மஹிந்திரா காரை வாங்குகிற பணத்தில் இந்த டாடா காரை வாங்கலாம்! அளவில் இரண்டிற்கும் பெருசா எந்த வித்தியாசமும் இல்ல
மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ (Mahindra XUV 3XO) கார் சமீபத்தில் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. ஏற்கனவே விற்பனையில் இருந்த எக்ஸ்யூவி300 காரின் அடுத்த தலைமுறை மாடலாக எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ கார் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. மிகுந்த போட்டி மிகுந்த சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் பிரிவில் இந்த கார் விற்பனை செய்யப்பட உள்ளது.
விற்பனையில் இந்த மஹிந்திரா காருக்கு டாடா மோட்டார்ஸின் நெக்ஸான் நேரடி போட்டியாக விளங்குகிறது. டாடா நெக்ஸான் கார் கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஃபேஸ்லிஃப்ட்டிற்கு அப்கிரேட் செய்யப்பட்டு இருந்தது. இந்த இரு எஸ்யூவி கார்களுக்கு இடையேயான ஒற்றுமை & வேற்றுமைகளை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

விலை: மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ கார் ஆனது எம்.எக்ஸ்1, எம்.எக்ஸ்2, எம்.எக்ஸ்2 புரோ, எம்.எக்ஸ்3, எம்.எக்ஸ்3 புரோ, ஏ.எக்ஸ்5, ஏ.எக்ஸ்5 எல், ஏ.எக்ஸ்7 மற்றும் ஏ.எக்ஸ்7 எல் என மொத்தம் 9 விதமான வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.7.49 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன.
மறுப்பக்கம், நெக்ஸான் காரை ஸ்மார்ட், ப்யூர், கிரியேட்டிவ் மற்றும் ஃபியர்லெஸ் என மொத்தம் 5 விதமான வேரியண்ட்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்கிறது. இதில் ஸ்மார்ட் வேரியண்ட்டில் மட்டும் ஸ்மார்ட் (ஆப்ஷ்னல்), ஸ்மார்ட்+ மற்றும் ஸ்மார்ட்+ எஸ் என 3 ட்ரிம் நிலைகள் அடங்குகின்றன. நெக்ஸான் காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது தற்சமயம் ரூ.7.99 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கிறது.
வசதிகள்: புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரின் எண்ட்ரீ-லெவல் எம்.எக்ஸ்1 வேரியண்ட்டில் ஹலோஜன் ஹெட்லேம்ப்கள், எல்இடி டி.ஆர்.எல்-கள், ORVM-களில் எல்இடி இண்டிகேட்டர்ஸ், எல்இடி டெயில்லேம்ப்கள், 6 ஏர்பேக்ஸ், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஐசோஃபிக்ஸ் மொண்ட்ஸ், 16-இன்ச் இரும்பு சக்கரங்கள், எலக்ட்ரிகல்லி அட்ஜெஸ்டபிள் ORVM-கள், என்ஜின் ஸ்டார்ட்/ ஸ்டாப் பொத்தான், ஸ்டேரிங் சக்கரத்தில் மோட்கள் உள்ளிட்டவை இடம்பெறுகின்றன.
டாடா நெக்ஸானின் எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்டான ஸ்மார்ட் (ஆப்ஷ்னல்)-இல் 6 ஏர்பேக்ஸ், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி டி.ஆர்.எல்-கள், எல்இடி டெயில்லேம்ப்கள், ஒளிரக்கூடிய லோகோ உடன் ட்வின்-ஸ்போக் ஸ்டேரிங் சக்கரம், முன் பவர் விண்டோஸ், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், ஐசோஃபிக்ஸ் மொண்ட்ஸ் மற்றும் டிரைவிங் மோட்கள் இடம்பெறுகின்றன.

பவர்டிரெயின்: புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ மற்றும் டாடா நெக்ஸான் என இரண்டிலும் 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. டாடா நெக்ஸானில் பொருத்தப்படும் 1.2 லிட்டர் என்ஜின் 3-சிலிண்டர்களை கொண்டதாகவும், அதிகப்பட்சமாக 118 பிஎச்பி மற்றும் 170 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலையும் வெளிப்படுத்தக்கூடியதாகவும் உள்ளது.
நெக்ஸானில் என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. மறுப்பக்கம், எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரில் எம் ஸ்டாலியன் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. இது, அதிகப்பட்சமாக 109 பிஎச்பி மற்றும் 200 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை காருக்கு வழங்கக்கூடியதாக உள்ளது. நெக்ஸானை போல் இல்லாமல், எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரில் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த ஆண்டு இறுதியில் நெக்ஸான் அப்டேட் செய்யப்பட்டதால், இவை இரண்டும் மாடர்ன் தோற்றத்திலான கார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. விலையை பொருத்தவரையில், எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரை காட்டிலும் டாடா நெக்ஸான் ரூ.50,000 அதிகமானதாக உள்ளது. அதேபோல், நெக்ஸானில் 5 கியர்களை கொண்ட மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே குறைந்த விலையில் கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications








