டாடா எல்லாம் இனி டம்மி பீஸ் தான்! மஹிந்திராவின் இந்த காரும் 5 ஸ்டார் ரேட்டிங் வாங்கிடுச்சு!
மஹிந்திரா நிறுவனம் இன்று தனது மூன்று எஸ்யூவி கார்களுக்கான பாரத் என்கேப் சோதனை முடிவுகளை வெளியிட்டுள்ளது. இது மூன்று கார்களும் சோதனையில் சிறப்பான மதிப்பெண்களை பெற்று இந்தியாவில் பாதுகாப்பான கார்களில் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த சோதனையில் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ என்ற நிறுவனத்தின் புதிய காரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்யூவி 300 என்ற காரை அப்டேட் செய்து சமீபத்தில் தான் எஸ்யூவி 3எக்ஸ்ஓ என்ற புதிய பெயரில் இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கான சிறப்பான மார்க்கெட் இருக்கும் நிலையில் இந்த கார் அறிமுகமாகியுள்ளது வாடிக்கையாளர்களை அதிகம் கவர்ந்து விட்டது. இதனால் இந்த காரின் விற்பனையும் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கிறது.

இந்த காரை பலர் விரும்பி வாங்கி வரும் நிலையில் இந்த காரில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். பலர் இந்த கார் கிராஷ் டெஸ்ட் சோதனையில் எவ்வளவு ஸ்டார்களைப் பெற்றது என்ற கேள்வி எழுப்பி வரும் நிலையில், தற்போது மஹிந்திரா நிறுவனம் அதற்கு பதில் அளிக்கும் விதமாக இதன் சோதனை முடிவுகளை வெளியிட்டுள்ளது.
மஹிந்திரா நிறுவனம் இந்த 3எக்ஸ்ஓ கார் மட்டும் இல்லாமல் தனது புதிதாக அறிமுகமான மஹிந்திரா தார் ராக்ஸ் மற்றும் எஸ்யூவி 400 ஆகிய கார்களுக்கான கிராஷ் டெஸ்ட் சோதனையையும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அத்தனை கார்களும் பாதுகாப்பு சோதனையில் 5 ஸ்டார்களை பெற்ற கார்களாக இருக்கின்றன. இதில் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரின் விபரங்களை மட்டும் இங்கே காண்போம்.

மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரை பொறுத்தவரை இரண்டு விதமான பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. பெரியவர்களுக்கான பாதுகாப்பு சோதனை மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதில் பெரியவர்களுக்கான பாதுகாப்பு சோதனையில் மொத்தம் 32 புள்ளிகளில் இந்த கார் 30.38 புள்ளிகளை பெற்றுள்ளது.
இதுவே குழந்தைகளுக்கான பாதுகாப்பு சோதனையை பொறுத்தவரை மொத்தம் 49 புள்ளிகளில் இந்த கார் 43 புள்ளிகளை பெற்றுள்ளது. இதற்கு முக்கியமான காரணம் இந்த காரில் இருக்கும் பாதுகாப்பு அம்சங்கள் தான். இந்தியாவில் பாதுகாப்பு அம்சங்கள் மிகுந்த காருக்கு நல்ல வரவேற்பதால் மஹிந்திரா நிறுவனம் இந்த காரில் ஏகப்பட்ட பாதுகாப்பு அம்சங்களை உட்பகுதியுள்ளது.

இந்த மகேந்திரா 3எக்ஸ்ஓ காரில் மொத்தம் ஆறு ஏர்பேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதுபோக காரில் பயணிகளுக்காக அனைத்து சீட் பெல்டும் 3 பாயிண்ட் சீட் பெட்டுகளாக வழங்கப்பட்டுள்ளது. காரில் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், சீட் பெல்ட் ரிமைண்டர் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. மேலும் இந்த காரில் பாதுகாப்பு அம்சத்திற்காக நுட்பமும் வழங்கப்பட்டுள்ளது. இதில் எமர்ஜென்சி பிரேக்கிங் சிஸ்டமும் லேண்ட் டிபார்ச்சர் சிஸ்டமும் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த காரில் 360 டிகிரி கேமரா டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் அம்சங்களும் இருக்கின்றன. இந்த காரின் விற்பனை சிறப்பாக இருக்கிறது. தற்போது இந்த கார் மாதம் 9 ஆயிரம் கார்கள் வரை விற்பனையாகி வருகின்றன. இந்தியாவில் அதிகமாக விற்பனையாகி வரும் கார்களில் ஒன்றாக இருக்கிறது.
இன்று குடும்பத்துடன் பயணிக்கும் கார்களில் விற்பனை அதிகமாக இருக்கிறது. அதே நேரம் குடும்பத்துடன் பயணித்தாலும் வசதியாக பயணிக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கு அதிகமாக இருப்பதால் எஸ்யூவி கார்களை மக்கள் அதிகம் விரும்புகிறார்கள். இந்நிலையில் மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ கார் மக்கள் மத்தியில் பிரபலமாகி உள்ள நிலையில் தற்போது இந்த கிராஷ் டெஸ்ட் முடிவுகள் இதன் விற்பனையை அதிகரிக்க உதவியாக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனம் தரமான கார்களை தயாரிப்பது பெயர் பெற்ற நிறுவனமாக இருக்கிறது. ஏற்கனவே இந்தியாவில் உள்ள டாடா நிறுவனமும் இதற்கு பெயர் பெற்ற நிலையில் மஹிந்திரா நிறுவனத்தின் இந்த பெயரும் நிச்சயம் இந்தியாவிற்கு தனி மதிப்பை ஏற்படுத்தி தரும். சர்வதேச அரங்கில் ஆட்டோமொபைல் துறையில் இந்தியா உயர்ந்து நிற்பதற்கு இது போன்ற நிறுவனங்கள் முக்கியமான காரணம்.


Click it and Unblock the Notifications









