ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!

மக்கள் மத்தியில் மஹிந்திரா நிறுவனத்தின் எஸ்யூவி 3எக்ஸ்ஓ காரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த கார் இன்னும் ஆறு நாட்களில் அதாவது ஏப்ரல் 29ம் தேதி விற்பனைக்கு வருகிறது. முக்கியமாக இந்த காரில் பெரிய சன்ரூஃப் இடம்பெறவுள்ளது. இந்த காரில் என்னென்ன விஷயங்களை எல்லாம் எதிர்பார்க்கலாம் என்ற விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

மஹிந்திரா நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்னே தனது எஸ்யூவி 300 காரை பேஸ்ஃலிப்ட் செய்து வெளியிடப் போவதாக சில டீசர்களை வெளியிட்டது. அதன்படி இந்த காரின் வெளிப்புறமும் உட்புறமும் ஏகப்பட்ட அப்டேட்கள் செய்து இந்த கார் விற்பனைக்கு வரப்போவதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்த காரில் பெரிய சன்ரூஃப் போன்ற அமைக்கப்பட்டுள்ளதாக தற்போது வெளியிட்டுள்ள டீசர் மூலம் தெரிவித்துள்ளது.

mahindra xuv 3xO

மஹிந்திரா நிறுவனம் இந்த எக்ஸ்யூவி300 காரை முற்றிலுமாக மறுவடிவமைப்பு செய்துள்ளது என்றே சொல்ல வேண்டும். பார்ப்பதற்கு மட்டுமல்ல இந்த காரில் உள்ள அம்சங்கள் ஏன் காரின் பெயரைக் கூட மாற்றயுள்ளது. புதிதாக அப்டேட் செய்யப்பட்ட எக்ஸ்யூவி300 கார் எஸ்யூவி 3எக்ஸ்ஓ என்ற பெயரில் விற்பனைக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக அப்டேட் செய்யப்பட்டுள்ள கார் தற்போது இந்தியாவில் பல்வேறு இடங்களில் சோதனை செய்து வருவதை நம்மால் காண முடிகிறது.

இந்த காரில் உள்ள பல்வேறு அம்சங்கள் குறித்து அவ்வப்போது இந்நிறுவனம் டீசர் மூலம் வெளியிட்டு வருகிறது. இந்த காரின் வெளிப்புறத்தில் முக்கியமாக புதிய கிரில் கொடுக்கப்பட்டுள்ள இது போக மறு வடிவமைப்பு செய்யப்பட்ட எல்இடி டேடைம் ரன்னிங் லைட்டுகள் L-ஐ தலைகீழாக போட்ட வடிவிலான மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஹெட்லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரின் பின்பக்கம் சதுர வடிவிலான டெயில் லைட் வழங்கப்பட்டுள்ளது. இது எல்இடி டைனமிக் லுக் லைட்டாக வழங்கப்பட்டுள்ளது.

mahindra xuv 3xO

மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஒ காரின் உட்பகுதியிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முக்கியமாக பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. சவுண்ட் சிஸ்டமும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. பிரிமியமான அப்ஹோல்சரி கொண்டு இந்த காரின் உட்புறம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் வெளிப்பக்கம் மல்டிஸ்போக் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த காரில் உள்ள இன்ஜினை பொருத்தவரை தற்போது விற்பனையில் இருக்கும் இன்ஜின் போக கூடுதலாக 1.2 லிட்டர் டிஜிடிஐ பெட்ரோல் வெர்ஷன் இன்ஜின் ஒரு ஆப்ஷனாக சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இணைய அதிகமான வாய்ப்புகள் உள்ளன. இந்த கார் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் விற்பனைக்கு அறிமுகமாக உள்ளது.

mahindra xuv 3xO

மார்க்கெட்டில் ஏற்கனவே சிறப்பாக விற்பனையாகி வரும் டாடா நெக்ஸான் மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ போன்ற கார்களுக்கு போட்டியாக இந்த காரும் விற்பனையில் களமிறங்க உள்ளது. இந்த கார் விற்பனையில் களமிறங்கினால் நிச்சயம் போட்டியாளர்களின் தயாரிப்புகளுக்கு மத்தியில் இந்த காரும் மக்கள் கவனத்தை ஈர்த்து நல்ல விற்பனையை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

மஹிந்திரா நிறுவனத்தின் தயாரிப்புகள் எல்லாம் தரமான தயாரிப்புகளாக இருக்கும் என மக்கள் மத்தியில் பெயர் பெற்றுள்ளது. இந்நிலையில் மஹிந்திரா நிறுவனம் தனது கார்களின் ஒட்டுமொத்த வடிவமைப்பையே மாற்றி வருகிறது. முக்கியமாக எலெக்ட்ரிக் வாகனங்களை அதிகம் விற்பனை செய்ய திட்டமிட்டு வருகிறது. இதனால் வரிசையாக எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதுதான் அந்நிறுவனம் தற்போது கவனம் செலுத்தி வருகிறது.

mahindra xuv 3xO

இந்நிறுவனம் இந்த எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரின் மூலம் தனது புதிய வடிவமைப்பை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. மஹிந்திரா நிறுவனத்தின் வடிவமைப்பு தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும். தூரத்தில் கார் வரும்போது இது மஹிந்திரா நிறுவனத்தின் கார் தான் என தெரியும். அந்த அளவிற்கு வடிவமைப்பு செய்யப்படும். அப்படியாக தான் இந்த காரும் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனம் இன்னும் 6 நாட்களில் வெளியீடு உள்ள இந்த மகேந்திரா 3எக்ஸ்ஓ கார் குறித்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவுக்கு பேச்சு எழுந்துள்ளது. இந்த கார் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனால் இந்த காரின் அறிமுகத்திற்காக பலர் காத்திருக்கிறார்கள். நிச்சயம் இந்த காரின் அறிமுகம் நடந்த பிறகு மக்கள் மத்தியில் மிகப்பெரிய புரட்சியை ஏற்பட வாய்ப்புள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 23, 2024, 15:53 [IST]
English summary
Mahindra xuv 3xo largest sunroof indian compact suv
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X