இந்த 5 அம்சங்கள் டாடா நெக்ஸான் கார்ல கிடையாது! ஆனா மஹிந்திரா 3எக்ஸ்ஓ கார்ல இருக்குது!
மஹிந்திரா நிறுவனத்தின் எஸ்யூவி 3எக்ஸ்ஓ என்ற சப்-காம்பேக்ட் எஸ்யூவி கார் இந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டு புக்கிங் துவங்கியது. தற்போது இந்த காரின் குறிப்பிட்ட வேரியன்ட்களின் டெலிவரியும் நடந்து வருகிறது. இரண்டு நாளில் 2500 கார்களுக்கு மேல் டெலிவரி செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து இந்த காரின் புக்கிங் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் இந்த கார் மார்க்கெட்டில் நேரடியாக டாடா நெக்ஸான் என்ற காருடன் போட்டி போடுகிறது. மார்க்கெட்டில் உள்ள டாடா நெக்ஸான் காருக்கும் இந்த காருக்கும் என்னென்ன வித்தியாசங்கள் இருக்கிறது? என்ற விரிவான விபரங்களை தான் இங்கே காண போகிறோம்.
மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ கார் சமீபத்தில் தான் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் மஹிந்திரா நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வந்த எக்ஸ்யூவி 300 காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் வெளிப்புறமும்,உட்புறமும் ஏகப்பட்ட மாற்றங்கள் செய்யப்பட்டு இந்த கார் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இந்த கார் மார்க்கெட்டில் உள்ள டாடா நெக்ஸான் காருக்கு போட்டியாக விற்பனையாகி வருகிறது.

இதன் போட்டி நிறுவனங்களில் விற்பனையாகும் கார்களை விட இதில் கூடுதல் அம்சங்கள் மற்றும் பல்வேறு வசதிகள் இருக்கும்படி வடிவமைத்துள்ளார்கள். அதன்படி டாடா நெக்ஸான் காரை விட இந்த காரில் என்னென்ன கூடுதல் அம்சங்கள் இருக்கிறது என்ற ஐந்து விஷயங்களை தான் காண போகிறோம்.
பானரோமிக் சன்ரூஃப்: இந்தியாவில் சன்ரூஃப் அம்சம் என்பது பிரபலமாகி வருகிறது. இதனால் மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரில் பானரோமிக் சன் ரூஃப் ஆப்ஷனை வழங்கி உள்ளது. செக்மெண்டிலேயே முதலாக இந்த காரில் தான் இந்த அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் காருக்குள் நல்ல காற்று மற்றும் வெளிப்புற சூழலை அனுபவிக்கும் ஃபீலிங் கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. டாடா நெக்ஸான் காரில் சிங்கிள் பேன் சன்ரூஃப் மட்டுமே வழங்கப்படுகிறது.

லெவல் 2 அடாஸ்: மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரில் பாதுகாப்பு அம்சத்தை அதிகரிப்பதற்காக தொழில்நுட்பத்தை பொருத்தியுள்ளது. இதற்கு முன்னர் இந்த தொழில்நுட்பம் காஸ்ட்லியான கார்களில் மட்டுமே பொருத்தப்படும் ஒரு தொழில்நுட்பமாக இருந்தது. இந்த தொழில்நுட்பம் இருப்பதால் சில மோசமான சூழ்நிலைகளிலும் இந்த கார் விபத்தில் சிக்குவது தவிர்க்கப்படும்.
இந்த காரில் உள்ள அடாஸ் தொழிற்நுட்பத்தில் பிளைன்ட் ஸ்பாட் மானிட்டரிங், லேன் கீப் அசிஸ்ட், முன்பக்க கொலுஷன் வார்னிங், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் ஆட்டோமேட்டிக் எமர்ஜென்சி பிரேக்கிங் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. இந்த தொழில்நுட்பம் தற்போது விற்பனையாகும் டாடா நெக்ஸான் காரில் இல்லை.

டூயல் ஸோன் கிளைமேட் கண்ட்ரோல்: மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரில் டூயல் சவுண்ட் கிளைமேட் கண்ட்ரோல் இருக்கிறது. இதனால் டிரைவர் மற்றும் முன்பக்க பயணி அவரவர்களுக்கு தேவையான டெம்பரேச்சரை வைத்துக் கொள்ளலாம். ஒருவர் குளிராகவும் ஒருவர் குளிர் குறைவாகவும் வைத்துக்கொண்டாலும் தனித்தனியான கூலிங் ஆப்ஷன் கிடைக்கும். நீண்ட தூர பயணத்திற்கு இது ஏற்றதாக இருக்கும்.
இந்தியா போன்ற கடும் வெயில் கொண்ட கிளைமேட் கண்டிஷனிற்க்கு இது மிக முக்கியமான அம்சம் தான். இந்த காரின் டாப் வேரியண்ட்டை வாங்கினால் இந்த டூயல்ஸோம் கிளைமேட் கண்ட்ரோல் செல்போன் ஆப் மூலமே செயல்படும் ஆப்ஷனில் இருக்கிறது. டாடா நெக்ஸா காரில் சிங்கிள் ஸோன் கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம் மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டீரிங் மோடு மற்றும் பெரிய வீல்கள்: மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஒ காரில் ஸ்டீரிங் மோடுகளை தேர்வு செய்யும் ஆப்ஷன் டிரைவருக்கு வழங்கப்பட்டுள்ளது.சிட்டி பயணத்தில் லைட்டாக இருக்கும் வகையிலும் ஹைவேயில் பயணம் செய்யும் போது சற்று வெயிட்டான ஃபீலிங்கில் ஸ்டேரிங் இருக்கும் வகையிலும் நாம் தேர்வு செய்து கொள்ள முடியும். அதேபோல இந்த காரில் 17 இன்ச் கொண்ட அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளது.
எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக்: மஹிந்திரா எக்ஸ்யுவி 3எக்ஸ்ஓ காரில் எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் ஆட்டோ ஹோல்டு பங்க்ஷன் உடன் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு பட்டனை அழுத்தினாலே கார் அசையாமல் அங்கே நிற்கும். இதன் மூலம் சென்டர் கன்சோல் பகுதியில் அதிக இடத்தை சேமிக்க முடிகிறது. அதே நேரம் டாடா நெக்ஸான் காரில் இன்னும் மேனுவல் பார்க்கிங் பிரேக் லிவர் தான் பயன்படுத்தப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனம் இந்த 3எக்ஸ்ஓ காரை வெளியிடும்போது போட்டி நிறுவனங்களின் காரை விட சிறந்த காராக இதை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறு புதிய அம்சங்களை கொண்டு வந்துள்ளது. இதனால் மக்கள் அதிகம் விரும்பும் டாடா நெக்ஸான் காரைவிட இதில் ஏகப்பட்ட அம்சங்கள் புதிதாக உள்ளன. இதனால் மக்களின் கவனம் எல்லாம் தற்போது இந்த கார் பக்கம் திரும்பி உள்ளது என்று சொல்லலாம்.


Click it and Unblock the Notifications









