இவ்வளவு கம்மி விலையா? கப்பல் மாதிரி கட்டப்பட்ட மஹிந்திரா இவி கார் வெளியானது!

மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்யூவி 700 காரின் கூபே ஸ்டைல் எலெக்ட்ரிக் வெர்ஷன் காராக எக்ஸ்இவி 9இ என்ற காரை இன்று வெளியிட்டுள்ளது. மஹிந்திரா நிறுவனம் எலெக்ட்ரிக் கார்களை தயாரிப்பதில் தீவிரமாக இருந்து வரும் நிலையில் இந்த கார் பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் வடிவமைப்புடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த காரை 20 நிமிடத்தில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் கார் விற்பனையில் டாடா நிறுவனம் தான் முன்னனியில் இருந்து வரும் நிலையில் மஹிந்திரா நிறுவனமும் எலெக்ட்ரிக் காரை தயாரிப்பதில் தீவிரமாக இருந்து வருகிறது. இந்நிறுவனம் தற்போது இன்குளோவ் என்ற பிளாட்ஃபார்மை பயன்படுத்தி தனது வாகனத்தை தயாரித்து வருகிறது. இன்று தனது பிஇ பிராண்டில் 6e என்ற காரையும், XEV பிராண்டில் 9e என்ற காரையும் காட்சிப்படுத்தியுள்ளது.

mahindra xev 9e

இதில் நாம் XEV 9e காரை பற்றி தான் விரிவாக பார்க்கப்போகிறோம் முன்ரே சொன்னது படி இந்த கார் மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காரின் கூபே ஸ்டைல் எலெக்ட்ரிக் வெர்ஷன் காராக உருவாக்கியுள்ளது. இந்த கார் வடிவமைப்பில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கூபே ஸ்டைல் என்பதால் பாடி அமைப்பிலேயே மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த காரின் முன்பக்கம் லுக்கிற்காக கிரில் போன்ற வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இது இவி கார் கிரில் தேவையில்லை என்றாலும் காரின் லுக் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக வழங்கப்பட்டுள்ளது. காரின் உள்ளே பெரிய சன் ரூஃப் வசதி வழங்கப்பட்டுள்ளது.

mahindra xev 9e

காரின் முன்பகுதியில் பெரிய லைட்பார் வழங்கப்பட்டுள்ளது. இது எலெக்ட்ரிக் காருக்கான லுக்கை கொடுக்கிறது. இந்த காரின் சிறப்பான அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளது. காரின் லுக் ஒட்டு மொத்தத்தில் இளம் தலைமுறையினரை ஈர்க்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த காரின் உட்பகுதியில் ஒரு சொகுசு காரில் என்னென்ன வசதிகள் எல்லாம் இருக்குமோ அந்த அளுவிற்கு உட்புற கட்டமைப்பு வழங்கப்பட்டுள்ளது. எலெக்ட்ரிக் கார் என்பதால் இட வசதி குறைவாக இருக்கும் என நினைக்க வேண்டாம். இந்த கார் முற்றிலுமாக எலெக்ட்ரிக் காருக்காக உருவாக்கப்பட்டது என்பறதால் போதுமான இட வசதி இதில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த காரில் உட்பகுதியில் பெரிய டிஸ்பிளே (110 செ.மீ)வழங்கப்பட்டுள்ளது. இது 3 பிரிவுகளாக வழங்கப்பட்டு ஒன்று என்டர்டெயின்மெட் சிஸ்டமாகவும், இரண்டாவது இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமாகவும் மற்றொன்று இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டராகவும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இது சினிமா ஸ்கோப் ஸ்கிரீனாக வழங்கப்பட்டுள்ளது. இதில் பயணித்தின் போது சினிமா பார்த்துக்கொண்டே பயணிக்கலாம். இந்த காரின் சோனிக் ஸ்டுடியோ அனுபவத்தை வழங்கும் 16 ஸ்பீக்கர் கொண்ட டால்பி அட்மாஸ் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் தியேட்டரில் கிடைக்கும் சவுண்ட் அனுபவம் இந்த காருக்குள்ளும் கிடைக்கும்.

இந்த காரின் முன்பக்கம் 150 லிட்டர் ஸ்டோரேஜ் வசதி வழங்கப்பட்டுள்ளது. இது இவி கார் என்பதால் இன்ஜின் வைக்கும் இடத்தை இதில் ஸ்டோரேஜ் பகுதியாக வழங்க முடியும். பூட் பகுதியை பொருத்தவரை 663 லிட்டர் பூட் வசதி இருக்கிறது. இதனால் அதிக பொருட்களை இந்த காரில் எடுத்து செல்ல முடியும்.

