இந்தியாவில் கல்லா கட்டியது போதாது என்று வெளிநாட்டிற்கு செல்லும் மஹிந்திரா கார் - விலை நம்ம ஊரை விட அதிகம்!!

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் மாடர்ன் காராக கடந்த மே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கார், எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ (XUV 3XO) ஆகும். முன்பு விற்பனையில் இருந்த மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரின் நெக்ஸ்ட் ஜென்ரேஷன் காராக எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ அறிமுகம் செய்யப்பட்டது. டாடா நெக்ஸான், டாடா பஞ்ச் உள்ளிட்ட வெற்றிக்கரமான கார்களை வடிவமைத்த டிசைனர் பிரதாப் போஸ் வடிவமைத்த இந்த மஹிந்திரா காரின் டிசைன் மக்களை கவர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்த மஹிந்திரா கார் இந்தியாவை தாண்டி வெளிநாட்டில் விற்பனைக்கு தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எந்த நாட்டில் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பதையும், வெளிநாட்டில் அறிமுகம் செய்யப்படும் அளவிற்கு இந்த காரில் அப்படி என்ன உள்ளது? என்பதையும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம். பொருளாதாரத்திலும் சரி, கால சூழ்நிலைகளிலும் இந்தியாவிற்கு இணையான நாடு என்றால் அது தென்னாப்பிரிக்கா ஆகும்.

mahindra xuv3xo launched in southafrica

மஹிந்திரா எக்ஸ்யூவி3எக்ஸ்.ஓ கார் எந்த வெளிநாட்டில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது இப்போது உங்களுக்கு தெரிந்திருக்கும் நினைக்கிறேன். ஆம்... அது தென்னாப்பிரிக்கா தான். ஆப்பிரிக்க கண்டத்தின் இறுதிமுனையில் உள்ள தென்னாப்பிரிக்கா நாட்டிற்கு அதிக எண்ணிக்கையில் வாகனங்களை அனுப்பும் நாடுகளுள் ஒன்று நம் இந்தியா ஆகும். சுஸுகியில் இருந்து ரெனால்ட், நிஸான் நிறுவனங்கள் வரையில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கார்களை தென்னாப்பிரிக்காவுக்கு அனுப்புகின்றன.

ஏனெனில், இந்தியாவில் கார்களை உற்பத்தி செய்வது செலவு குறைந்ததாக உள்ளது. அதேநேரம் மஹிந்திரா போன்ற சில கார் நிறுவனங்கள் இந்தியாவில் கார் பாகங்களை உற்பத்தி செய்து அவற்றை தென்னாப்பிரிக்காவில் இறக்குமதி செய்து முழு காராக அசெம்பிள் செய்து விற்பனை செய்கின்றன. மஹிந்திரா நிறுவனம் இதற்காகவே தென்னாப்பிரிக்காவின் டர்பனில் ஒரு கார் அசெம்பிள் தொழிற்சாலையை கொண்டுள்ளது.

mahindra xuv3xo launched in southafrica

இவ்வாறு தான் இனி எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரும் தென்னாப்பிரிக்காவில் அசெம்பிள் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது. வெளிப்பக்க தோற்றத்தை பொறுத்தவரையில், இந்தியாவின் எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காருக்கும், தென்னாப்பிரிக்க எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காருக்கும் இடையே பெரியதாக எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால், காருக்குள் சிறு சிறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதற்கேற்ப, காரின் விலையையும் தென்னாப்பிரிக்காவில் மஹிந்திரா சற்று அதிகமாக நிர்ணயித்துள்ளது.

இந்தியாவை போன்று தென்னாப்பிரிக்காவிலும் எம்.எக்ஸ்2 வேரியண்ட்டில் இருந்து ஏ.எக்ஸ்7எல் வரையில் பல்வேறு விதமான வேரியண்ட்களில் எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ கார் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த மஹிந்திரா காரின் விலை அந்த நாட்டில் 254,999 ராண்டில் இருந்து 404,999 வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்தியா ரூபாயில் இவற்றின் மதிப்பு ரூ.12.15 லட்சத்தில் இருந்து ரூ.19.30 லட்சம் வரையில் ஆகும்.

mahindra xuv3xo launched in southafrica

அதேநேரம், இந்தியாவில் எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.7.49 லட்சத்தில் இருந்து ரூ.15.49 லட்சம் வரையில் உள்ளன. இத்தனைக்கும் தென்னாபிரிக்காவில் எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரில் டிஜிடிஐ டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனை மஹிந்திரா வழங்கவில்லை. அப்படியிருந்தும் ரூ.19.30 லட்சம் வரையில் இந்த காரின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6-ஸ்பீடு ஐசின் ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்டர் கியர்பாக்ஸ் உடன் தென்னாப்பிரிக்காவில் எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரை வாங்க முடியும். தென்னாப்பிரிக்காவில் இந்த மஹிந்திரா காரின் உட்பகுதி முழுவதுமாக கருப்பு நிறத்திலும், ஆங்காங்கே சில்வர் நிறமும் தென்படுகின்றன. அதுவே, இந்தியாவில் இந்த காரின் கேபின் இரு நிறங்களில் வழங்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரை நம்பர் ஒன் சப்-4 மீட்டர் எஸ்யூவி காராக கொண்டுவர வேண்டும் என மஹிந்திரா விருப்பம் கொண்டுள்ளது. ஏற்கனவே, மஹிந்திரா எக்ஸ்யூவி700 மற்றும் ஸ்கார்பியோ-என் உள்ளிட்ட கார்கள் தென்னாப்பிரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரின் அறிமுகமும் நாம் எதிர்பார்த்த ஒன்றே.

More from DriveSpark

Article Published On: Friday, September 20, 2024, 23:44 [IST]
English summary
Mahindra xuv 3xo launched in south africa check price features all details here
மேலும்... #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X