புதுசா கார் வாங்க போறீங்களா? இந்த காரை கொஞ்சம் பாருங்க வேற லெவல்ல இருக்குது!
மஹிந்திரா நிறுவனம் நேற்று தனது இரண்டு புதிய எலெக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது. பிஇ 6இ மற்றும் எக்ஸ்இவி 9இ ஆகிய பெயர்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த கார்கள் மஹிந்திரா நிறுவனத்தின் இன்குளோ பிளாட்பார்மில் உருவாக்கப்பட்ட கார்களாக இருக்கின்றன. இந்த கார்களில் ஏகப்பட்ட தொழிற்நுட்ப அம்சங்கள் உள்ளன. கண்களை கவரும் விதமான பல வடிவமைப்புகளும் மற்ற கார்களில் இல்லாத பல்வேறு விதமான தொழிற்நுட்பம் அம்சங்களும் இதில் பொருத்தப்பட்டுள்ளன. இது குறித்த சில முக்கியமான தகவல்களை இங்கே காணலாம்.
மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி 700 காரை ஒத்துதான் இந்த எக்ஸ்இவி 9இ என்ற கார் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு விதமான கலர் ஆப்ஷன்களை வழங்கப்பட்டுள்ளன. இந்த காரின் வடிவமைப்பிற்கு சிவப்பு நிறம் தான் ஏற்ற கலராக இருக்கிறது. இந்த கார் தான் நேற்று காட்சிப்படுத்தப்பட்டது. காரிலும் சிவப்பு நிற கார் கண்களை கவரும் விதமான காராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த எக்ஸ்இவி 9இ காரை பொறுத்தவரை முன்பக்கம் செங்குத்தான எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுபோக முக்கோண வடிவிலான ஹெட்லைட் அமைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. முன்பக்கம் முழுவதும் எல்இடி ஸ்ட்ரிப் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. முற்றிலுமாக மூடப்பட்ட கிரில் பொருத்தப்பட்டுள்ளது. காரின் வடிவமைப்பில் பல்வேறு விதமான கிரீஸ் மற்றும் மஸ்குலரான வடிவமைப்பு காருக்கு ஸ்போர்ட்டியான ஒரு லுக்கை கொடுக்கிறது.
பக்கவாட்டை பொருத்தவரை பிளாஷ் டோர் ஹாண்டில்கள் முன்பக்க கதவுகளில் வழங்கப்பட்டுள்ளன. சிறப்பான வீல் ஆர்சிகள், டோர் மோல்டிங் ஸ்போர்ட்டியான குறைந்த டிராக் கொண்ட அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. பி மற்றும் சி பில்டர்கள் கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன. பின்பக்க கதவுகளின் டோர் ஹேண்டில்கள் சி பில்லரில் வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் ஒரு கூபே ரக கார் என்பதால் பின்பக்க ரூஃப் லைன் சாய்வாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த காரில் உள்ள பின்பக்க லைட்டிங் அம்சங்கள் எல்லாம் முன்பக்கத்தில் இருப்பது போலவே வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் நீளத்தை பொருத்தவரை 4790மிமீ நீளம் கொண்டதாக இருக்கிறது. இதனால் இந்த எஸ்இவி 9இ கார் சாலையில் செல்லும் போது நிச்சயம் மற்றவர்கள் கண்களுக்கு கவரும் வகையிலான அம்சத்தை கொண்ட காராக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
இந்த காரில் இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷன்கள் உள்ளன. 59 கிலோ வாட் ஹவர் மற்றும் 79 கிலோ வாட் ஹவர் என ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் 79 கிலோ வாட் ஹவர் பேட்டரி ஒரு முறை சார்ஜ் செய்தால் 656 கிலோ மீட்டர் வரை ரேஞ்ச் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இரண்டு பயணிகள் அமர்ந்து பயணிக்கும் போது தரும் ரேஞ்ச் தான். அதிகமான பயணிகள் ஏறும் போதும் அதிக எடையை காரில் ஏற்றும்போதும் ரேஞ்ச் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

மஹிந்திரா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வாழ்நாள் பேட்டரி வாரண்டியை வழங்குகிறது. இந்த காரின் பேட்டரி எப்பொழுது பாதிக்கப்பட்டாலும் உடனடியாக அதை சரி செய்தோ, மாற்றியோ தரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பேட்டரி மூலம் இந்த காருக்கு 285 பிஎஸ் பவர் கிடைக்கிறது.
இதன் மூலம் இந்த கார் 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வரும் 6.8 நொடியில் பிக்கப் செய்து விடுகிறது. இந்த காரில் உள்ள பேட்டரி பொருத்தவரை எல்எஃப்பி ரக பேட்டரி பயன்படுத்தப்படுகிறது. இந்த பேட்டரி இருப்பதால் கார் தீப்பிடிக்கும் அபாயம் வெகுவாக குறைகிறது. சாதாரண லித்தியம் அயான் பேட்டரிகள் அடிக்கடி தீ பிடிக்கும் சம்பவம் நடப்பதால் இந்த பேட்டரியை பொருத்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதனால் நீண்ட பேட்டரி ஆயுளும் இந்த காருக்கு கிடைக்கும்.
இந்த காரில் உள்ள ரைடு மோடுகளை பொருத்தவரை ரேஞ்ச், எவ்ரி டே, ரைடு ஆகிய ரைடு மோடுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரில் உள்ள பேட்டரியில் இருக்கும் சிறப்பம்சம் என்னவென்றால் 20 முதல் 80 சதவீதமான பேட்டரியை சார்ஜ் ஏற்ற வெறும் 20 நிமிடங்கள் வரை மட்டுமே எடுத்துக் கொள்ளும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக 125 கிலோ வாட்டர் சார்ஜரை அந்நிறுவனம் வழங்குகிறது.
இதுபோக இந்த காரில் பிரேக் பை ஒயர் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. இது இண்டகிரேட்டட் எலக்ட்ரானிக் பூஸ்டர் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காரில் அட்வான்ஸான சஸ்பென்ஷன் சிஸ்டமும் அதிக பவர் ஸ்டேரிங் உடன் கூடிய சிஸ்டமும் இதில் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த காரை ஓட்டுவது மிக சுலபமாக இருக்கும். ஸ்டேரிங் செயல்பாடு சிறப்பாக செயல்படும்.
இந்த காரின் உட்பகுதியில் மாயா என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் 5.2 ப்ளூடூத், 6.0 வைஃபை, அடாஸ் லெவல் 2 பிளஸ் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் கிடைக்கிறது 60 விதமான ஆப்கள் இதில் இணைத்துக்கொள்ள முடியும். இதன் மூலம் பொழுதுபோக்கு, மியூசிக், ஷாப்பிங் கார்ட், ஓடிபி உள்ளிட்ட ஆப்களையும் இதில் பொருத்தி கொள்ள முடியும்.
இந்த எக்ஸ்இவி 9இ காரை பொறுத்தவரை மூன்று 12.30 இன்ச் கொண்ட ஸ்கிரீன்கள் வழங்கப்பட்டுள்ளன. இது மூன்றும் இணைத்தார் போல் சுமார் 1.1 மீட்டருக்கு டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதுபோக இதில் ஹெட்ஸ்சப் டிஸ்ப்ளேயும் வழங்கப்பட்டுள்ளது. ரூஃப் பகுதி இன்பினிட்டி ரூப்பாக வழங்கப்பட்டு அதில் சன் ரூஃப் அம்சம் பொருத்தப்பட்டுள்ளது. இதுபோக காருக்குள்ளே ஆம்பியன்ஸ் லைட்டிங் மூடுக்கு தகுந்தார் போல் லைட்டை மாற்றிக் கொள்ளும் வசதியும் இருக்கிறது.
இந்த காரில் பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை அடாஸ் லெவல் 2 பிளஸ் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 ரேடார்களும் ஒரு விஷன் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. இதுபோக மஹிந்திரா நிறுவனம் இந்த காரில் மேம்படுத்தப்பட்ட டிரைவர் மற்றும் பயணிகள் மானிட்டிங் சிஸ்டமும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் டிரைவருக்கு தூக்கம் அல்லது சோர்வு ஏற்பட்டால் அதை கண்டறிந்து எச்சரிக்கும் கருவி இதில் பொருத்தப்பட்டுள்ளது.
இதுபோக 360 டிகிரி கேமரா காரை சுற்றி நடக்கும் விஷயங்களை பார்க்கும் வசதி இதில் வழங்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் இந்த கார் ஆட்டோ பார்க்கிங் சிஸ்டத்தில் செயல்படும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இடைஞ்சலான பார்க்கிங் இருக்கும் இடத்தில் நாம் ரிஸ்க் எடுக்காமல் ஆட்டோ பார்க்கிங் மோடை ஆன் செய்து காரை பார்த்து செய்யும் முறையை தேர்வு செய்து விட்டால் போதும் கார் தானாக சென்று பார்க் ஆகிவிடும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனத்தின் இந்த எக்ஸ்இவி 9இ காரை பொருத்தவரை இந்திய மார்க்கெட்டில் சிறப்பாக விற்பனையாகவும் அனைத்து அம்சங்களையும் கொண்ட காராக இருக்கிறது. ஏற்கனவே எக்ஸ்யூவி 700 காருக்கு இந்திய மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில் இந்த காரும் இந்திய மார்க்கெட்டுக்கு சிறப்பான விற்பனையை பெறும் என எதிர்பார்க்கலாம். அதற்கு ஏற்றார் போல் இந்த காரின் விளையும் குறைவாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications









