மஹிந்திராவின் இந்த காரை ஒருத்தரு மட்டுமே வாங்கியிருக்காங்க! அப்படி இந்த கார் மேல என்ன கோபம்?

மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் எஸ்யூவி செக்மெண்டில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்தியாவின் மஹிந்திரா நிறுவனத்தின் எஸ்யூவி கார்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில் வெளிநாட்டில் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லை. இதனால் மிக குறைவான அளவிலான கார்கள் மட்டுமே ஏற்றுமதியாகியுள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்திய வாகன தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் பிரபலமான நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் தயாரிக்கும் தயாரிப்புகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்தியாவில் இந்த நிறுவனத்தின் வாகனங்கள் எல்லாம் சிறப்பாக விற்பனையாகி வருகின்றன. தொடர்ந்து நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய வாகனங்கள் கூட மக்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது.

mahindra xuv 3xo Export

இது எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வகையில் மஹிந்திரா நிறுவனம் மிக மோசமாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளை வெளிநாட்டில் உள்ள மக்கள் பலர் விரும்பி வாங்குவதில்லை. இதனால் மிக குறைவான எண்ணிக்கையில் மட்டுமே வாகனங்கள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதியாகியுள்ளன.

மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ என்ற வாகனத்திற்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருந்தாலும், வெளிநாட்டில் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு இல்லை. கடந்த ஜூலை மாதம் வெறும் ஒரு வாகனம் மட்டுமே ஏற்றுமதியாகியுள்ளது. இதேபோல நிறுவனத்தின் எலெக்ட்ரிக் காரான எக்ஸ்யூவி 400 கார் வெறும் ஒரு வாகனம் மட்டுமே ஏற்றுமதியாகியுள்ளது.

mahindra xuv 3xo Export

இது என்னவோ மஹிந்திரா நிறுவனத்தின் இந்த இரண்டு வாகனங்களுக்கு மட்டும்தான் மவுசு இல்லை என்று நினைத்து விடக்கூடாது. மஹிந்திராவின் மற்ற வாகனங்களும் மிக குறைவான எண்ணிக்கையிலேயே ஏற்றுமதியாகி உள்ளன. மஹிந்திரா எக்ஸ்யூவி 300 காரைப் பொறுத்தவரை 8 வாகனங்கள் ஏற்றுமதியாகியுள்ளது. பொலேரோ காரை பொறுத்தவரை 10 வாகனங்களும், ஸ்கார்பியோ காரை பொறுத்தவரை 25 வாகனங்களும் ஏற்றுமதியாகியுள்ளன. இருப்பதிலேயே அதிகமாக எக்ஸ்யூவி 700 காரை பொருத்தவரை 344 வாகனங்கள் ஏற்றுமதியாகி உள்ளன.

ஏற்றுமதி விவகாரத்தில் மஹிந்திரா நிறுவனம் ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்திற்கும் குறைவான எண்ணிக்கையிலேயே வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது. இதற்கு பல்வேறு விதமான காரணங்கள் இருக்கின்றன. மஹிந்திரா நிறுவனம் இந்தியா தவிர மற்ற நாடுகளில் பல்வேறு விதமான பிராண்டுகளுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதன்படி அந்த பிராண்டுகளுக்கு போட்டியாக இந்நிறுவனம் தனது தயாரிப்புகளையே களம் இறக்க யோசனை செய்து வருகிறது. இதனால் இந்தியாவில் தயாரிக்கப்படும் வாகனங்களை அந்நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய தயக்கம் காட்டி வருகிறது.

mahindra xuv 3xo Export

இதனால் இந்தியாவில் விற்பனையாகும் இந்த வாகனங்கள் குறித்து நன்கு அறிந்த வெகு சில மக்கள் மட்டுமே மஹிந்திராநிறுவனத்தின் காரை இந்தியாவில் புக் செய்து வெளிநாட்டில் இறக்குமதி செய்து பயன்படுத்தி வருகிறார்கள். மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கப்படும் வாகனங்களை மற்ற நிறுவனங்கள் போல் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்தால் தான் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி பெரிய அளவில் இருக்கும்.

மஹிந்திரா நிறுவனத்தின் சமீபத்திய காரான எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ என்ற கார் தான் தற்போது மக்கள் மத்தியில் மிகப்பெரிய பேசு பொருளாக இருக்கிறது. இந்த கார் அந்நிறுவனம் விற்பனை செய்து வந்த எஸ்யூவி 300 காரின் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷனாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் ரூபாய் 7.49 லட்சம் முதல் ரூபாய் 15.49 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது

இந்தியாவில் போட்டி நிறுவனங்களுக்கு இணையாக பல்வேறு புதிய தயாரிப்புகளை நிறுவனம் தயாரித்த அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது இதனால் பலர் மஹிந்திரா நிறுவனத்தின் காரை விரும்பி வாங்கி வருகிறார்கள். எதிர்காலத்தில் இந்தியாவின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் வாகன விற்பனை எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கும் வாகனங்களை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் பட்சத்தில் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் பொருளாதார வளர்ச்சி ஏற்படும். இது இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான தேவையாக இருக்கிறது. இதை புரிந்து கொண்டு அந்நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்களை வெளிநாட்டில் பிரபலப்படுத்தி விற்பனை செய்ய முயற்சி செய்ய வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 28, 2024, 23:25 [IST]
English summary
Mahindra xuv 3xo export only 1 unit in july 2024
மேலும்... #mahindra #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X