இந்த காரின் சிறப்பு அம்சமே இதில் உள்ள பேட்டரி தான் இந்த காரில் 59 கிலோ வாட் ஹவர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை விரைவாக சார்ஜ் செய்ய சார்ஜரும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் 20-80 சதவீத பேட்டரியை வெறும் 20 நிமிடத்தில் சார்ஜ் செய்துவிட முடியும். பொதுவாக கார் பேட்டரியை சார்ஜ் செய்ய பல மணி நேரம் ஆகும் நிலையில் இந்த காரை சில நிமிடங்களிலேயே சார்ஜ் செய்துவிட முடியும் என்பது ஆச்சரியமான விஷயம் தான்.

மேலும் இந்த காரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 500 கிமீ வரை ரேஞ்ச் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் இயங்கும் சத்தம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. இதே நேரம் கார் வேகமாக சென்றாலும் காருக்குள் அதிர்வுகள் எதுவும் இல்லாமல் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காரின் பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை அடாஸ் தொழிற்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது லெவல் 2 அடாஸ் தொழிற்நுட்பமாக வழங்கப்பட்டுள்ளது. முக்கியமாக இதில் லேன் கிளியரன்ஸ் சிஸ்டம் புதுமையாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காரில் ஹெட்ஸ் அப் டிஸ்பிளேவில் டிரைவருக்கு தேவையான தகவல்கள் வழங்கப்படுகின்றன. இந்த காரின் பாதுகாப்பிற்காக 5 கேமராக்கள் காரில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த காரில் ஆட்டோ பார்க்கிங் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. குறுகிய இடத்தில் கூட 200 வழி முறைகளில் இந்த காரை தானாக பார்க் செய்ய முடியும். ஒருபட்டனை அழுத்தினால் சுற்றியுள்ள விஷயங்கள் எல்லாம் கண்டறிந்து தானாக பார்க்கிங் செய்துவிடும் தொழிற்நுட்பம் இதில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த காரின் கட்டமைப்பை பொருத்தவரை வெளியில் உள்ள அல்ரா வைலட் கதிர்கள் காருக்குள் வருவதை தடுக்கிறது. இதனால் ஏசி விரைவாக குளிர்விக்கிறது. இதனால் வாகனம் ஏசி பயன்பாட்டை குறைத்து நீண்ட தூரம் பயணிக்க உதவுகிறது. இதற்காக காரின் கண்ணாடி முதல் கட்டமைப்பு செய்யப்பட்ட மெட்டிரீயல் என பல விஷயங்கள் பார்த்து பார்த்து செய்யப்பட்டுள்ளது.

மஹிந்திரா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் கார்களுக்காக மாயா என்ற செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இதை இந்த காரின் கனெக்டெட் காரின் தொழிற்நுட்பத்திற்காக பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இதில் ஏராளமான தொழிற்நுட்ப அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த காரின் அம்சங்களை வைத்து பல்வேறு பேக்குகளாக பரித்து வழங்கப்படுகின்றன. முதல் பேக் குறித்த தகவல்கள் மட்டும் வெளியாகியுள்ளது. இந்த கார் வெறும் 21.90 லட்சம் என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் பேக் 2 மற்றும் பேக் 3 குறித்த வேரியன்ட்கள் விபரம் பின்னர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பேக் 1 காரின் சென்னனை ஆன் ரோடு விலை ரூ23.59 லட்சம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காரின் அதிகரப்பூர்வ அறிமுகம் 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் டெலிவரிகள் வரும் 2025ம் ஆண்டு பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் மாத துவங்க்கத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் புக்கிங் குறித்த தகவல்கள் எல்லாம் பின்னர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் காரை தலைசிறந்த அம்சங்களுடன் ஒரு சொகுசு காரின் அம்சங்களுடன் வழங்கியுள்ளது. இந்த கார் நிச்சயம் ஒரு வடிவமைப்பின் உச்சம் என்றே சொல்லலாம். இந்த காரின் வருகைக்காக பலர் காத்திருக்கிறார்கள். இந்த கார் போட்டி தயாரிப்புகளை விட குறைவான விலையில் விற்பனைக்கு வந்தால் நிச்சயம் மிகப்பெரிய வெற்றி பெறும்

More from DriveSpark

Article Published On: Tuesday, November 26, 2024, 20:41 [IST]
English summary
Mahindra xev 9e launched price features design specifications details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X