முதல் நாளே 1500 பேருக்கு டெலிவரி! இந்த காரை வாங்க எவ்வளவு நாள் காத்திருக்கனும் தெரியுமா?
மஹிந்திரா நிறுவனம் தயாரித்த எஸ்யூவி 3எக்ஸ்ஓ என்ற எஸ்யூவி காரின் டெலிவரி என்று துவங்கிய நிலையில், முதல் நாளே 1500 கார்களுக்கு மேல் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. இந்த காரை 50,000 பேர் புக் செய்த நிலையில், இந்த காருக்கு மக்கள் மத்தியில் நல்ல மவுசு அதிகரித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மஹிந்திரா நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ என்ற எஸ்யூவி காரை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. இந்த காரை மஹிந்திரா நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வந்த எக்ஸ்யூவி 300 காரின் அப்டேட்டட் வெர்ஷனாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று இந்த காருக்கான டெலிவரி துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஏற்கனவே இந்த காரை 50 ஆயிரத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் புக் செய்திருந்தார்கள். டெலிவரி துவங்கிய முதல் நாளே 1500 கார்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளன. இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்ட அன்றே 50,000 பேர் இந்த காரை புக் செய்திருந்தார்கள்.
மார்க்கெட்டில் ஏற்கனவே விற்பனையாகி வரும் டாடா நெக்ஸான் மற்றும் மாருதி சுஸூகி பிரெஸ்ஸா ஆகிய கார்களுக்கு போட்டியாக இந்த கார் களமிறங்கியுள்ளது. மஹிந்திரா நிறுவனம் இந்த எஸ்யூவி 3எக்ஸ்ஓ காரில் மொத்தம் 9 விதமான வேரியன்ட்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. ரூபாய் 7.49 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மஹிந்திரா நிறுவனம் இன்று இந்த கார்களின் அதிகாரப்பூர்வமான டெலிவரி துவங்கினாலும், இதன் பேஸ் வேரியன்ட் மற்றும் டாப் வேரியன்ட் கார்களின் டெலிவரி இன்னும் துவங்கப்படவில்லை. எம்1, எம்எக்ஸ்2, எம்எக்ஸ்2 ப்ரோ, ஏஎக்ஸ்7, ஏஎக்ஸ்7 எல் ஆகிய வேரியன்ட் கார்களை புக் செய்தவர்கள் ஜூன் மாதம் வரை இந்த காரின் டெலிவரிக்காக காத்திருக்க வேண்டிய சூழ்நிலை தற்போது நிலவுகிறது.
அதேநேரம் இந்த காரின் ஏஎக்ஸ் 5, ஏஎக்ஸ்5எல், எம்எக்ஸ்3, எம்எக்ஸ்3 ப்ரோ ஆகிய வேரியண்ட் கார்களை புக் செய்தவர்களுக்கான டெலிவரி தற்போது துவங்கியுள்ளது. நமக்கு கிடைத்துள்ள தகவலின் படி ஏஎக்ஸ் 5 மற்றும் ஏஎக்ஸ்5எல் ஆகிய வேரியன்ட்களுக்கு நல்ல புக்கிங் வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மற்ற வேரியன்ட்களுக்கு பெரிய அளவில் புக்கிங் இல்லை.

மேலும் இந்த கார்களுக்கு வந்த புக்கிங்கை பொருத்தவரை ஐந்து கார்கள் புக் செய்யப்பட்டது என்றால் அதில் மூன்று கார்கள் பெட்ரோல் வேரியன்ட் கார்களாகவே புக் செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள இன்ஜினை பொருத்தவரை 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜின் ஒரு ஆப்ஷன் ஆகவும், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றொரு ஆப்ஷனாகவும் வழங்கப்படுகிறது.
இந்த இன்ஜின் பவரை பொறுத்தவரை ஒரு இன்ஜின் 110 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாகவும், மற்றொரு இன்ஜின் நோக்கி 29 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இது 200 என்எம் மற்றும் 230 என்எம் ஆகிய டார்க் திறன்களை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதுபோக 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷனும் இதில் பொருத்தப்பட்டுள்ளது.
மஹிந்திரா நிறுவனம் முடிந்த அளவுக்கு இந்த காருக்கான காத்திருப்பு காலத்தை குறைவாக வைத்திருக்கவே விரும்புகிறது. இந்நிறுவனம் ஏற்கனவே 10,000 கார்களை தயாரித்து விற்பனைக்கு ரெடியாக வைத்துள்ளது. இந்த கார்களின் டெலிவரி தான் தற்போது துவங்கியுள்ளது இதுபோக இந்நிறுவனம் மாதம் 9000 கார்களை தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்நிறுவனத்தின் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ள தகவல் என்பது மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரின் காத்திருப்பு காலம் என்பது போட்டி நிறுவனங்களின் காரின் காத்திருப்பு காலங்களை விட குறைவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் பலர் இந்த காரை விரும்பி வாங்கி வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சாலையில் இந்த கார்களை பார்க்க துவங்கியதும் இதன் புக்கிங் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications









