இது நடுத்தர மக்களுக்கான ரோல்ஸ் ராய்ஸ் கார்.. பள்ளம்-மேடுகள்ல பயணிச்சாலும் அதிர்வுகளே தெரியாது.. ரிவியூ வீடியோ!
சொகுசு கார்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் மஹிந்திரா (Mahindra) நிறுவனம் அதன் புதுமுக மின்சார கார்களை தயார் செய்திருக்கின்றது. அது வேறு எந்த கார் மாடலும் இல்லைங்க, சமீபத்தில் நிறுவனம் அறிமுகம் செய்த எக்ஸ்இவி 9இ (XEV 9e) எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக காரை பற்றிதான் பேசிக் கொண்டிருக்கின்றோம். இது ஓர் எக்ஸ்யூவி 700 கார் மாடலின் மின்சார கூபே வெர்ஷன் ஆகும். பார்க்க இப்போதும் இந்த கார் கான்செப்ட் கார் மாடலை போலவே தென்படுகின்றது. பார்ப்பதற்கு மட்டுமல்ல பயன்பாட்டிலும் இதேபோல் தனித்துவமானதாகவே இந்த கார் மாடல் உள்ளது.
மிக முக்கியமாக பென்ஸ்-பிஎம்டபிள்யூ போன்ற ஆடம்பர கார்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் தன்னுடைய இந்த புதுமுக காரை மஹிந்திரா தயார் செய்துள்ளது. இந்த வாகனத்தையே சமீபத்தில் ஓட்டி பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. சென்னையில் உள்ள மஹிந்திரா நிறுவனத்தின் வாகன ஆராய்ச்சி மையத்தில் வைத்தே அதை 'ரைடு-ரிவியூ' செய்து பார்த்தோம். அப்போது கார் குறித்த பல்வேறு முக்கிய தகவல்களை நாங்கள் அறிந்துக் கொண்டோம். அந்த தகவலையே வீடியோவாக இங்கே வழங்கியுள்ளோம்.
இந்த காரில் பல்வேறு சிறப்பு வசதிகளை மஹிந்திரா நிறுவனம் சேர்த்திருக்கின்றது. மிக முக்கியமாக அதன் சஸ்பென்ஷன் செட்-அப். செமி ஆக்டீவ் சஸ்பென்ஷன் செட்-அப்பையே இந்த காரில் மஹிந்திரா வழங்கியிருக்கின்றது. இந்த அம்சமே விலை உயர்ந்த கார்களில் பயணிக்கும் அனுபவத்தை எக்ஸ்இவி 9இ-யில் கிடைக்கச் செய்திருக்கின்றது. பள்ளம் மேடுகளில் பயணித்தாலும் அதன் அதிர்வுகள் காருக்குள் தெரியாது.

இதுமட்டுமல்ல காருக்குள் கேட்கும் வெளியுலக இரைச்சல்களையும் மிக பெரிய அளவில் மஹிந்திரா நிறுவனம் குறைத்திருக்கின்றது. இதனால்தான் இந்த கார் வரும் நாட்களில் சொகுசு கார்களின் விற்பனைக்கே சவால்விடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மஹிந்திரா நிறுவனம் இந்த காருக்கு ரூ. 21.90 லட்சம் விலையை நிர்ணயம் செய்திருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.


Click it and Unblock the Notifications








