சொகுசு கார்களையே தூக்கி சாப்பிடும் மஹிந்திரா காரின் விலை இவ்ளோதானா! ஷோரூம்களுக்கு சாரை சாரையா படையெடுக்கறாங்க!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வந்த கார்களில் ஒன்று மஹிந்திரா எக்ஸ்யூவி300 (Mahindra XUV300). இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார்களில் ஒன்றாகும். இதன் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) வெர்ஷன் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த புதிய மாடலானது, மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO) என்ற பெயரில் விற்பனைக்கு களமிறக்கப்பட்டுள்ளது. மஹிந்திரா நிறுவனம் பெயரை மாற்றியிருப்பதுடன், டிசைனையும் (Design) மெருகேற்றியுள்ளது. அத்துடன் பல்வேறு புதிய வசதிகளையும் (Features) வாரி வழங்கியுள்ளது. எனவே மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காருக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவிலான வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரில் மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) கொடுக்கப்பட்டுள்ளன. அவை 2 டர்போ பெட்ரோல் (Turbo Petrol) மற்றும் 1 டீசல் (Diesel) இன்ஜின் ஆகும்.

Mahindra XUV 3XO

புத்தம் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரின் 2 டர்போ பெட்ரோல் இன்ஜின்களுமே, 1.2 லிட்டர் யூனிட்கள்தான். இதில், ஒரு இன்ஜினின் பவர் அவுட்புட் 109 பிஹெச்பி/200 என்எம் ஆகவும், மற்றொரு இன்ஜினின் பவர் அவுட்புட் 129 பிஹெச்பி/230 என்எம் ஆகவும் உள்ளது.

மறுபக்கம் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 115 பிஹெச்பி பவர் மற்றும் 300 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், இந்த காரில் 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஏஎம்டி மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.

Mahindra XUV 3XO Rear View

வசதிகளை பொறுத்தவரையில், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்ட்டிவிட்டி, 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட், 10.25 இன்ச் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், பனரோமிக் சன்ரூஃப், லெவல் 2 அடாஸ், காரின் 4 சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக்குகள், ட்யூயல் ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், ஆட்டோ ஹோல்டு உடன் எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், 65W டைப்-சி சார்ஜிங் போர்ட், ஹார்மான் கார்டன் 7 ஸ்பீக்கர் மியூசிக் சிஸ்டம் போன்றவை மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரின் மிகவும் முக்கியமான அம்சங்கள் ஆகும். இதுதவிர இந்த காரில் மொத்தம் 16 கலர் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்னன.

இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரின் ஆரம்ப விலை வெறும் 7.49 லட்ச ரூபாயாக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 15.49 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் (Ex-showroom Price) விலை ஆகும்.

இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விற்பனைக்கு வந்துள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காருக்கு அதிகாரப்பூர்வமாக முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் இன்று (மே 15) முதல் தொடங்கப்பட்டுள்ளன. விருப்பம் உள்ள நபர்கள், மஹிந்திரா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாகவோ அல்லது மஹிந்திரா நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப்கள் மூலமாகவோ முன்பதிவு செய்து கொள்ளலாம்.

முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரை டெலிவரி (Delivery) செய்யும் பணிகள் வரும் மே 26ம் தேதியில் இருந்து தொடங்கப்படவுள்ளன. எனவே இன்னும் சில நாட்களில், மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரை நம்மால் இந்திய சாலைகளில் காண முடியும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வழக்கமாக கார் நிறுவனங்கள் எல்லாம் முன்பதிவுகளை தொடங்கி விட்டு, அதற்கு பிறகுதான் விலையை அறிவிக்கும். ஆனால் மஹிந்திரா நிறுவனமோ வழக்கத்திற்கு மாறாக, எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரின் விலை எவ்வளவு? என்பதை அறிவித்து விட்டு, அதன்பின் முன்பதிவுகளை ஏற்க தொடங்கியுள்ளது.

கியா சொனெட் (Kia Sonet), டாடா நெக்ஸான் (Tata Nexon), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue) மற்றும் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) போன்ற கார்களுக்கு எல்லாம், மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ கார், விற்பனையில் மிக கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தலாம் என நாங்கள் கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 15, 2024, 13:50 [IST]
English summary
Mahindra xuv 3xo bookings open all you need to know
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+