இந்த கார் மட்டும் வந்துச்சுனா டாடாவை எல்லாம் மஹிந்திரா கதற விடும்! விலையை மட்டும் சரியா நிர்ணயித்தால் போதும்!!

இந்தியாவில் புது, புது எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars)-ஐ அறிமுகம் செய்வதில் தீவிரமாக இருக்கும் கார் நிறுவனங்களுள் ஒன்று, மஹிந்திரா (Mahindra) ஆகும். ஏற்கனவே, எக்ஸ்யூவி400 (XUV400), பிஇ 6 (BE 6), எக்ஸ்.இ.வி 9இ (XEV 9e) எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துவரும் மஹிந்திரா அடுத்ததாக மார்க்கெட்டில் அறிமுகம் செய்ய பல்வேறு எலக்ட்ரிக் கார்களை தயார் செய்து வருகிறது. அவற்றுள் ஒன்று தற்போது பெங்களூர் (Bengaluru)-இல் பொது சாலையில் ஓட்டிப் பார்த்து சோதனை செய்யப்பட்டுள்ளது. அதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை வாங்குவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக கார் நிறுவனங்கள் தங்களது புதிய எலக்ட்ரிக் கார்களை ஒன்றன்பின் ஒன்றாக அறிமுகம் செய்து வருகின்றன. இந்த விஷயத்தில், டாடா மோட்டார்ஸ் (Tata Motors) முன்னோடியாக விளங்குகிறது என்றாலும், மறுப்பக்கம் மஹிந்திராவும் புதிய எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது.

mahindra xev 7e spotted testing

மஹிந்திராவுக்கு இந்த 2024 ஆனது சிறப்பான வருடம் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், இந்த நிறுவனத்தின் எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ (XUV 3XO) மற்றும் தார் ராக்ஸ் (Thar ROXX) வாகனங்களுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன் மூலம் கிடைத்த நம்பிக்கையில், பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிஇ 6 மற்றும் எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு கொண்டுவந்துள்ள மஹிந்திரா, வருகிற 2025ஆம் ஆண்டிலும் சில எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

அவற்றுள் ஒன்றாக பார்க்கப்படுவது, எக்ஸ்.இ.வி 7இ (XEV 7e) ஆகும். ஏற்கனவே விற்பனையில் இருக்கும் எக்ஸ்யூவி700 (XUV700) காரின் எலக்ட்ரிக் வெர்சனாக எக்ஸ்இவி 7இ கார் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பெங்களூரில் பொம்மனஹள்ளி (Bommanahalli) பகுதியில் முழுவதும் மறைப்புகளால் மறைக்கப்பட்ட நிலையில், மஹிந்திரா கார் ஒன்று பொது சாலையில் ஓட்டி பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது.

mahindra xev 7e spotted testing

இந்த சோதனை ஓட்டத்தில், காரின் முன்பகுதி மறைக்கப்பட்டுள்ளதால், இது எலக்ட்ரிக் கார் என்பது உறுதியாகிறது. மேலும், தோற்றத்தையும் டிசைனையும் வைத்து பார்க்கும்போது, மஹிந்திரா எக்ஸ்யூவி700 போன்று உள்ளதால், இது எக்ஸ்இவி 7இ எலக்ட்ரிக் காராக இருக்க அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில், எக்ஸ்யூவி700 காரில் வழங்கப்படும் நிறைய டிசைன் எலிமெண்ட்கள் (Design Elements)-ஐ கொண்டு இந்த எலக்ட்ரிக் கார் உருவாக்கப்பட்டு இருப்பது பார்த்தாலே தெரிகிறது.

வருகிற 2025 ஜனவரி மாதத்தில் நடைபெறவிருக்கும் பாரத் மொபைலிட்டி ஆட்டோ எக்ஸ்போ 2025 (Bharat Mobility Auto Expo 2025) கண்காட்சியில் மஹிந்திரா எக்ஸ்இவி 7இ எலக்ட்ரிக் கார் காட்சிக்கு நிறுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில்தான் தற்போது பெங்களூரில் இந்த எலக்ட்ரிக் கார் சோதனை ஓட்டத்தின்போது அடையாளம் காணப்பட்டுள்ளது.

mahindra xev 7e spotted testing

இந்த சோதனை ஓட்டத்தில், எக்ஸ்இவி 7இ எலக்ட்ரிக் கார் கிட்டத்தட்ட அனைத்து வேலைகளும் நிறைவு பெற்ற நிலையில் காட்சியளிக்கிறது. மறைப்புகளால் மறைக்கப்பட்டுள்ள காரின் முன்பகுதி மஹிந்திராவின் லேட்டஸ்ட் எலக்ட்ரிக் கார்களை போன்று தெரிகிறது. அதாவது, எக்ஸ்யூவி700 காரின் முன்பகுதிக்கும், எக்ஸ்இவி 7இ எலக்ட்ரிக் காரின் முன்பகுதிக்கும் இடையே சில வித்தியாசங்கள் இருக்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திராவில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் கார்களுள் ஒன்றாக எக்ஸ்யூவி700 எஸ்யூவி கார் உள்ளது. அத்தகைய காரை அடிப்படையாக கொண்டு எலக்ட்ரிக் கார் கொண்டுவரப்படுகிறது என்றால், அது நிச்சயமாக வெற்றி பெறுவதற்கே வாய்ப்புகள் அதிகம். மேலும், எக்ஸ்இவி 7இ ஆனது எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரை காட்டிலும் நிச்சயமாக விலை குறைவானதாகவே இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Thursday, December 26, 2024, 23:14 [IST]
English summary
Mahindra xev 7e electric car has been spotted testing ahead of auto expo 2025
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X