மஹிந்திரா களமிறக்கிய புதிய காரின் விலை இவ்ளோதானா! இனி டாடா, மாருதியை யாரும் ஏறெடுத்து கூட பாக்க மாட்டாங்க!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று மஹிந்திரா எக்ஸ்யூவி300 (Mahindra XUV300). வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் தற்போது அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் மஹிந்திரா நிறுவனம் பெயரை அதிரடியாக மாற்றியுள்ளது.
இதன்படி மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரானது இனிமேல் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO) என்ற பெயரில் விற்பனை செய்யப்படும். MX1, MX2, MX2 Pro, MX3, MX3 Pro, AX5, AX5 L, AX7 மற்றும் AX7 L என மொத்தம் 9 வேரியண்ட்களில் (Variants), மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ கார் கிடைக்கும். அதே நேரத்தில் இந்த காரில் சிங்கிள் டோன் மற்றும் ட்யூயல் டோன் என்று ஒட்டுமொத்தமாக 16 கலர் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. செயல்திறனை பொறுத்தவரையில், மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரில், 3 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options)கொடுக்கப்பட்டுள்ளன.

அவை 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்கள் ஆகும். டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், 6 ஸ்பீடு மேனுவல், ஏஎம்டி மற்றும் ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்டர் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் (Gear Box Options) கொடுக்கப்பட்டுள்ளன.
வசதிகளை (Features) பொறுத்தவரையில், 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 10.25 இன்ச் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்ட்டிவிட்டி மற்றும் ட்யூயல் ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல் போன்றவை புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரின் மிகவும் முக்கியமான அம்சங்கள் ஆகும்.

இதுதவிர பனரோமிக் சன்ரூஃப், 360 டிகிரி கேமரா, ஆட்டோ ஹோல்டு ஃபங்ஷன் உடன் எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், பிளைண்ட் வியூ மானிட்டர், ஆட்டோ டிம்மிங் ஐஆர்விம், ஹார்மன் கார்டன் 7 ஸ்பீக்கர் மியூசிக் சிஸ்டம் ஆகிய வசதிகளும் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரில் இடம்பெற்றுள்ளன. இவை எல்லாவற்றுக்கும் மேலாக லெவல் 2 அடாஸ் (Level 2 ADAS) பாதுகாப்பு தொகுப்பு இடம்பெற்றிருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரின் ஆரம்ப விலை, வெறும் 7.49 லட்ச ரூபாய் மட்டும்தான். அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 15.49 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்த காருக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் வரும் மே 15ம் தேதியில் இருந்து தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் டெலிவரி (Delivery) பணிகள் வரும் மே 26ம் தேதியில் இருந்து தொடங்கப்படவுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் டாடா நெக்ஸான் (Tata Nexon), மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), கியா சொனெட் (Kia Sonet), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue) ஆகிய கார்களுக்கு, மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது எங்கள் கருத்து.
மேற்கண்ட கார்கள் மட்டுமல்லாது, ரெனால்ட் கைகர் (Renault Kiger) மற்றும் நிஸான் மேக்னைட் (Nissan Magnite) ஆகிய கார்கள் உடனும், விரைவில் விற்பனைக்கு வரவுள்ள ஸ்கோடா (Skoda) நிறுவனத்தின் புத்தம் புதிய சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காருடனும் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ போட்டியிடும்.


Click it and Unblock the Notifications








