மாருதி மார்க்கெட்டை அடியோடு சரிக்க போகும் காரின் விலை இவ்ளோதானா! இனி ரோடு முழுக்க இதுதான் ஓட போகுது!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வந்த கார்களில் ஒன்று மஹிந்திரா எக்ஸ்யூவி300 (Mahindra XUV300). இதன் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) வெர்ஷன், மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO) என்ற பெயரில் வெகு சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த புதிய மாடலில் மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்பட்டுள்ளன. அவை 2 டர்போ பெட்ரோல் (Turbo Petrol) மற்றும் 1 டீசல் (Diesel) இன்ஜின்கள் ஆகும். மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரில் வழங்கப்பட்டுள்ள 2 டர்போ பெட்ரோல் இன்ஜின்களுமே 1.2 லிட்டர் யூனிட்கள்தான். அவற்றின் பவர் அவுட்புட் மட்டும் வெவ்வேறாக இருக்கிறது. அதாவது ஒரு டர்போ பெட்ரோல் இன்ஜின் 109 பிஹெச்பி பவர் மற்றும் 200 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையிலும், மற்றொரு டர்போ பெட்ரோல் இன்ஜின் 129 பிஹெச்பி பவர் மற்றும் 230 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையிலும் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

Mahindra XUV 3XO

அதே நேரத்தில் டீசல் இன்ஜின் ஆனது, 1.5 லிட்டர் யூனிட் ஆகும். இதன் பவர் அவுட்புட் 115 பிஹெச்பி/300 என்எம் ஆகும். டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஏஎம்டி மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்டர் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் (Gear Box Options) கொடுக்கப்பட்டுள்ளன.

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் மஹிந்திரா நிறுவனத்தின் மற்ற கார்களை போலவே, எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரில் அதிநவீன வசதிகளுக்கும் (Features) பஞ்சமில்லை. இதில், 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்றவை மிகவும் முக்கியமானவை ஆகும்.

Mahindra XUV 3XO Interior Design

இவை தவிர அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems), வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்ட்டிவிட்டி, பனரோமிக் சன்ரூஃப் மற்றும் ஹார்மன் கார்டன் 7 ஸ்பீக்கர் மியூசிக் சிஸ்டம் போன்ற வசதிகளும், மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த கார், 8 சிங்கிள் டோன் மற்றும் 8 ட்யூயல் டோன் என மொத்தம் 16 கலர் ஆப்ஷன்களில் (Colour Options) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரின் ஆரம்ப விலை வெறும் 7.49 லட்ச ரூபாய் மட்டுமே.

அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 15.49 லட்ச ரூபாயாக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் (Ex-showroom Price) விலை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விலைக்கு மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ கார் மிகவும் சிறப்பான ஒரு தயாரிப்பாக கருதப்படுகிறது.

எனவே மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரை வாங்க வாடிக்கையாளர்கள் பலரும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காருக்கு சமீபத்தில் முன்பதிவுகள் (Bookings) தொடங்கப்பட்டன. முன்பதிவுகள் தொடங்கப்பட்ட வெறும் 1 மணி நேரத்தில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரை புக்கிங் செய்து விட்டனர்.

எனவே மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ கார் விற்பனையில் சாதனை படைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த சூழலில் முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரை டெலிவரி (Delivery) செய்யும் பணிகள் நாளை (மே 26) முதல் தொடங்கப்படவுள்ளன. எனவே நாளை முதல் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரை நாம் சாலைகளில் பார்க்க முடியும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரின் வருகை, கியா சொனெட் (Kia Sonet), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), டாடா நெக்ஸான் (Tata Nexon) மற்றும் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) போன்ற சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கு விற்பனையில் மிக கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தும் என்பது எங்கள் கருத்து.

More from DriveSpark

Article Published On: Saturday, May 25, 2024, 15:21 [IST]
English summary
Mahindra xuv 3xo delivery from tomorrow all details inside
மேலும்... #mahindra #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+