புது மஹிந்திரா காரை வாங்குவதா? இல்ல டாடா காரை வாங்குவதா? விலையில் பெருசா வித்தியாசம் இல்ல!!
மஹிந்திரா (Mahindra) நிறுவனம் அதன் புதிய எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ எஸ்யூவி காரை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. முன்பு விற்பனையில் இருந்த மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரின் நெக்ஸ்ட் ஜென்ரேஷன் மாடலாக புதிய எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ கார் களமிறக்கப்பட்டுள்ளது. இதனால், எக்ஸ்யூவி300-க்கு விற்பனையில் போட்டியாக இருந்த கார்கள் புதிய எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ மாடலுக்கும் போட்டியாக இருக்கின்றன.
இதன்படி, டாடா நெக்ஸான், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ மற்றும் கியா சொனெட் கார்களின் விற்பனை போட்டியை புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ கார் சமாளிக்க வேண்டும். இவை மட்டுமின்றி, ஹோண்டா, நிஸான் உள்ளிட்ட வேறு சில கார் பிராண்ட்களில் இருந்தும் எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காருக்கு போட்டியாக கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்றாலும், மேலே குறிப்பிடப்பட்டுள்ள 4 கார்கள் தான் முக்கியமான போட்டி மாடல்கள் ஆகும்.

எம்.எக்ஸ்1, எம்.எக்ஸ்2, எம்.எக்ஸ்2 புரோ, எம்.எக்ஸ்3, எம்.எக்ஸ்3 புரோ, ஏ.எக்ஸ்5, ஏ.எக்ஸ்5எல், ஏ.எக்ஸ்7, ஏ.எக்ஸ்7எல் என மொத்தம் 9 விதமான வேரியண்ட்களில் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று, டாடா மோட்டார்ஸின் நெக்ஸான் மற்றும் கியா சொனெட் கார்களும் பல்வேறு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகின்றன.
ஆனால், பிரெஸ்ஸா மற்றும் வென்யூ கார்களில் அதிகளவில் வேரியண்ட்கள் வழங்கப்படுவதில்லை. புதிய எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மேனுவல் ஆப்ஷனில் ரூ.7.49 லட்சத்தில் இருந்தும், ஆட்டோமேட்டிக் ஆப்ஷனில் ரூ.9.99 லட்சத்தில் இருந்தும் துவங்குகின்றன. ஆனால், நெக்ஸானை மேனுவல் ஆப்ஷனில் வாங்க கிட்டத்தட்ட ரூ.65 ஆயிரம் அதிகமாக செலவு செய்ய வேண்டியதாக உள்ளது.

மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் விலைகள் மேனுவல் ஆப்ஷனில் ரூ.8.34 லட்சத்தில் இருந்தும், ஆட்டோமேட்டிக் ஆப்ஷனில் ரூ.11.1 லட்சத்தில் இருந்தும் துவங்குகின்றன. கொரியன்-ஸ்டைல் கார்களான ஹூண்டாய் வென்யூ மற்றும் கியா சொனெட் கார்களின் ஆரம்ப விலைகள் முறையே ரூ.7.94 லட்சம் மற்றும் ரூ.7.99 லட்சத்தில் இருந்து ஆரம்பமாகின்றன.
இவையாவும் பெட்ரோல் என்ஜின் உடன் இந்த கார்களின் விலைகளாகும். டீசல் என்ஜினில் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரின் ஆரம்ப விலை ரூ.9.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுவே, டாடா நெக்ஸானின் ஆரம்ப விலை ரூ.11.1 லட்சம் ஆகும். மாருதி சுஸுகி பிரெஸ்ஸா கார் டீசல் என்ஜின் ஆப்ஷனில் கிடைப்பதில்லை. ஹூண்டாய் வென்யூ டீசல் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.10.71 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன.

வென்யூ காரில் டீசல் என்ஜின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைப்பதில்லை. ஆனால், மேனுவல் & ஆட்டோமேட்டிக் என 2 ஆப்ஷன்களிலும் கியா சொனெட் கிடைக்கிறது. டீசல் என்ஜின் உடன் கியா சொனெட் மேனுவல் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.9.8 லட்சத்தில் இருந்தும், ஆட்டோமேட்டிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.13.1 லட்சத்தில் இருந்தும் துவங்குகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உண்மையை சொல்ல வேண்டுமென்றால், மற்ற கார்களுடன் ஒப்பிடுகையில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரின் விற்பனை பெரிய அளவில் இருந்ததில்லை. அதிலிலும் குறிப்பாக, கடந்த சில மாதங்களாக எக்ஸ்யூவி300 கார்கள் விற்பனை அதாள பாதாளத்திற்கு சென்றுவிட்டது. புதிய எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதால், இதன் பின்னராவது இந்த காரின் விற்பனை அதிகரிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications









