ஒரு மணி நேரத்தில் 50 ஆயிரம் பேர் புக் செய்த காரின் டெலிவரி தேதி வெளியானது! எப்ப வருது தெரியுமா?

மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய தனது எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ என்ற காருக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்த புக்கிங் காக அறிமுகப்படுத்தப்பட்ட 60 நிமிடங்களில் 50,000 பேர் இந்த காரை புக் செய்து இருந்தார்கள். இந்நிலையில் இந்த காரின் டெலிவரி குறித்த தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்யூவி 300 என்ற காரை அப்டேட் செய்து எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ என்ற பெயரில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தியது. இந்த காரை அறிமுகப்படுத்தும் போது இந்த காருக்கான புக்கிங் மற்றும் துவங்கி இருந்தது. இந்நிலையில் இந்த காருக்கான புக்கிங் துவங்கப்பட்ட 60 நிமிடங்களில் சுமார் 50,000 பேர் இந்த காரை புக் செய்திருந்தார்கள். இது இந்த காருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைப்பதாக கூறப்பட்டு வந்தது.

mahindra xuv 3xo delivery date

இந்நிலையில் இந்த காரை புக் செய்தவர்களுக்கான டெலிவரி குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி இந்த கார் மொத்தம் 9 விதமான வேரியன்ட்களில் விற்பனைக்கு வருகிறது. எம்எக்ஸ்1, எம்எக்ஸ்2, எம்எக்ஸ்2 ப்ரோ, எம்எக்ஸ்3, எம்எக்ஸ்3 ப்ரோ, ஏஎக்ஸ்5, ஏஎக்ஸ்5 லக்சரி, ஏஎக்ஸ் 7 மற்றும் ஏஎக்ஸ்7 லக்ஸரி ஆகிய வேரியன்ட்கள் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்ட சில வேரியன்ட்கள் மட்டுமே முதலில் விற்பனைக்கு வருகின்றன.

அதன்படி ஏஎக்ஸ்5, ஏஎக்ஸ்5 எல், எம்எக்ஸ்3, எம்எக்ஸ்3 ப்ரோ ஆகிய வேரியன்ட்களின் டெலிவரி வரும் 26 ஆம் தேதி முதல் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஏஎக்ஸ்7 மற்றும் ஏஎக்ஸ்7 எல் டெலிவரி அடுத்த மாத இறுதி அல்லது ஜூலை மாதம் முதல் வாரத்தில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்எக்ஸ் 1, எம்எக்ஸ்2, எம்எக்ஸ்2 ப்ரோ ஆகிய வேரியன்ட்களின் டெலிவரி ஜூன் மாதம் மத்தியில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

mahindra xuv 3xo delivery date

இன்ஜின் ஆப்ஷன்களை பொறுத்தவரை 1.2 லிட்டர் பெட்ரோல், 1.2 லிட்டர் டிஐ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் விற்பனைக்கு வருகின்றன. இதில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனை பொருத்தவரை 115 பிஎஸ் பவரையும், 200 என்னும் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

1.2 லிட்டர் டிஐ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனை பொறுத்த வரை 130 பிஎஸ் பவரையும் 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. டீசல் இன்ஜின் ஆப்ஷனை பொருத்தவரை 117 பிஎஸ் பவரையும் 300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

mahindra xuv 3xo delivery date

இந்த இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களிலும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் உள்ளன. செக்மெண்டிலேயே முதன்முறையாக பானரோாமிக் சன்ரூஃப் பொருத்தப்பட்ட காராக இது தான் இருக்கிறது. மேலும் பெரிய பூட் வசதியும் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு விதமான அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. போட்டி நிறுவனங்களுக்கு சமமாக இந்த காரிலும் ஏகப்பட்ட தொழில்நுட்ப அம்சங்கள் உட்பகுத்தப்பட்டுள்ளது.

அதன்படி இந்த காரில் 10.25 இன்ச் ஸ்கிரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இது ஒயர்லெஸ் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆகிய தொழில்நுட்பங்களை சப்போர்ட் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதுபோக 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ருமெண்ட் கிளஸ்டரும் வழங்கப்பட்டுள்ளது. இது எக்ஸ்யூவி 400 காரில் உள்ள அதே டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் தான்.

இதுபோக இந்த காரில் 360 டிகிரி கேமரா சிஸ்டம், 7ஸ்பீக்கர் கொண்ட ஹார்மோன் கார்டன் ஆடியோ சிஸ்டம் மற்றும் மூன்று வகையான டிரைவ் மோடுகள் உள்ளன. இந்த காரில் மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காரில் உள்ள அதே இஎஸ்பி தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரின் பின்பக்கம் சீட்டுகள் 60க்கு40 என பிரிக்கப்பட்டுள்ளன. இந்த காரில் செக்மெண்டிலேயே முதல் முறையாக லெவல்2 அடாஸ் தொழிற்நுட்பம் பொருத்தப்பட்ட காராக இது தான் இருக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி 3 எக்ஸ் ஒ காரை பொருத்தவரை டாடா நெக்ஸான், மாருதி சுஸூகி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, நிஸான் மேக்னைட், ரெனால்ட் கைகர், மாருதி சுஸூகி ஃபிராங்க்ஸ், டாடா பஞ்ச், ஹூண்டாய் எக்ஸ்டர் ஆகிய கார்களுக்கு போட்டியாக களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்க்கெட்டில் இந்த செக்மெண்டில் அதிக எண்ணிக்கையிலான கார்கள் இருக்கின்றன. இருந்தாலும் இந்த செக்மெண்டில் விற்பனை பெரிய அளவில் இருப்பதால் இந்த காரும் விற்பனையாகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனம் இந்திய நிறுவனம் என்பதால் இந்திய மக்கள் மத்தியில் இந்த நிறுவனத்திற்கு தனி மவுசு இருக்கிறது. இதுபோக இந்த நிறுவனம் தயாரிக்கும் கார்கள் எல்லாம் தரமான கார்களாக இருப்பதால், மக்கள் பலர் இந்த நிறுவனங்களின் கார்களை விரும்பி வாங்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால் மார்க்கெட்டில் மஹிந்திரா நிறுவனம் நல்ல விற்பனையை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, May 23, 2024, 11:08 [IST]
English summary
Mahindra xuv 3xo deliveries to begin may 26 in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X