பெட்ரோல் காரை வாங்கவே பெரிய க்யூ நிக்குது! இதுல இவி வேற வரப்போகுதாம்! விலையும் ரொம்ப கம்மி

மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்யூவி 300 காரை அப்டேட் செய்து தற்போது மஹிந்திரா 3எக்ஸ்ஓ என்ற பெயரில் விற்பனை செய்து வருகிறது. இந்த கார் அறிமுகமானது முதல் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. இந்த கார் மஹிந்திரா நிறுவனம் எதிர்பார்த்ததை விட அதிக எண்ணிக்கையில் புக்கிங் ஆகி வருகிறது. இந்நிலையில் மஹிந்திரா நிறுவனம் இந்த காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் உருவாக்க தற்போது முடிவு செய்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை இங்கே காணலாம் வாருங்கள்.

மஹிந்திரா நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் தனது எக்ஸ்யூவி 300 என்ற காரை அப்டேட் செய்து எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ என்ற பெயரில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த அப்டேட்டில் ஏகப்பட்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தற்போது உள்ள இளைஞர்களை ஈர்க்கும் வகையில் இதன் வடிவமைப்பு முதல் பிற அம்சங்கள் உட்பட அனைத்து விஷயங்களும் மாற்றப்பட்டு இந்த கார் முற்றிலும் புதிய கார் போன்ற தோற்றத்தில் விற்பனைக்கு அறிமுகமானது.

mahindra xuv 3xo ev

அறிமுகமானது முதல் மஹிந்திரா நிறுவனமே எதிர்பார்க்காத அளவிற்கு அதிக எண்ணிக்கையிலான புக்கிங் குவிந்தது. இதனால் கடந்த மே மாதமே பத்தாயிரத்திற்கும் அதிகமான கார்கள் விற்பனையாகின. மேலும் ஏகப்பட்ட நபர்கள் இந்த காரை புக் செய்துவிட்டு டெலிவரிக்காக காத்திருக்கிறார்கள். இந்த கார் அறிமுகமான போதே மார்க்கெட்டில் மிகப்பெரிய ஹிட்டாகியுள்ளது தற்போது தெளிவாக தெரிகிறது.

இந்நிலையில் மஹிந்திரா நிறுவனம் இந்த காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை உருவாக்க தற்போது முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான வேலைகள் எல்லாம் ஏற்கனவே மஹிந்திரா நிறுவனத்தின் தரப்பில் இருந்து துவங்கி விட்டதாகவும் தெரிகிறது. வரும் நவம்பர் மாதம் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ எலெக்ட்ரிக் வெர்ஷன் காரின் தயாரிப்பு துவங்கும் என்ற எதிர்பார்ப்பு மார்க்கெட்டில் ஏற்பட்டுள்ளது.

mahindra xuv 3xo ev

மஹிந்திரா நிறுவனம் இதுவரை எந்த தகவலையும் இது குறித்து தெரிவிக்கவில்லை. ஆனால் நமக்கு கிடைத்த தகவலின் படி மஹிந்திரா நிறுவனம் இந்த காரை s240 என்ற கோடு பெயரில் தற்போது தயாரிப்புக்காக பணிகளை துவங்கி உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம்.

இந்த கார் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வரும் பட்சத்தில் மகேந்திரா எக்ஸ்யூவி 400 காருக்கும் கீழ் உள்ள பொசிஷனல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் அறிமுகத்திற்கு பின்னர் இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதால் தற்போதைய மாதம் 1500 முதல் 1800 கார்கள் வரை தயாரிக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது.

mahindra xuv 3xo ev

மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ எலெக்ட்ரிக் வெர்ஷன் காரின் வடிவமைப்பை பொறுத்தவரை அதன் கம்ப்யூட்டர் இன்ஜின் வெர்ஷன் காரின் வடிவமைப்புகள் பெரும்பாலும் அப்படியேதான் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆங்காங்கே எலெக்ட்ரிக் கார் என்பதற்காக சில ஹைலைட் அம்சங்கள் மட்டும் இடம் பெற வாய்ப்புகள் இருக்கிறது.

இது காரின் லைட்டுகள் எல்லாம் எல்இடி லைட்டுகளாக பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோக சிறிய சிறிய அப்டேட்டுகள் இடம் பெற அதிகமான வாய்ப்புகள் உள்ளது. இந்த காரில் உள்ள எரிபொருள் நிரப்பும் இடம் சார்ஜிங் பாயிண்டாக மாற்ற திட்டமிடப்படலாம் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. இதுபோக இதன் பெட்ரோல் இன்ஜின் வெர்ஷன் காரில் இருக்கும் எலெக்ட்ரிக் வெர்ஷன் காருக்கும் வித்தியாசம் தெரிவதற்காக சில கலர் மாற்றங்களும் இடம்பெற வாய்ப்புகள் இருக்கிறது.

இந்த மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ எலெக்ட்ரிக் வெர்ஷன் காரில் 34.5 கிலோ வாட் ஹவர் பேட்டரி செட்டப் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் வெர்ஷன் காரைவிட குறைவான பவர் மற்றும் ரேஞ்சை வழங்கும் திறன் கொண்டதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. இது குறித்த விரிவான தகவல்களை மஹிந்திரா நிறுவனம் தான் வெளியிட வேண்டும்.

இந்த காரின் விலை குறித்த எதிர்பார்ப்புகளை பொருத்தவரை ரூ15-17 லட்சம் வரை விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. தற்போது விற்பனையாகி வரும் 3எக்ஸ்ஓ கார் எஸ்யூவி400 இவி காரை விட இந்த காரின் விலை குறைவாக தான் இருக்கும் என எதிர்பார்க்கலாம். நவம்பர் மாதம் இந்த காரின் தயாரிப்பு துவங்கும் நிலையில் டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் இதை விற்பனைக்காக அதிகாரப்பூர்வமாக அறிமுகமாக வாய்ப்புகள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனத்தின் எஸ்யூவி 300 கார் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று சிறப்பாக விற்பனையாகி வரும் நிலையில் இதன் எலெக்ட்ரிக் வெர்ஷன் அறிமுகமானால் நிச்சயம் இது மார்க்கெட்டில் நல்ல வரவேற்பை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எலெக்ட்ரிக் கார்களை வாங்க வேண்டும் இது ஒரு நல்ல சாய்ஸாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Monday, July 8, 2024, 12:18 [IST]
English summary
Mahindra xuv 3xo ev likely to start production in november 2024
மேலும்... #mahindra #india #electric vehicles
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X