,471 வாகனங்களை மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதில் கார்கள், வேன்கள் மட்டுமின்றி கமர்ஷியல் வாகனங்களின் விற்பனை எண்ணிக்கைகளும் அடங்குகின்றன.

இந்த 70,471 வாகனங்களில் வெறும் 1857 மட்டுமே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட மஹிந்திரா வாகனங்களின் எண்ணிக்கை ஆகும். மற்றவை அனைத்தும் இந்தியாவில், உள்நாட்டில் மஹிந்திரா விற்பனை செய்த வாகனங்களின் எண்ணிக்கை ஆகும். மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் வெளிநாட்டு ஏற்றுமதியில் பெரியதாக எந்த மாற்றமும் இல்லை. ஏனெனில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலும் 1813 வாகனங்களை மட்டுமே இந்த நிறுவனம் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருந்தது.

mahindra vehicles sales crossed 70k

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்டவைகளில் கார்களின் எண்ணிக்கை எப்போதும் போல் கடந்த ஏப்ரல் மாதத்திலும் அதிகமாக பதிவாகி உள்ளது. கடந்த 2024 ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 41,006 கார்களை மஹிந்திரா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஆனால், கடந்த ஆண்டு ஏப்ரலில் வெறும் 34,694 கார்களை மட்டுமே மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்திருந்தது.

இந்த வகையில், மஹிந்திரா கார்களின் விற்பனை ஆனது 18% அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்ததில் மஹிந்திராவில் இருந்து ஒரு வேன் கூட விற்பனையாகவில்லை. மஹிந்திராவின் கமர்ஷியல் வாகனங்கள் விற்பனையை பொறுத்தவரையில், 2 டன்களில் இருந்து 3.5 டன் வரையில் எடை கொண்ட கமர்ஷியல் வாகனங்கள் அதிகப்பட்சமாக 15,692 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2023 ஏப்ரல் மாதத்தில் இந்த வகை கமர்ஷியல் வாகனங்கள் 15,072 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

mahindra vehicles sales crossed 70k

இவை மட்டுமின்றி, 2 டன்களுக்கும் எடை குறைவான கமர்ஷியல் வாகனங்கள் மற்றும் 3.5 டன்களுக்கும் அதிகமான எடை கொண்ட கமர்ஷியல் வாகனங்களும் கூட மஹிந்திராவில் இருந்து விற்பனை செய்யப்படுகின்றன. இதில், 2 டன்களுக்கும் குறைவான எடை கமர்ஷியல் வாகனங்கள் 3,372 யூனிட்களையும், 3.5 டன்களுக்கும் அதிகமாக எடை வாகனங்கள் 3,038 யூனிட்களையும் மஹிந்திரா கடந்த ஏப்ரல் மாதத்தில் விற்பனை செய்துள்ளது.

இதில், 2 டன்களுக்கும் குறைவான எடை கொண்ட மஹிந்திரா கமர்ஷியல் வாகனங்களின் விற்பனையில் பெரியதாக மாற்றமில்லை என்றாலும், 3.5 டன்களுக்கும் அதிகமாக எடை கொண்ட கனரக மஹிந்திரா வாகனங்களின் விற்பனை ஆனது சுமார் 74% அதிகரித்துள்ளது. ஏனெனில், அந்த மாதத்தில் 1,743 கனரக வாகனங்களை மட்டுமே மஹிந்திரா விற்பனை செய்திருந்தது. இவை இல்லாமல், கடந்த மாதத்தில் 5,504 மூன்று சக்கர வாகனங்களையும் மஹிந்திரா விற்பனை செய்துள்ளது.

mahindra vehicles sales crossed 70k

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆரம்பத்தில் கமர்ஷியல் வாகனங்களை மட்டுமே மஹிந்திரா விற்பனை செய்து வந்தது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் இன்றோ, கார்கள் விற்பனையில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக மஹிந்திரா விளங்குகிறது. இதற்கிடையில், மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ கார் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், மஹிந்திரா கார்கள் விற்பனை வரும் மாதங்களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, May 2, 2024, 22:58 [IST]
English summary
Mahindra vehicles sales crossed 70k in april 2024 check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X