டாடா, மாருதி கார்களில் தேடினாலும் கிடைக்காது... இந்த மஹிந்திரா காரை எல்லாரும் புக் செய்வதற்கு காரணம் இதுதான்!!
மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ (Mahindra XUV 3XO), கடந்த 2024 மே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய சப்-4 மீட்டர் எஸ்யூவி கார் ஆகும். அதாவது, இந்த காரின் நீளம் 4 மீட்டர்களுக்கும் குறைவாகும். முன்பு விற்பனையில் இருந்த மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரின் அடுத்த தலைமுறை மாடலாக எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ அறிமுகம் செய்யப்பட்டது. டாடா மோட்டார்ஸில் பணியாற்றிய கார் டிசைனர் பிரதாப் போஸ் மஹிந்திராவுக்கு மாறிய பின்னர் அறிமுகம் செய்த முதல் கார் இதுவாகும். இதன் காரணமாகவே, இந்த கார் கொஞ்சம் ஸ்பெஷல் ஆனதாக பார்க்கப்படுகிறது.
மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காருக்கு விற்பனையில் டாடா நெக்ஸான், ஹூண்டாய் வென்யூ, மாருதி சுஸுகி பிரெஸ்ஸா என பல பிரபலமான சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் போட்டியாக உள்ளன. இன்னும் சொல்லப்போனால், சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் மார்க்கெட் பலத்த போட்டி மிகுந்ததாக உள்ளது. இருப்பினும், மற்ற போட்டி கார்களில் வழங்கப்படாத சில அம்சங்கள் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரில் வழங்கப்படுகின்றன.

ட்யூயல்-ஸோண் க்ளைமேட் கண்ட்ரோல்: மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரில் ட்யூயல்-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இதன் மூலம், டிரைவர் மற்றும் முன் இருக்கை பயணி வெவ்வேறு விதமான ஏசி காற்றை பெறலாம். விலையுயர்ந்த எஸ்யூவி கார்களில் மட்டுமே வழங்கப்பட்டு வந்த இந்த வசதி ஆனது எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஒ காரை தவிர்த்து வேறெந்த சப்-காம்பெக்ட் எஸ்யூவி காரிலும் கொடுக்கப்படுவதில்லை.
எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக்: இந்த மஹிந்திரா காரில் ஆட்டோ-ஹோல்ட் உடன் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் கொடுக்கப்படுகிறது. காரை பார்க் செய்யும்போது இந்த பிரேக் அவசியமானதாக இருக்கும். ஒரு பொத்தான் (அ) ஸ்விட்ச்சை அழுத்துவதன் மூலம் காரை நிறுத்த முடியும் என்பதால், ஹேண்ட் பிரேக்கை உபயோகப்படுத்த அவசியம் இருக்காது.

ஆட்டோ-ஹோல்ட் வசதி உடன் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் கொடுக்கப்படுவதால், பிரேக்கை ரிலீஸ் செய்த பின்பும் கார் நகராது. கார் ஓட்டுவதை எளியதாக்கும் இந்த அம்சம் ஹூண்டாய் கிரெட்டா, டக்ஸன் போன்ற விலைமிக்க எஸ்யூவி கார்களில்தான் வழங்கப்பட்டு வந்தன. இந்த வசதியை எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரில் மஹிந்திரா அறிமுகம் செய்துள்ளது.
பனோராமிக் சன்ரூஃப்: கார்களில் சன்ரூஃப் இன்றைய காலங்களில் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரில் பிரீமியம் தரத்திலான பனோராமிக் சன்ரூஃப் வழங்கப்படுகிறது. மற்ற வகை சன்ரூஃப்களை காட்டிலும் பனோராமிக் சன்ரூஃப் ஆனது அளவில் பெரியதாகும். இந்த வகையில், எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரின் மேற்கூரையின் பெரும்பான்மையான பகுதிகளை பனோராமிக் சன்ரூஃப் ஆக்கிரமிக்கிறது.

அடாஸ் (ADAS): சன்ரூஃப்-ஐ போன்று இன்றைய கால கார்களில் அடாஸ் வழக்கமான ஒன்றாக மாறி வருகிறது. எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரில் அடாஸ் மூலமாக சாலையில் ஒரே பாதையை தொடர்வதற்கான உதவி, ஆட்டோமேட்டிக் எமர்ஜென்சி பிரேக்கிங், டிராஃபிக் சிக்னலை கார் அடையாளம் காணும் வசதி, ஆட்டோமேட்டிக் ஹை பீம் அசிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் உள்பட ஏகப்பட்ட வசதிகளை பெறலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார் டிசைனர் பிரதாப் போஸ் வடிவமைத்த டாடா நெக்ஸான் மற்றும் பஞ்ச் கார்கள் மார்க்கெட்டில் பெரிய வெற்றி பெற்றுள்ளன. அந்த வரிசையில், மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரும் வரும் மாதங்களில் அமோக வரவேற்பை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப இந்த மாடர்ன் எஸ்யூவி காரில் பல்வேறு அதிநவீன வசதிகளை மஹிந்திரா நிறுவனம் வழங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications









