மஹிந்திரா களமிறக்கிய புது காரின் விலை இவ்ளோதானா! அதான் ஒரு மாசத்துக்கு 20 ஆயிரம் பேர் புக் பண்றாங்க!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்த கார்களில் ஒன்று மஹிந்திரா எக்ஸ்யூவி300 (Mahindra XUV300). இதன் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல், கடந்த ஏப்ரல் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் மஹிந்திரா எக்ஸ்யூவி300 என்ற பெயரில் இந்த கார் களமிறங்கவில்லை. அதற்கு மாறாக மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO) என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, இந்த கார் களமிறக்கப்பட்டது. தற்போதைய நிலையில் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரின் ஆரம்ப விலை 7.49 லட்ச ரூபாயாக இருந்து வருகிறது.

அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 15.49 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். உண்மையில் வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ கருதப்படுகிறது. எனவே இந்த காரை வாங்க பலரும் போட்டி போட்டு கொண்டுள்ளனர்.

Mahindra XUV 3XO

தற்போதைய நிலையிலேயே இன்னும் 55 ஆயிரம் பேருக்கு மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரை டெலிவரி செய்ய வேண்டியுள்ளது. அவ்வளவு பேர் இந்த காரை முன்பதிவு செய்து வைத்துள்ளனர். நிலைமை இப்படி இருக்கும்போது, இந்த காருக்கு இன்னும் முன்பதிவுகள் குவிந்து கொண்டே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரை ஒவ்வொரு மாதமும் சுமார் 20 ஆயிரம் பேர் புதிதாக முன்பதிவு செய்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் புதிதாக 20 ஆயிரம் முன்பதிவுகள் என்பது உண்மையிலேயே சாதாரண விஷயம் அல்ல. மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காருக்கு, வாடிக்கையாளர்கள் மத்தியில் எவ்வளவு பெரிய வரவேற்பு உள்ளது? என்பதை இது எடுத்து காட்டுகிறது.

Mahindra XUV 3XO Rear View

மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரில், 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், லெவல் 2 அடாஸ், பனரோமிக் சன்ரூஃப், 360 டிகிரி கேமரா மற்றும் ஹார்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம் என ஏராளமான வசதிகள் வழங்கப்படுகின்றன.

செயல்திறனை பொறுத்தவரையில், இரண்டு 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் ஒரு 1.5 லிட்டர் டீசல் என மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பை பொறுத்தவரை 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் மற்றும் இபிடி உடன் ஏபிஎஸ் என ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

எனவே பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் வழங்க கூடிய வாடிக்கையாளர்களும், மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரை தேர்வு செய்து வருகின்றனர். அதிக முன்பதிவுகள் குவிந்து கொண்டே இருப்பதால், வரும் மாதங்களில் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ கார், மிகப்பெரிய விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் டாடா நெக்ஸான் (Tata Nexon), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), கியா சொனெட் (Kia Sonet) மற்றும் மாருதி பிரெஸ்ஸா (Maruti Brezza) போன்ற கார்களுக்கு எல்லாம், மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, August 22, 2024, 23:56 [IST]
English summary
Mahindra xuv 3xo gets 20000 fresh bookings every month
மேலும்... #mahindra #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+